Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (25)

#திராவிடம்அறிவோம் (25)

1934-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஏ.பி. பாத்ரோ இத்தோல்வியைப் பற்றிக் குறிப்பிடும் போது,  "இது காலத்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கை. கட்சியைக் கட்டாயமாக நேர்த்தியாகவும் தூய்மையாகவும் செய்வதன் மூலம் சாகசங்களை நிகழ்த்த முடியும்" என்றார்.
நீதிக்கட்சி தனது தோல்வியைத் தாங்கிக் கொண்டதுடன், அதை ஒரு அறைகூவலாகக் கட்சியின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சரும் கட்சியினுடைய தலைவருமான பொப்பிலி அரசருடைய வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கட்சியைப் பலப்படுத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. தந்தை பெரியார் இக்கூட்டத்தில் தமது 14 அம்ச திட்டத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

அதாவது, முக்கியமாக உள்ள பொது நிறுவனங்களையும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களையும் தேசிய மயமாக்குவது, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கட்டாய ஆரம்பக் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பொருளாதார நிர்வாகம், கூட்டுறவு கடன் வங்கிகள் மூலம் ஏழை விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற திட்டங்களைக் கூட்டத்தில் வற்புறுத்தினார்.

1935 - ஆம் ஆண்டு நவம்பரில் கூடிய நீதிக் கட்சியின் செயற்குழு தந்தை பெரியாரின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

No comments: