Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (33)

#திராவிடம்அறிவோம் (33)

சமூக நீதி பெற உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தி.மு.கழகம் பங்கேற்ற திரு.வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசால்தான் மாநில அளவில் இருந்த இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சியாகும்.

ஆனால் இது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஐம்பது சதவிகிதம் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமென்பதும், பின் தங்கியோரில் கிரீமிலேயர் எனும் வசதி பெற்றோர் என்று சொல்லப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாதென்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. அவை சமூக நீதிக்குப் புறம்பானவை. எனவே எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

- திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அறிக்கை (1996)

No comments: