Friday, May 11, 2018

தட்டு ஏந்தும் அர்ச்சகர் கூட ஏன் தொட்டுப் பேசுவதில்லை

கேள்வி: அர்ச்சகர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதாகச் சொன்னீர்கள். ஆனால், அவர்களும் கோயிலில் தட்டு ஏந்தும் நிலையில் தானே இருக்கிறார்கள்?
பதில்:
தட்டு ஏந்தும் அர்ச்சகர் கூட ஏன் தொட்டுப் பேசுவதில்லை என்பது தான் சாதி. சாதி வேறு. வறுமை வேறு. உங்கள் உழைப்பால் வறுமையை வெல்லலாம். ஆனால், தலைமுறைத் தலைமுறையாக சாதி உங்களைத் துரத்தும். நீங்கள் முதல்வர் ஆனாலும் சரி. அமெரிக்காவுக்குப் போனாலும் சரி.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். தட்டு ஏந்துவது pocket money மட்டுமே.
* எங்கள் ஊர்க் கோயில் பேரில் உள்ள நிலங்களுக்கான குத்தகைத் தொகையின் ஒரு பகுதி அர்ச்சகர் குடும்பங்களுக்குச் செல்லும். இதெல்லாம் வீரத் தமிழ் மன்னர்கள் அவர்களுக்கு விட்டுச் சென்ற சொத்து.
* பொதுவாகவே, எல்லா அர்ச்சகர்களுக்கும் கோயில் அருகேயே hot real estateல் வீடு இருக்கும்.
* இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அர்ச்சகர்களுக்குச் சம்பளம் உண்டு.
* மொத்த கோயிலையும் உரிமை கொண்டாடும் சிதம்பரம் அர்ச்சகர்கள் போன்ற கதைகள் தனி.
இல்லை, இன்னும் ஏழ்மையான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உங்கள் வாதம் என்றால், இலாபம் இல்லாத இந்தத் தொழிலை ஏன் பார்க்கிறார்கள்? யாரும் குலத் தொழிலால் வஞ்சிக்கப்படக்கூடாது என்பது தான் திராவிடக் கொள்கை. எல்லா சாதி மக்களையும் அர்ச்சகர் ஆக விடுங்கள். உங்கள் பாரம் குறையும்.
எப்படி வசதி?

No comments: