Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (31)

#திராவிடம்அறிவோம் (31)

"தாய்மொழியில் பாடல்கள் இருந்தால் தான் பொருள் விளங்கி ரசிக்க முடியும்" என்பதால் தமிழர்களுக்குத் தமிழிசையின்பால் நாட்டம் வளர்ந்தது. இதனை அறிந்த பாடகர் சிலர் சிற்சில தமிழ்ப் பாடல்களைப் பாடினர். அந்தக் குற்றத்திற்காக அவர்களைத் தொடர்ந்து பாடுவதற்குப் பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர்.

சங்கீத சபாக்களின் கடிவாளம் அவர்களின் கைகளில்தான் இருந்தது. இசைத்துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கம்தான்.

எல்லாத் துறைகளிலும் தமிழர்களைச் சிறந்து விளங்கச் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கிட உழைத்த தந்தை பெரியார் தம் கவனத்தை இசைத்துறையின் பக்கம் திருப்பினார். 1930 இல் ஈரோட்டில் நடத்திய சுயமரியாதை இயக்க இரண்டாம் மாநில மாநாட்டில் ஓர் அங்கமாக தமிழிசை மாநாடு நடத்தினார். பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு இசைக்கல்வியும் பயிற்சியும் தரப்படவும், பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவும் தமிழ் மக்களைக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்.

No comments: