Tuesday, May 28, 2019

தமிழ்தேசியம் பேசும் தம்பிகள் தலைவராக நினைப்பது நெடுமாறனை அவர் பற்றிய சிறுகுறிப்பு

தமிழ்தேசியம் பேசும் தம்பிகள் தலைவராக நினைப்பது நெடுமாறனை அவர் பற்றிய சிறுகுறிப்பு
கச்சதீவு தாரை வார்க்கும் போது தமிழககாங்கிரஸ் கட்சியின் மாநிலதலைவர்
கச்சதீவு கொடுக்ககூடாது என்று எதிர்கவும் இல்லை கச்சதீவை தாரை வார்த்ததிற்கு எதிராக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை
தமிழ்தேசியம் பேசும் நெடுமாறன் அன்று இந்திரா கொண்டுவந்த மிசாவை ஆதரித்தவர் அந்த மிசாகாலத்தில் அதற்கு எதிராக இருந்தவர்களை மகோரா தா.பாண்டியன் போன்றவர்களுடன் இணைந்து காட்டிகொடுத்தவர்
திமுக ஆட்சி கலைக்கபட்டவுடன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்றிய இந்திராவை எதிர்க்கவில்லை அப்போதைய தமிழக காங். தலைவராக இருந்த நெடுமாறன்
1980 ல் திமுக_காங் கூட்டணி உருவானதை அடுத்து எதிர்த்து பதவி விலகியவர் அவருக்கு குறிக்கோள் அன்றிலிருந்து இன்றுவரை திமுகஎதிர்ப்பு மட்டுமே பிரதானம்
இறுதி கட்டபோரின்போது தவறான வழிநடத்தலால் இன படுகொலைக்கு காரணமானவர் சமரசத்தில் ஈடுபடவேண்டாம் போரை நடத்துங்கள் பிஜேபி ஆட்சிவந்துவிடும் பார்த்து கொள்ளலாம் என்று தவறாக வழிநடத்தினார் நெடுமாறன்
இலங்கை பிரச்சினையில் தனது சுயலாபத்தையை விரும்பியவர் அதைத்தாண்டி தீர்வுஏற்பட தமிழகம் தாண்டி எந்த முயற்சியையும் எடுக்காதவர்
முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தை இடித்த தன்னை சிறையில் அடைத்த,விடுதலைபுலிகள் மீது வன்மத்தை விதைத்த ஜெ யை எதிர்க்கமாட்டார். மாறாக திமுகவை மட்டுமே குறை சொல்வதை பிழைப்பாய் வைத்திருக்கும் நெடுமாறன் எச்சத்தின் உச்சம்.
Ilangovank Dvk
இன்னுமொன்று ராஜ்வ்காந்தியின் படுகொலையின் காரணமாக இந்தியாவுக்கும்,புலிகளுக்குமான கதவு முழுமையாக மூடப்பட்டு விட்டது.
90களில் பிறந்த தலைமுறையினருக்கு வி.புலிகளாகட்டும்,இலங்கை பிரச்சினையாகட்டும் முழுவதுமாக எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் வரும் செய்திகளும்ககூட அதைப்பற்றி அறிந்தவர்கள்தான் ஆர்வமுடன் கவனிப்பர். மற்றவர்களுக்கு அதன் முன் வரலாறுகளில் எந்த ஆர்வமும் இருக்காது.
அந்த இறுதிப் போரின் போது பத்திரிக்கைகள் தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டதைப் போல தீடிரென புலிபாசத்துடன் (வேசம்) பக்கம்பக்கமாக கட்டுரைகள் வரைந்தன.தீடிரென ஈழ உணர்வு தூண்டிவிடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் தான் இனி கடைசி வாய்ப்பு என்பதைப்போல ஊதிப் பெருக்கப்பட்டது.
அத்துடன், ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு முன் நடந்த வரலாறுகள் கொஞ்சம் அலசப்படும்.அது எதுவும் இந்த விடயத்தில் நடக்காமல் மிகத்திறமையாக பார்த்துக் கொண்டனர் .பிராபகரனை துரோகி என எழுதிய பத்திரிக்கைகள் அதையெல்லாம் மறைத்துவிட்டு புதிய ஈழ பாசத்துடன் கண்ணீர் கதைகளை பரப்பினர்.
நான் இது எதையும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் தன் மகளைக்கூட காப்பாற்ற முடியாத கலைஞரால்,இலங்கை போரை நிருத்திவிட முடியும் என நம்பிக்கையை விதைக்கும் போக்கில் செய்திகளை திரித்தனர்.
எல்லாம் முடிந்தவுடன் துரோகி ராஜபக்ஷே இல்லை.. கருணாநிதி என முடித்தனர்.

No comments: