Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (29)

#திராவிடம்அறிவோம் (29)

திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி அவர்களின் மாமனார் - மாமியாரின் சுயமரியாதைத் திருமணத்தை 1934 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்தி வைத்தார்.

1953 இல் திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரான பின்னர், சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கத் தக்க சட்டத்தைக் கொண்டு வந்தார். 20-1-1968 முதல் நடைமுறைக்கு வந்தது அச்சட்டம்.

மதம் சார்ந்த சடங்குகள் அற்ற சமூகத் திருமணங்கள் இங்கிலாந்து நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகின்றன. தந்தை பெரியார் தொடங்கிய 80 ஆண்டுகளுக்குப் பின்னரே இங்கிலாந்தில்!

No comments: