ஈழத்தமிழர்களே ஏன் மலையகத் தமிழர்களை தீண்டத் தகாதவர்களாக வைத்துள்ளீர்கள்? இன்றும் அவர்களின் பிரச்சனைகளை கையில் எடுக்கவில்லை. மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கும் பொழுது ஈழத்தவர்கள் என்ன செய்தீர்கள்? வேடிக்கை பார்த்தீர்கள். என் இரத்த உறவு அவர்கள் என்று எத்தனை களப்போர் கண்டீர்கள். அவர்களின் பெண்கள் சூரையாடப் படும் போதும் அந்த சமூகமே கீழ்தரமாக நடத்தப் பட்ட போதும் உங்கள் சதையாடவில்லையே. அவர்கள் அழுக்குக் கைலியோடும் கிழிந்த புடவையோடும் கல்வி கிடைக்காது வனவிலங்குகள் போல் இலங்கையின் ஆதிக்க சக்திகளால் வன விலங்குகளாக தேயிலைத் தோட்டத்தில் வேலை வாங்கும் போது ஆங்கில கல்வி மேதாவிகளாக தலையில் ஒளி வட்டத்துடன் அந்த ஆதிக்கத்துடன் சேர்ந்து கொட்மடித்தவர்கள்தானே. இன்று உதை வாங்கியவுடன் மலையகத் தமிழர்கள் எங்கள் பகுதியிலும் வாழ்கின்றனர் என்பது ஒரு சப்பைக் கட்டு. தமிழர்கள் என்றால் தமிழன்தானே. ஒரே நாட்டில் மலையகத்தமிழர் மற்றும் இஸ்லாமியத் தமிழர் என்ற பிரிவு ஏன்? 3 லட்சம் மலையகத் தமிழர்கள் இரு நாட்டிலும் குடியுறிமையின்றி வாழ்கின்றனர். அவர்களின் விடிவுக்கு இந்த விக்னேஷ்வரன் கடந்த காலத்தில் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த இந்த விக்னேஷ்வரன் என்ன செய்தார்? பதவி சுகம் மட்டும் அனுபவித்தார். தென் ஆப்ரிக்காவில் உள்ள ஐ.நா. மனித உறிமை சபை ஆணையராக இருந்த நக்வி பிள்ளையின் இரத்தம் ஈழ மக்களுக்காக கொதித்து இன்று இலங்கை அரசு சர்வ தேச விசாரணைக்கு வித்திட்டார். ஆனால் தன் நாட்டிலேயே தன் கண் முன்னே அடக்கப் பட்டு அவலப் பட்ட தமிழனைப் பார்த்து கேலிதானே செய்தார்கள் ஈழவர்கள். இப்பொழுதும் கலைஞர் மீது குற்றம் சுமத்தித்தானே இந்தக் கோரிக்கையை வைக்கிறார் திருவாளர் விக்னேஷ்வரன். இப்படியிருக்க ஈழத்தவர்கள் திருந்தி விட்டார்கள் என்று எப்படி நம்புவது. சிலந்தி வலை விரித்தது தன் இரையை சிக்க வைக்கத்தான். இந்தியத் தமிழன் பார்ப்பனியத்தின் சித்து விளையாட்டை அறிந்தவர்கள். ஈழத்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு. இன்றும் ஒருவர் இலங்கையிலிருந்து வந்து கம்பனை உயர்த்திப் பிடிக்கிறான் என்று வருணாச்சிரமத்தை புனிதப் படுத்தி கதைத்துக் கொண்டுள்ளார்
No comments:
Post a Comment