Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (30)

#திராவிடம்அறிவோம் (30)

1909 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகப் பேரவையின் சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன்மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும் தான் அத்தீர்மானம். மாறாக சமற்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் பிற்பகுதி.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1926ல், இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாக கொண்டு வரப்படுகின்றது.

திராவிடம் தமிழுக்கு எதிரானது என்பது எவ்வளவு பொய்யான செய்தி ....!

No comments: