முதலில் ஈழத்தவர்கள் மற்ற தமிழர்களை தமிழராக மதிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக இலங்கை மலையகத் தமிழர்களை கீழ் சாதி தீண்டத்தகாதவர்களாக வைத்துள்ளனர். கள்ளத்தோணி, வந்தேறி என்று எத்தனை ஏளனமாகப் பேசியவர்கள் இவர்கள். இலங்கை தமிழ் முகமதினரிடம் மதத்தின் அடிப்படையில் மல்லுக்கட்டியவர்கள் இவர்கள். இத்தனைக்குப் பின்னும் அந்த நிலை நீடிக்கிறது. வெளிநாடுகளில் பணி செய்யும் ஈழமக்கள் மற்ற நாடுகளிலிருந்து இவர்களுடன் பணியாற்றும் தமிழர்களை தமிழர்களாக எண்ணாது தங்கள் தலையைச் சுற்றி ஒளி வட்டம் அமைத்து யூதர்கள் போல் வாழ்கின்றனர். இதையெல்லாம் மறந்து விட்டு அடிவாங்கிய பின்பு நாங்களும் தமிழர்கள்தான் என்கின்றனர். இலங்கை ஒரு தனி நாடு. இந்தியா மற்றொறு பல மொழிக் குடும்பத்தினருக்காக அமைக்பட்ட நாடு. அதில் வட இந்தியர்கள் ஆதிக்கம் உள்ள நாடு. அதில் தமிழர்கள் மிகச் சிறுபான்மையினர். இங்குள்ள வடக்கத்திய பார்ப்பனிய பனியா ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி தமிழக உறிமைகளை மீட்க வேண்டிய நிலையில் போராடிக் கொண்டிருந்தார் கலைஞர். அவருக்கு எந்தக் காலத்திலும் ஜென்ம விரோதியாக எண்ணி அவர் மரணிக்கும் வரை அவரையும் அவர் இயக்கித்தினரையும் பழிவாங்கிக் கொண்டிருந்தது மைய அரசின் பார்ப்பன பனியா லாபி. 1976 இல் "அவர் பக்கத்து நட்பு நாடான இலங்கை பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக கருத்தியலை உருவாங்குகிறார்" என்பதும் அவர் ஆட்சிக் கலைப்பிற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப் பட்டது. பிறகு 1990 இல் ஈழ ஆதரவு நிலையை குற்றச் சாட்டாகக் கூறி அவர் ஆட்சி கலைக்கப் பட்டது. இப்படியே அவர் உங்களின் பெயரால் பழிவாங்கப் பட்டிருக்கும் போது, தமிழ் மண்ணில் ஈழத்தவர்கள் நடத்திய படு கொலைகள் எத்தனை. அத்தனை பழிகளையும் அவர் சுமந்தார். இதுதான் உங்கள் போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவு தேடும் லட்சணமா? கலைஞர் பல முறை , "தம்பிகளே நீங்கள் போராட வேண்டிய களம் ஈழம். தமிழ் நாட்டின் அரசியல் களமல்ல." என்று கூறியும் இங்கு தமிழகத்தை கொலைகளமாக்கினர் அந்த ஈழத் தான் தோன்றிகள். இந்த விடயத்தில் கலைஞரின் கையை முறித்துவிட்டு இப்பொழுதும் அவரை குற்றம் கூறி ஆதரவு கேட்பது உங்கள் அகம்பாவம் மாறவில்லை என்பதைத் தோலுரித்து காட்டுகிறது. கலைஞர் ஈழத்தமிழரை மட்டும் காப்பாற்ற முதல்வர ஆகவில்லை. இங்குள் தமிழகத்தின் நலனைக் கட்டிக் காக்கவே முதல்வர் ஆனவர். இந்தியா தேர்தலை வைத்து கட்டமைக்கப் பட்ட நாடு. தமிழகத்தில் வாழும் எல்லாதரப்பினர் நலனையும் பாதுகாக்க வேண்டிய கடமை முதன்மையானது. அந்தக் கடமைகளுக்கு முன்னுறிமை கொடுக்காது உங்களுக்காகவே தியாகம் செய்து கொண்டு இருக்க முடியாது. அப்படி அவர் இங்குள்ள தமிழர்களின் உறிமையைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு உங்கள் பின்னாலேயே அலைந்து அழிந்து போனால் அவர் பேசிய தமிழ் தேசியம் போலியானதாகி விடும். இப்பொழுது நீங்கள் விடுக்கும் அழைப்பே ஒரு துரோகமான கயமையாகக் கூட இருக்கலாம். தமிழகத்து தமிழர்கள் கலைஞரின் சாதனையால் நலத்துடன் மக்கள் நாயக உறிமைபெற்று வாழ்வது ஈழத்தவர்கள் பொறாமையுடன் தி.மு.க. இயக்கத்தை அழிக்க முயற்சிப்பது போல்தான் தெறிகிறது. அது கலைஞர் மேலுள்ள குற்றச் சாட்டிலிருந்தே அறியப் படுகிறது. இல்லை தமிழகத்தில் தோல்வியுற்ற வடக்கத்திய ஆதிக்க சக்தியான ப.ஜ.க. உங்களைப் பயன் படுத்தி விரித்த வலையாகவும் இருக்கலாம். காரணம் நீங்கள் நம்பகத் தன்மை அற்றவர்கள். ஆன்மீகத்தில் வள்ளலார் வெற்றி கொண்டுவிடக் கூடாது என்று பாம்பாக படமெடுத்து ஆடி, அவரை சிதம்பரம் பார்ப்பனருடன் கூட்டணி அமைத்து, சென்னை உயர்நீதி மன்றம் வரை அவரை விரட்டி அடித்த ஆருமுக நாவலரின் வாரிசுகள் அல்லவா நீங்கள்.கலைஞர் கூறினால் மற்றவர்கள் எல்லாம் கை கட்டி வாய்பொத்திக் கொள்வார்கள் என்று எண்ணி அவரைக் குற்றம் கூறுவது ஈழத்தவர்களுக்கே உரித்தான சைவ சித்தாந்த சாதிய வன்மம். ஆகவே இனி தி.மு.க. ஈழத்தவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தமிழ் நாட்டு தமிழர்களே வடக்கத்திய ஆதிக்க சக்தியிடம் சாதி மத மொழி ஆதிக்கத்துக்குள் அடை பட்டுக் கிடப்பதை மீட்பதற்குதான் முன்னுறிமை கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்கள்-சீமான் போன்றோர் டில்லியுடன் எப்பொழுதும் ஒட்டு மொத்த இந்து சாதிய ஆதிக்கத்தை நிருவ கை கோர்க்கலாம்.
No comments:
Post a Comment