Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (27)

#திராவிடம்அறிவோம் (27)

பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனைகள் இன்று நேற்று எழுந்ததல்ல. 1893 லேயே வெளியான இரு நூல்கள் பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனைகள் குறித்துப் பேசின.

1. The Non-Brahmin Races and Indian Public Service. (பார்ப்பனர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும்)

2. The Ways and Means for the amelioration of Non-Brahmin races. (பார்ப்பனர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்)

என்னும் இரு ஆங்கில நூல்களே அவை.

நூற்றைம்பது ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். உண்மையில் இங்கே பார்ப்பனர்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது. இந்திய அரசுப் பணிகள்   அனைத்தும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்ற நிலைதான் இன்னமும் நீடித்து வருகிறது. இவைதான் முதல் புத்தகத்தின் சாரம்.

 அனைத்து அரசுப் பணிகளுமே பார்ப்பனர்களுக்கு என்ற நிலையை மாற்ற வேண்டும் என்றால் வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு புதிய இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது இரண்டாவது  புத்தகத்தின் சாரம்.

No comments: