எம்.ஜி.ஆர். மேல் சபையை ஏன் ஒழித்தார்
வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் நிர்மலா தான் திவாலாகி விட்டதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து நீதிமன்றத்தில் அது நிலுவையிலிருந்தது. இது திமுகவுக்கு தெரியவந்து தேர்தல் அதிகாரியிடம் புகாராக போனது. மனுதாக்கல் நாள் முடிந்த பிறகு பட்டாதாரி ஆசிரியர் தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக திடுதிப்பென்று ஒரே நாளில் நிர்மலா கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசஸை வாபஸ் வாங்கினார். ஆனால் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த போது திவால் நோட்டீஸ் குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் போட்டியிட முடியாது என தேர்தல் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்தார். இது ஒரு காரணம்.
.
இன்னொன்று பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் திமுக கணிசமான வெற்றிகளை பெற்று மேலவை தலைவராக கலைஞர் வந்துவிடுவார் என்ற சூழல் ஏற்பட்டதாலும் மொத்தமாக கலைத்து விட்டார்.
.
மிக மிக முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உண்டு. 1982ல் கட்சியில் சேர்ந்து மளமளவென கட்சியில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த ஒருவருக்கு இணையாக அல்லது போட்டியாக நிர்மலாவை அரசியலில் இழுத்து விட நினைத்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவேயில்லை.
.
மேலவை கலைப்பினால் ரொம்ப பாதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் மறைந்த பெரியவர் ம.பொ.சி. அவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
.
சட்டமன்ற மேலவை இருந்த காலத்தில்தான் வாக்குகள் அடிப்படையில் சிறுபான்மையாக இருந்த சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் எச்.வி.ஹண்டே (துவக்கத்தில் மேலவை உறுப்பினராக நியமனமானார்), ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் ராகவானந்தம் போன்றவர்களும் போன்ற மூத்த கட்சியினரும் எம்.எல்.சியாக இருந்துதான் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக தொடர்ந்தனர்
கலைக்கபட்ட பின்னர் ஆர்எம்வீ திருநெல்வேலி இடைதேர்தலில் நிற்க வேண்டியிருந்தது
திமுக மீண்டும் மேலவை அமைக்க முயன்று அந்த மசோதா டெல்லியில் நிலுவையிலிருந்த போது மீண்டும் ஆட்சிக்கு வந்த "ஜெ" அதை திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் திரும்ப பெற்றுக்கொண்டார்
ஒரு சாராருக்கு மட்டும் எதுக்கு இரண்டு ஓட்டு என்ற தீர்க்கதரிசனமெல்லாம் வெண்ணிற ஆடை நிர்மலாவை வேட்பாளராக அறிவித்த போதும் எம்.ஜி.ஆருக்கு வரலை. நிர்மலாவுக்காக கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசை வாபஸ் வாங்கிய போதும் தோணலை. ஆனால் நிர்மலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகுதான் இந்த சீரிய சிந்தனை எம்.ஜி.ஆருக்கு தோன்றியது என்பது மட்டும் வரலாற்று உண்மை.

No comments:
Post a Comment