வால்மீகி இராமாயணத்தில் இராவணனுடைய தாய் வேதவதி தன் கணவர் குஷ்தவகா மாண்டதும் சிதையில் தானும் விழுந்து உயிர்விடுகிறாள்.
மகாபாரதத்தில் வாசுதேவன் என்பவர், இறந்ததும் தேவகி, சுபத்ரா, ரோகிணி, மதுரா. ஆகியோரும், கிருஷ்ணன் இறந்தபோது அவர் மனைவியர் ருக்மிணி, காந்தாரி, கைபியா, ஹேமாவதி, ஜாம்பவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து வீர சுவர்க்கம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்ததும் மனைவி பெருங்கோப்பெண்டு சிதையில் விழுந்து தற்கொலை செய்ததைப் புறநானூற்றின் 246-ஆம் பாடல் பகிர்கிறது.
சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவியர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.
.... பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!
என்கிறது புறநானூற்றின் 62-ஆம் பாடல்.
கொடும்பாளூர் குறுநிலவேந்தரான வீரசோழ இளங்கோவேளார் மாண்டபோது அவன் மனைவி கங்கமாதேவி கோயிலில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தான் பலியானதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. (கல்வெட்டுக் கலை நூல் சொ. சாந்தலிங்கம் பொ. இராஜேந் திரன் பக்கம் 159)
சோழ மண்டலத்தை ஆண்டு வந்த சுந்தர சோழன் மாண்டபோது அவனது காதல் மனைவி வானவன் மாதேவி சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினாள். (தெ.இ. கல்வெட்டு II) இவ்வாறு அவள் மாண்டபோது அவளது மகள் குந்தவை நாச்சியார் தஞ்சைப் பெரிய கோவிலில் வானவன் மாதேவிக்குச் சிலை எடுப்பித்து அணி கலன்களை வழங்கியதாகச் சோழர் கல்வெட்டு சொல்கிறது.
இவ்வாறு மாண்டோரின் நினைவாக நினைவுக் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகள் சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இதுபோலப் பல இடங்களில் பெண்கள் தீயில் புகுந்து உயிர் நீத்துச் சதியானதால் அவர் களுக்காக எடுக்கப்பட்ட கோயில்கள் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் என்று வழிபடப்பட்டு வருகின்றன.
ஏன்டா நாராவாய் நாராயணா
இந்தக் காலங்களில் இஸ்லாம் என்ற ஒரு மதம் தோன்றவேயில்லை என்பதை அனைவரும் அறிவர்.
எச்சப் பொறுக்கி பயலுகளுக்கு எதையாவது சொல்லி பிழைப்பு நடத்தணும்.
No comments:
Post a Comment