பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?
தெரியாத தமிழ் மக்களிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்!
1948ஆம் ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு வயது 72. முதுமைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் சொத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது.
மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொள்ள கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொள்ள முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத சிறுநீர் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார்.
எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொள்ளவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும். ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன். அதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து தாருங்கள். எங்கு கையொப்பம் இட வேண்டுமோ அங்கே கையொப்பம் இடுகிறேன். இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்று தன் வயிற்றில் கையை வைத்து தன் வலியை கட்டுபடுத்த முயன்று கொண்டே கட்டளை இடுகிறார் அந்த கிழவர்.
சட்டச் சிக்கல்கள்:
கிழவனின் உடல்நிலையை அறிந்த சட்ட ஆலோசகர்களோ தயக்கத்துடன், ஐயா! உங்கள் சொத்துக்கள் சட்டபடி உங்கள் வாரிசுகளுக்கே போகும். அதை நீங்கள் மாற்றி வேறு ஒருவருக்கு எழுதவேண்டுமானால் அதற்கு உங்கள் வாரிசின் சம்மதமும் கையொப்பமும் வேண்டும் என்ற சட்ட சரத்தை கூறுகிறார்கள்.
இளம் வயதில் தன் மனைவியை பறிகொடுத்த அந்த கிழவன், இறந்து பிறந்த குழந்தைகள் என தற்சமயம் வாரிசுகள் யாரும் இல்லை அவருக்கு. ஆதலால் தனது சொத்துக்கள் தன் சகோதரர் குடும்பத்தினருக்கு தான் சேரும் என்றனர் சட்ட ஆலோசகர்கள். உடனே தன் சகோதரரை நாடுகிறார் அவர். சகோதரரோ சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க உடன்படவில்லை.
யாருக்கு தான் அன்றைய கால மதிப்பில் பல கோடிகளை தானம் செய்ய மனம் வரும்.
மீண்டும் சட்ட ஆலோசகர்கள் கூட்டப்படுகிறார்கள். மாற்று வழிகளை ஆராய்கிறார்கள்.
திருமணமே தீர்வு:
72 வயது முதியவருக்கு இருந்த ஒரே வழி ஒரு வாரிசை உருவாக்க வேண்டும்! எப்படி என்பது தான் சிக்கல். குழந்தைகளையோ இல்லை பெரியவர்களையோ தத்து எடுத்து வாரிசு ஆக்க சட்டம் அனுமதிக்க வில்லை. அப்படியானால் ஒரே வழி திருமணம் மட்டுமே!
முடியாது என்கிறார் அவர்!. சரி திருமணம் தான் வழி என்றால் எப்படி 70 வயது முதியவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வர்?
அன்றைய காலத்தில் பெண்களுக்குகான திருமண வயதோ 13. எப்படி சாத்தியம். முடியாது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அந்த முதியவர்.
இதை முவதுமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் 32 வயது திருமணமாகாத பணிப்பெண் முன் வந்தார்.
சட்டத்திற்காக தானே திருமணம்:
சட்டத்திற்காக தானே திருமணம். எப்படியும் நான் இந்த முதியவருடன் முழு நேரமும் இருந்து பணியாற்றி வருகிறேன். முதியவரின் உடல்நிலை கருதியும் அவரின் நல்ல நோக்கத்திற்காகவும் இதை நானே செய்கிறேன் என்கிறார்.
சட்ட வல்லுநர்களோ இதை விட்டால் வழி இல்லை என்கிறார்கள். உடன் இருப்பவர்களில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தனது சொத்துக்கள் குடும்பத்தினருக்கு போவதில் உடன்பாடு இல்லை. உடல்நிலையோ அவர் கையில் இல்லை.
தீர்க்கமான சிந்தனைக்கு பின் இசைகிறார். 1949ஆம் ஆண்டுஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் அந்த திருமணம் நடக்கிறது. உடன்பாடு இல்லாதவர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தன் சமுதாயத்திற்காக எழுதி வைத்த நிம்மதியோடு தன் வயிற்றில் உண்டாகும் வலியை மறந்து பெருமூச்சு விடுகிறார் அந்த கிழவர்.
இவர் தாம் பெரியார்.

No comments:
Post a Comment