Sunday, May 26, 2019

தமிழக அரசியலில் எளிமையான அரசியல் தலைவர் யார்

இதோ RSS, மீண்டும் காமராஜர் புராணம் பாட ஆரம்பித்து விட்டனர்.
சரி,
தமிழக அரசியலில் எளிமையான அரசியல் தலைவர் யார்:
1. பெருந்தலைவர் காமராஜர்?
2. பேரறிஞர் அண்ணா?
காமராஜர் - ஒடுக்கப்பட்ட நாடார் சமூகம்.
அண்ணா- ஆதிக்க முதலியார் சமூகம்
காமராஜர்- 3ம் வகுப்பு வரை படித்தவர்.
அண்ணா- MA Honors
காமராஜர்- தமிழ் இலக்கிய புலமை இல்லை.
அண்ணா- தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- ஆங்கில புலமை இல்லை.
அண்ணா- ஆங்கிலத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- சட்ட நுண்ணறிவு, அதிகம் இல்லை.
அண்ணா- சட்ட நுண்ணறிவு உடையவர்.
காமராஜர்- திருமணமாகாதவர்.
அண்ணா- திருமணமானவர், மனைவி, இரண்டு பையன்கள் என்ற குடும்பம்.
காமராஜர்- அமைச்சரவையில், பஸ், மில், வங்கி, நில முதலாளிகள்.
அண்ணா- அமைச்சரவையில் எளிய மனிதர்கள்.
காமராஜர்- தியாகராயர் நகர், திருமலைப்பிள்ளை 60 அடி சாலையில் உள்ள பெரிய பங்களாவில் வசித்து வந்தார்.
அண்ணா- நுங்கம்பாக்கம், 20 அடி சாலையில் உள்ள சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.
காமராஜர்- இறந்த பொழுது, வங்கியில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. சில வேட்டி, சட்டைகள்.
அண்ணா- இறந்த பொழுது, சிறிது கடன். இரண்டு அழுக்கு வேட்டி, சட்டை, ஒரு பொடி டப்பா.
ஆதிக்க சாதியில் பிறந்த, தமிழ், ஆங்கில இலக்கிய புலமை உடைய ஒரு முதுகலை பட்டதாரி, எந்த ஒரு பகட்டோடும் இல்லாமல், எளிய, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, சிறிய ஓட்டு வீட்டில் வாழ்ந்து சிறிது கடனுடன் தனது வாழ்வை முடித்துக் கொண்ட அண்ணாவைப்பற்றி RSS ஊதுகுழல்களான துக்ளக், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி, தினமலர், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ் எல்லாம் எதிர்மறை பதிவுகளை மட்டுமே தங்களுடைய பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்துள்ளது.
ஆனால், காமராஜரை! மட்டுமே எளியவர் என்று போற்றி வந்தது. ஏன்!
யார் எளிமையானவர் என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன்!
இதுதான் RSS சூழ்ச்சி. இதனை அறியாமல், நம்மை நாமே இகழ்ந்து வருகிறோம்.

No comments: