#திராவிடம்அறிவோம் (34)
1942 – க்கு முன்னர் “ம – ள – ள – ஸ்ரீ” (இதனை மகாராஜ ராஜஸ்ரீ என்று படிக்க வேண்டும்) என்றே அரசு அலுவலகக் கடிதங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் சுருக்கமாக “ஸ்ரீ” என்று பயன்படுத்தினால் போதும் என்று 1942- ஆம் ஆண்டு சென்னை பொதுப்பணித்துறை ஆணை பிறப்பித்தது. மேலும், மூன்று வாரத்திற்குள் இது குறித்த கருத்தினை எழுதி அனுப்புமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ”திரு” என்பதே சரியான வழக்கு என்று நாவலர் ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசனார், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் கட்டுரை எழுதினர். “திரு” வைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நீதிக்கட்சியும் வலியுறுத்தியது.
இவ்வளவுக்குப் பின்னரும், “திரு” / “திருமதி” போன்ற சொற்களை அரசு பயன்படுத்தும் வண்ணம் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. தி. மு. க. தலைமையில் அரசு அமைந்த பின்னரே, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, “திரு” / “திருமதி” பயன்படுத்தப்பட்டது. “ஸ்ரீ” / “ஸ்ரீமதி” நீக்கப்பட்டது.
#திராவிடம் வளர்த்த தமிழ்

No comments:
Post a Comment