Tuesday, May 28, 2019

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

நந்தன் :
தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே.
சம்பூகன் :
பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள். ராமன் – ‘பிராமண’ தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான். இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி. தமிழில் கம்ப இராமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.
கர்ணன் :
மகாபாரதத்தில் வரும் கர்ணன் – கொடை வள்ளல். அரச குலத்தில் பிறந்து தேரோட்டி குலத்தில் வளர்ந்தவன். தான் ‘சூத்திரர்’ என்பது தெரிந்தால், பார்ப்பனர் பரசுராமன், தனக்கு போர் தொடர்பான சாத்திரங்களைக் கற்றுத் தர மாட்டார் என்பதால், உயர்குலத்தவன் என்று பொய் கூறி, கல்வி கற்கிறான். ஒரு நாள் பரசுராமன் கர்ணன் மடியில் படுத்து உறங்கினார். கர்ணனை மாட்டிவிட சூழ்ச்சி செய்த இந்திரன், வண்டாக மாற்று உருவம் கொண்டு கர்ணனின் தொடையைத் துளைக்கிறான். தொடையிலிருந்து குருதி கொட்டுகிறது. கர்ணன், தனது குருவின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்று, அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான். ஆனால், குருதி ஈரம், பரசுராமன் தூக்கத்தை கலைக்கிறது. விழித்து எழுந்த பரசுராமன், கர்ணனின் குரு பக்தியை நெஞ்சுரத்தைப் பாராட்டவில்லை. “நீ பிராமணன் அல்லன்; அதனால்தான் வண்டு துளைத்த பெருந் துன்பத்தைத் தாங்கியிருக்கிறாய். எனவே என்னிடம் பிராமணன் என்று பொய் சொல்லி நீ கற்ற போர்க்கலைகளை, அதைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் நீ மறந்து விடவேண்டும் என்று சபிக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த ‘சாபமே’ கர்ணனின் கடைசிக் கால சாவுக்கும் காரணமாகிறது. இது புராணம்தான். ஆனால், இதன் வழியாக பார்ப்பன வெறியும், அவர்களின் ‘சூத்திர’ வெறுப்பும் அம்பலமாகிறது.
ஏகலைவன் :
வேட்டுவ குலத்தைச் சார்ந்த (தாழ்ந்த சாதி – பழங்குடி) ஏகலைவன் – பார்ப்பனரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுத் தரக் கேட்டான். ‘நீ கீழ் சாதி கற்றுத் தர முடியாது’ என்று துரோணன் மறுக்கிறான். ஏகலைவன் துரோணன் போல ஒரு உருவத்தைச் செய்து, அதையே குருவாகக் கருதி, வில் வித்தையைக் கற்கிறான். ஒரு நாள், அந்த துரோணன் உருவத்தின்மீது நாய் சிறுநீர் கழித்தது. நெடுந் தொலைவிலிருந்து அதைப் பார்த்த ஏகலைவன், சீற்றமடைந்து மிக நுட்பமாக, குறி பார்த்து அம்பு வீசி, நாயைக் கொல்கிறான். இவ்வளவு திறமையாக அம்பு வீசிய ஏகலைவனைப் பாராட்டவில்லை துரோணன். என்னுடைய உருவத்தை வைத்துத் தானே, வில் வித்தையை கற்றுக் கொண்டாய். எனவே குருதட்சணையாக, கட்டை விரலை வெட்டி கொடு என்கிறான். ஏகலைவன் சிறிதும் தயக்கமின்றி கட்டை விரலை வெட்டித் தருகிறான். கட்டை விரலையே வெட்டிவிட்டால், வில்லை எய்த முடியாது.
– மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் அன்றைய பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எந்தக் கல்வியும் கற்கக் கூடாது என்று தடை விதித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
நவ நந்தர்கள் :

1) நந்தர்கள் சமண மதத்தினர் – வைதீகத்துக்கு எதிரிகள் – ஒரிசா தக்காணம் பகுதி வரை ஆட்சி செய்தனர். தலைநகர் பாடலிபுத்திரம் – இவர்கள் ஆட்சியின் புகழ், செல்வாக்குப் பற்றி சீன யாத்திரிகர் யுவான் சுவாங் மற்றும் பல நூல்கள் பேசுகின்றன. நந்தர்களின் செல்வச் செழிப்பு பற்றி அகநானூற்றிலும் பாடல் வருகிறது.

2) நந்தர்கள் – தாழ்ந்த குலத்தினர் – புராணங்கள் நந்தர்களை இழிகுலத்தினர், நாத்திகர்கள், கொடுங்கோலர்கள் என்று வசைபாடுகின்றன.

3) ஆட்சியின் முக்கிய பதவிகளில் – அமைச்சர் பதவிகளில் பார்ப்பனர்களைப் புறக்கணித்து, சமண அறிஞர்களையே நியமித்ததே, பார்ப்பனர் எதிர்ப்புக்குக் காரணம்.

4) “நந்தர்களின் கொடுங்கோன்மையிலிருந்து புனித சாஸ்திர நூல்களையும், ஆயுதங்கள் பற்றிய சாஸ்திரங்களையும், அவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாட்டினையும், எவன் முன் வந்து காப்பாற்றினானோ அவனால், (சாணக்கியன் எனும் கவுடல்யனால்) ‘அர்த்தசாஸ்திரம்’ எனும் இந்த நூல் எழுதப்பட்டது” என்று சாணக்கியன் (பார்ப்பான்) கூறியுள்ளான்.
சந்திரகுப்தன் சதி :

1) நந்தன் வம்சத்தின் கடைசி மன்னனான தனநந்தனின் படைத் தலைவன் சந்திரகுப்தன். இவன் நந்தர்களை ஒழித்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பினான். பார்ப்பனர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர்.
2) சதி முறியடிக்கப்பட்டது. சந்திரகுப்தன் நாடு கடத்தப்பட்டான்.
3) நந்தர்களின் அரண்மனையில் விருந்து ஒன்றில் முறை தவறி நடந்து கொண்ட சாணக்கியன் எனும் வைதீகப் பார்ப்பான், அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவமானத்தால் கோப மடைந்த சாணக்கியன், காடு நோக்கி ஓடினான்.
4) கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து பியாஸ் நதிக்கரையில் தங்கியிருந்த காலம் அது. காட்டுக்குள் இருந்த சந்திரகுப்தன், அலெக்சாண்டரை சந்தித்து, நந்தர்கள் ஆட்சி செய்த மகத நாட்டின் மீது படை எடுக்குமாறு வலியுறுத்தினான். அடிக்கடி அலெக்சாண்டரை வற்புறுத்தினான்.
5) அலெக்சாண்டருக்கு இதில் உடன்பாடு இல்லை. தொடர்ந்து நச்சரித்து வந்ததும், நந்தர்களை ‘இழிகுலத்தினர்’ என்று கூறியதும், அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், சந்திர குப்தனைப் பிடித்துக் கொன்றுவிடும்படி, தனது அலுவலர்களுக்கு அலெக்சாண்டர் ஆணை யிட்டார்.
6) தலை தப்பினால் போதும் என்று சந்திரகுப்தன், அலெக்சாண்டர் படை முகாமிலிருந்து வெளியேறி, விந்திய மலைக்காடுகளில் அலைந்துக் கொண்டிருந்த சாணக்கியனோடு சேர்ந்து கொண்டான்.
7) சாணக்கியன் காட்டில் கிடைத்த ஒரு புதையலைக் கொண்டு பெரும் பணம் பெற்றான். அவன் சந்திரகுப்தனுக்கு பெரும் படையை திரட்டித் தந்தான். திருடர்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கூலிக் கும்பல், அப்படையில் இடம் பெற்றனர்.
8) போர் நடத்தி, நந்த வம்சத்தின் கடைசி மன்னன் தனநந்தனை வென்று, சந்திரகுப்தன் ஆட்சிக்கு வந்தான். இவனது வம்சம் மவுரிய வம்சம். இவனது அமைச்சரவையில் பார்ப்பன சாணக்கியன் இடம் பிடித்தான். பார்ப்பன கொடுங்கோல் ஆட்சி நடத்தினான்.
9) மக்கள் எதிர்ப்புக்கு உள்ளான சந்திரகுப்தன், இறுதிவரை அச்சத்துடனே வாழ்ந்தான். சாணக்கியன் – சந்திரகுப்தனைப் பயன்படுத்தி, பார்ப்பன மதத்தைப் பரப்பத் திட்டமிட்டான். முதலில், சாணக்கியனுக்குப் பணிந்து போன சந்திரகுப்தன், இறுதி காலத்தில் மனம் திருந்தி, சமணத்தில் ஈடுபாடு கொண்டான். சமண மதம், பார்ப்பன எதிர்ப்பு மதமாகும். பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி, பிறகு திருந்திய சந்திர குப்தன், உள்ளம் உடைந்து, பட்டினி விரதம் இருந்து உயிர் நீத்தான்.
அசோகன்
1) பார்ப்பன சாணக்கியன் துணையோடு ஆட்சியைக் கைப்பற்றிய மவுரியர்கள், பார்ப்பனர்களுக்கு பயன்படுவார்கள் என்ற பார்ப்பனர் பேராசை பொய்த்துப் போனது.
2) மகதம் (இன்றைய பீகார், உ.பி. பகுதிகள்) பார்ப்பனியத்துக்கு எதிராகவே இருந்து வந்தது. மவுரியப் பேரரசு, மகதத்தைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தது. அசோகன், சந்திர குப்தனின் பேரன் 38 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். புத்தர் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பினான்.
3) பார்ப்பன தர்மங்களைப் புறக்கணித்து அனைவரும் சமம் என்று அறிவித்தான் அசோகன். பார்ப்பன யாகங்கள், உயிர்ப் பலிகள், குதிரை யாகங்களைத் தடை செய்தான்.
4) நாடு முழுதும் கல்வெட்டுகளை நிறுவி, ஆணைகளைப் பிறப்பித்தான். பார்ப்பனர்கள் கொதித்தனர்.
5) பார்ப்பனர்கள் நாடு முழுதும் – அரசுக்கு எதிராக சதி செய்தனர்; அரண்மனையிலும் ஊடுருவினர்.
6) அசோகனின் 29 ஆம் ஆண்டு ஆட்சியில் பட்டத்து ராணி “அசந்தி மித்திரா” மரணமடைந்தாள். அதன் பிறகு ‘திஷ்ய ரஷிதா’ என்பாளை பட்டத்து ராணியாக்கினார். இவருக்கு பவுத்தத்தின் மீது ஈடுபாடு இல்லை. அரசன் புத்தரின் நினைவாக – அவர் அறிவு பெற்றதாகக் கூறப்படும் அரச மரத்தின் (போதி மரம்) மீது பற்றுக் கொண்டு வளர்த்தான். இந்த பட்டத்து ராணி, ‘விஷ முள்’ கொண்டு மரத்தைக் குத்தி காய்ந்துப் போகச் செய்து விட்டாள். ஆறாத் துயர் கொண்ட அசோகன், மரம் முழுமையாக பட்டுப் போகாமல், ஒரு பகுதியையாவது காப்பாற்றினான் என்று இலங்கையின் ‘மகா வம்சம்’ என்ற புராண நூல் கூறுகிறது.
7) அசோகன் தனது இறுதிக் காலத்தில் தன்னிடமிருந்த பொருள்களை எல்லாம் பவுத்த மடத்திற்கும் பவுத்தர்களுக்கும் வழங்கலானான்.
அசோகனுக்குப் பிறகு….

8) மவுரிய ஆட்சியின் கடைசி மன்னன் ‘பிரகத்ரன்’
கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடியது.
9) மவுரிய மன்னருக்கு எதிராக பார்ப்பனர்கள் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். மகத நாட்டின் படைத் தலைவனாக இருந்த ‘புஷ்யமித்திர சுங்கன்’ எனும் பார்ப்பனருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டனர்.
10)மன்னன் பிரகத்ரன் – படைவீரர்களைப் பார்வை யிட்டு வரும்போது, புஷ்யமித்திரன் பட்டப் பகலில் தந்திரமாக மன்னனை கத்தியால் குத்தி கொலை செய்து, மகதத்தின் ஆட்சியைக் கைப்பற்றினான். பவுத்த நெறி சீர்குலைந்தது.
புஷ்யமித்திர சுங்கன்

1) இவன் பார்ப்பான். சுங்கர் குலம்; இவனது பரம்பரை 112 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. பவுத்த மடாலயங்கள் கல்வெட்டுகள் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டன.
2) பாடலிபுத்திரத்தில் (இன்றைய பீகார் பகுதி) மிகச் சிறப்பான ‘குக்குடாரமா’ எனும் பவுத்த மடாலயத்தை அழித்திட புஷ்யமித்திரனே சென்றான். அப்போது உள்ளே இருந்து சிங்கம் உறுமியது போன்ற சத்தம் கேட்டு, பயந்து ஓடி வந்து தனது படையினரைக் கொண்டு மடாலயத்தை தீயிட்டு கொளுத்தச் செய்தான். மீண்டும் அசுவமேதயாகம் (குதிரைகளை எரிக்கும் யாகம்) கொண்டு வந்தான்.

3) சாகலா என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, ‘ரமண’ என்ற புத்தத் துறவியின் தலையினைக் கொண்டு வந்தால் நூறு ‘தினார்கள்’ பரிசு என்று அறிவித்தான்.
4) அடுத்து வந்த குப்தர்களின் பார்ப்பன ஆட்சிக்கு முன்னோடியாக, அதற்குப் பாதை அமைத்துத் தருவதாக சுங்கர்களின் ஆட்சி விளங்கியது என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் சத்தியநாத அய்யர்.
பவுத்தர்களைப் படுகொலை செய்த பார்ப்பனர்கள்

5) புஷ்யமித்திரன், அசோக மன்னன் நிறுவிய 84000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான்.
6) பவுத்த பிக்குகளும், பவுத்தத்தைத் தழுவிய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
7) காஷ்மீரத்தை ஆண்ட ஜாலுக்க என்ற காஷ்மீர் மன்னன், பவுத்த மடாலயத்திலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, மடாலயத்தை இடித்துத் தள்ளினான். (தகவல் ஆய்வாளர்: கல்கணன்)

8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்)
9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுத்த மடாயலங்களைத் தீ வைத்துக் கொளுத்தினான், காஷ்மீர் அரசன் கின்னரன்.
10)காஷ்மீர் மட்டுமன்றி பிற பகுதிகளிலும் பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போதி மரத்தை (அரசமரம்) வெட்டி வேரோடு சாய்க்க பல முறை முயன்றான் கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன். அவனது கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர்.

சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு பிறப்பித்த ஆணை: “தனுஷ்கோடி பாலத்திலிருந்து இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள் முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள்”. (தகவல்: சங்கர விஜயம்)

11)“பிற மதத்தின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால், பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங் களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை”. (ஆய்வாளர் டபுள்யு. டி. வில்கின்ஸ்)
பார்ப்பனக் கொடுமைகளை – புத்தமதம் எதிர்த்த தற்காக வரலாற்றில் பார்ப்பன கொலைக்காரக் கூட்டம் இவ்வளவு படுகொலைகளையும், அழிப்புகளையும் செய்தது. புத்தருக்குப் பிறகு, பார்ப்பனர்களை எதிர்த்து, அதில் வெற்றிப் பெற்ற ஒரே வரலாற்று நாயகன் பெரியார் மட்டுமே.
தேவ பூதி

1) சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவ பூபதி.
2) அவனிடம் அமைச்சராக இருந்த வாசுதேவன் எனும் பார்ப்பனன், மன்னனின் காமக்கிழத்திக்கு அரசியைப் போல் வேடமிட்டு, ‘அந்தப்புரத்துக்கு’ அனுப்பி, மன்னனை தந்திரமாகக் கொலைச் செய்தான். (ஆதாரம்: பாணரின் ‘ஹர்ஷ சரிதம்’)
3) கன்வ குலத்தைச் சார்ந்த வாசுதேவன் பரம்பரை 40 ஆண்டுகள் – ‘பார்ப்பன தர்ம’ ஆட்சி நடத்தியது.
குகசிவன்
1) புத்த மதம் வட இந்தியா முழுதும் அழிக்கப்பட்ட நிலையில் கலிங்க நாட்டில் மட்டும் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) குகசிவன் ஆட்சி நடந்தது. இவன் புத்தத்தின் தீவிர ஆதரவாளன். சிற்றரசன், புத்தரின் புனிதப்பல், கலிங்கத்தில் (இன்றைய பீகார் பகுதி) இருப்பதே, அங்கு புத்தர் கொள்கை ஆட்சி நீடிக்கக் காரணம் என்று கருதிய பார்ப்பனர்கள், பல முறை, புத்தரின் புனிதப் பல்லைக் கடத்திப் போக முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை குகசிவன் முறியடித்து, பார்ப்பனர்களை நாடு கடத்தினான்.
2) குகசிவன் – மகத நாட்டை ஆண்ட சமுத்திர குப்தனுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசன். பார்ப்பனர்கள், சமுத்திர குப்தனிடம், குகசிவனுக்கு எதிராக, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முறையிடவே, சமுத்திரகுப்தன், குகசிவனையும், புனித பல்லையும் கொண்டுவர படை அனுப்பினான். பின்பு பார்ப்பனர்கள், பொய்ப் பிரச்சாரத்தை உணர்ந்து, மீண்டும் புனிதப் பல்லை குகசிவனிடம் ஒப்படைக்க, அவனிடம் நேசம் பாராட்டினான்.
3) தங்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகவே, பார்ப்பனர்கள், குகசிவனுக்குப் பகைவனான சுவேதனன் எனும் மன்னனுக்கு தூபம் போட்டனர். சுவேதனன், புத்தர் பல்லினை மீட்க குகசிவனுடன் போரிட்டான். பல்லாயிரம் பேர் மாண்டனர். முடிவில் குகசிவனும் மாண்டான். ஆனால், புத்தரின் புனிதப் பல், எதிரிகளின் கையில் சிக்கவில்லை. குகசிவன் விருப்பப்படி, அவனது மகளும் மருமகளும், புனிதப் பல்லை இலங்கைக்குக் கொண்டு போய் விட்டனர். புனிதப் பல்லை வரவேற்ற அந்நாட்டு மன்னன் (கீர்த்தி ஸ்ரீ மேகவர்ணன்) அதனை வைத்து ஒரு கோபுரம் அமைத்தான்.
சசாங்கன் (கி.பி. 603 – 620)

மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பகுதிகளை அரசாண்ட கவுட மன்னன் சசாங்கன், புத்த மதத்தின் எதிரி, பவுத்தர்களையும், பவுத்த மடாலயங்களையும் அழித்தான். புத்த சின்னங்களை அழித்தான். புத்தரின் நினைவாகப் போற்றும் அரச மரத்தையும் (ஏற்கனவே அழிக்கப்பட்டு, அசோகனால் பாதுகாக்கப்பட்டது) வெட்டினான். பிறகு மகத மன்னன் பூர்ணவர்மனால் அரச மரம் (போதி மரம்) முற்றிலும் அழிந்துவிடாமல் மீண்டும் நீரூற்றிக் காப்பாற்றப்பட்டது. போதி மரத்தின் அடியில் இருந்த புத்தர் சிலை ஒன்றையும் அழிக்க முயன்றான்.

ஹர்ஷ வர்த்தனன் (கி.பி. 606 – 647)

1) இவன் வைசிய மரபைச் சார்ந்தவன். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன், வர்ணாஸ்ரமப் பித்தன். பார்ப்பனர் களுக்கும், புரோகிதர்களுக்கும் பொருட்களை வாரி வாரி கொடுத்தான். பார்ப்பனர்கள் வீடுகளில், முன்பாக மதுவை தயாரிக்கும் சோமச் செடிகள், பலிக்குரிய பொருட்கள், வேள்வித் தீக்குப் பயன்படும் பொருட்கள் மண்டிக் கிடந்ததாக, சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இறந்த தந்தையின் நினைவாக – பார்ப்பனர்களுக்கு 100 கிராமங்களை ‘தானம்’ செய்தான்.
2) கி.பி. 613 இல் பவுத்தத்தைத் தழுவினான். அதற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தான். ஆனாலும் புத்த மார்க்கத்தினரை மன்னன் ஆதரித்ததை பார்ப்பனர்களால் பொறுக்க முடியவில்லை.
3) கன்னோசி நகரில் 18 அரசர்கள், 30000 பவுத்த துறவிகள், 3000 பார்ப்பனர்களை அழைத்து, சட்ட மாநாடு நடத்தினான். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங்கிற்கு பெருமை தர திட்டமிட்டான். கங்கை நதிக்கரையில் பெரிய பந்தல் போடப்பட்டது. 22 நாட்கள் மாநாடு நடந்தது. 100 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் ஆள் உயர தங்கத்தால் ஆன புத்தர் சிலை, மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாளும் மன்னர் – அரசர்கள் – ஊர்வலமாகப் புறப்பட்டு, மாநாட்டுக்கு வந்தனர். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். வழிநெடுக முத்துக்களையும், தங்கத்திலான மலர்களையும் வழி நெடுக தூவிக் கொண்டே வந்தான்.
4) பார்ப்பனர்கள் பொருமினர். சதித் திட்டம் தீட்டினர். 5 ஆம் நாளில் சதித் திட்டத்தை அறிந்து, மன்னர் எச்சரித்தார். 23வது நாள் – புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் பார்ப்பனர்கள் தீ வைத்தனர். பெரும் முயற்சியால் அணைக்கப் பட்டது. ஹர்ஷனும் அரசர்களும் கோபுரத்தின் உச்சியில் ஏறி, புத்தர் சிலையைப் பார்வையிட்டு திரும்பும்போது, சதிகாரன் ஒருவன் கோபுரத்தின் சுவரில் மறைந்து நின்று, மன்னனை கத்தியால் குத்திக் கொலைச் செய்ய முயன்றான். மன்னன் சாமர்த்தியமாக, அவனைப் பிடித்தார். சிற்றரசர்கள், வாளினை உருவ, மன்னர் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பெருந்தன்மை கண்டு மனம் திருந்திய கொலையாளி, தன்னை ஏவி விட்டது பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டான். பார்ப்பனர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர். சதிக்கு முக்கிய காரணமான பார்ப்பனர்களை மட்டும் தண்டித்து, 500 பார்ப்பனர்களை மட்டும் மன்னன் நாடு கடத்தினான்.
அருணாஸ்வரன்
1) ஹர்ஷவர்த்தனன் மறைவுக்குப் பிறகு, அவனது அமைச்சரவையில் இருந்த அருணாஸ்வரன் எனும் பார்ப்பனன், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை மன்னன் என்று அறிவித்தான்.
2) அவையில் சீனத் தூதுவராக இருந்த வாங்க் ஹியூன் சீ, அவரது 30 மெய்க்காப்பாளர்களை தாக்கிக் கொன்றான். வாங்க் ஹியூன் சீ, நோபாளத்துக்கு தப்பி ஓடி, நேபாள மன்னரிடமிருந்து பெரும் படையைத் திரட்டி வந்து, அருணாஸ்வரனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனத்துக்குக் கொண்டு போனான்.
சந்திரா பீடன்

1) கார்கோட மரபில் வந்த காஷ்மீர் மன்னன் (கி.பி.662). இவனது ஆட்சியில், ஒரு பார்ப்பன அதிகாரி மற்றொரு பார்ப்பன அதிகாரியைக் கொலை செய்ய, வழக்கை விசாரித்த சந்திரபீடன், கொலை செய்த பார்ப்பனருக்கு தண்டனை வழங்கினான். பார்ப்பனருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது தர்மம். மரணதண்டனையிலிருந்து தப்பிய பார்ப்பன அதிகாரி, மன்னனது தம்பி ‘தாராபீடன்’ உடன் சதி செய்து, அண்ணனைக் கொலை செய்து, பார்ப்பன அதிகாரி துணையுடன் ஆட்சியைப் பிடித்தான்.

கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530)

தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணாஸ்ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.
2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன்.
3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான்.
4) படையினால் மீண்டும் பிடிக்கப்பட்டான்; விசாரணை நடந்தது. திம்மா தண்டநாயகன், அவனது தந்தை சாளுவ திம்மன், தம்பி சாளுவ குண்டராஜன் ஆகிய பார்ப்பனர்கள் கண்களை பறிக்க மன்னர் ஆணையிட்டார். பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை தரப்படக் கூடாது என்பதால், கண்கள் மட்டும் பறிக்கப்பட்டன.
5) உயிரினும் மேலாக வளர்த்த குழந்தையின் மரணத்தைத் தாங்காமல், கிருஷ்ண தேவராயரும் உயிர் நீத்தார்.
மதுரை – திருமலை நாய்க்கர் (கிபி. 1529 – 1736)

1) மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு விஜய நகரத்தின் அரசப் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்கள் ஆளத் தொடங்கினர். அதில் ஒருவன் திருமலை நாயக்கர்.
2) கோயில்கட்டுவதற்கும், கோபுரங்கள் கட்டுவதற்கும் பணத்தை அள்ளிக் கொட்டினான்.
3) ‘அபிஷேகப் பண்டாரம்’ எனும் பார்ப்பனர் அல்லாதார் நிர்வாகத்தில் இருந்த மதுரை மீனாட்சி கோயிலை, அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர்களான குலசேகரப்பட்டன், விக்கிரமப்பட்டன் கும்பலிடம் ஒப்படைத்தான்.
4) நீலகண்ட தீட்சகன், ராமப்பைய்யன் என்ற பார்ப் பனர்கள் அமைச்சர்களாகவும், தளபதிகளாகவும் இருந்து மன்னனை ஆட்டிப் படைத்தனர். தமிழர்களான பண்டாரகர்கள் பூசை செய்த பழனி கோயிலை அவர்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர் களிடம் ஒப்படைத்தது, இவன்தான்.
5) திருமலை நாயக்கன் படைத் தளபதியாக இருந்த பார்ப்பானே, மைசூர் போரில் எதிரிகளிடம் பணம் வாங்கி, காட்டிக் கொடுத்தான்.
6) இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பாதிரியான இராபர்ட்-டி நொபிலியுடன் மன்னர் திருமலை நாயக்கர் உறவு கொண்டார். அவர் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தான். இதனால் பார்ப்பனர்கள் மன்னரை வெறுக்கலாயினர்.
7) அர்ச்சகப் பார்ப்பனர்கள் மன்னரிடம், ‘மதுரை மீனாட்சிக் கோயிலுக்குள் புதையல் இருக்கிறது. அதை எடுத்தால், நாட்டில் பொருளாதார நெருக்கடியைப் போக்கிடலாம்’ என்று கூறி, அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஓர் இருளடைந்த சுரங்கத் துக்குள் புதையல் இருப்பதாக உள்ளே அனுப்பி, உள்ளே போனவுடன் வாயிலைப் பாறாங்கல் போட்டு மூடினர். மன்னர் மூச்சுத் திணறி உள்ளேயே செத்தார். மறுநாள் மதுரை மீனாட்சி, மன்னரை தன்னோடு அய்க்கியப்படுத்திக் கொண்டார் என்று பறைசாற்றி மக்களை நம்பச் செய்து விட்டனர். மன்னரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது, அவர் அதிகாரத்தில் அமர்த்திய ‘குலசேகரப் பட்டன்’ வகையறாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கநாத நாயக்கன்

1) 16வது வயதிலே பட்டத்துக்கு வந்தவன் (மதுரை) சொக்கநாத நாய்க்கன். பார்ப்பன அமைச்சர்கள் சதி செய்தனர். மன்னரின் தம்பியை அரசராக்க சதி செய்தனர். மன்னனை, தனி அறையில் அடைத்தனர். அரசனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். அரண்மனைப் பெண் ஒருவள் மூலம் அறிந்த அரசன், சதிக் கும்பல் கொல்ல வரும்போது பிடித்தான். ஒரு பார்ப்பன அமைச்சருக்கு மரணதண்டனை தர உத்தரவிட்டான். மற்றொரு அமைச்சர் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனருக்கு மரண தண்டனை தரக்கூடாது என்று ‘தர்மத்தை’க் எடுத்துக் கூறவே, ஆளைக் கொல்லாமல், கண்கள் மட்டுமே பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டான்.
2) சொக்கநாதன் பழமைவாதி. வர்ணாஸ்ரமப் பித்துப் பிடித்தவன். தங்கத்தில் ஒரு பசு செய்து, அதன் வாய் வழியாகப் புகுந்து வெளிவந்து, அந்தப் பொன்னாலான பசுவை பார்ப்பனர் களுக்கு தானமாக வழங்கினான். இதற்கு ‘இரண்ய கர்ப்பதானம்’ என்று பெயர்.
3) அரசன் ஆட்சியை மறந்து வைதீகச் சடங்குகளில் மூழ்கி, பார்ப்பனர்களுக்கு பொருள்களை வாரி இறைத்தான். பார்ப்பன அதிகாரிகள் மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.
4) கோவிந்த தீட்சன் எனும் பார்ப்பான், அமைச் சராக இருந்தான். இவன், சொக்கநாதனுக்கு மூளைக் கோளாறு என்று கூறி மக்களை நம்பச் செய்து, சொக்கநாதனின் தம்பியும், தனது நண்பனுமான அளகாத்திரியை அமைச்சராக் கினான். அளகாத்ரியும் கோவிந்த் தீட்சனும் மக்களை வாட்டி வதைத்தனர். ‘ரஸ்தம்கான்’ என்ற முகம்மதிய வீரன், இருவரையும் கைது செய்து சொக்கநாதனை விடுவித்தான். மனம் உடைந்த சொக்கநாதன், நீண்ட நாள் உயிர் வாழவில்லை.
விஜயராகவன்
1) தஞ்சையை ஆண்ட விஜயராகவன், நாயக்க மன்னர்களில் கடைசி மன்னன். பார்ப்பன அடிமை. தினமும் 12,000 பார்ப்பனர்களுக்கு அறுசுவை உணவு போட்டான். பார்ப்பனர் களுக்கு உணவு பரிமாறப்பட்ட பிறகே அவன் சாப்பிடுவான்.
2) ஒருமுறை பார்ப்பனர்களுடன் ராமேசுவரம் சென்று, மொட்டை அடித்து, காவி தரித்து, எடைக்கு எடை பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கினான். தஞ்சை திரும்பியவுடன், “அயல் மன்னன் ஆட்சியிலுள்ள கடவுளுக்கு அளவற்ற பொருள்களைத் தானமாக வழங்கியதால், சொந்த நாட்டு தெய்வம் சீற்றமடைந்துள்ளது” என்று பார்ப்பனர்கள் கூறினர். 20,000 பொன்னை பார்ப்பனர்களுக்கு அளித்து, தெய்வத்தின் சீற்றத்தை அடக்கிவிட்டதாக நம்பினான்.
3) அவனது குரு, குமார தாதாச்சாரி என்ற பார்ப்பனர், ஒவ்வொரு நாளும் 30 மைல் தொலைவிலுள்ள திருவரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் பார்ப்பன குருவையும், விலை உயர்ந்த பொன் னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அரண்மனை தாதிகள், குருவை அமர வைத்து 30 மைல் தூரத்க்கு தூக்கி வருவார்கள். அதற்குப் பின்னே மற்றொரு பளபளப்பான பல்லக்கில் தாதாச்சாரியின் “செருப்புகள்” நவரத்தினங்களால் இழைக்கப் பட்டு, தாதிகளால் தூக்கப்பட்டு வரும். மன்னன், கையில் பூசை பாத்திரம் ஏந்தி கால்நடையாக நடந்து வருவான்.
4) நாட்டில் கடும் பஞ்சம்; கொடும் நோய்; மக்கள் வேறு பகுதிகளுக்குக் குடியேறினர். பலர் டச்சுக் காரர்களின் சர்ச்சுகளில் அடைக்கலமானார்கள். சீரழிவிற்குக் காரணம், கிறிஸ்தவ மதமும், அவர்களின் சர்ச்சுகளும் தான் என்று பார்ப் பனர்கள் பிரச்சாரம் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினர்.
5) இளவரசன் மன்னாடுதாசன், மனம் கொதித் தான். தந்தையின் மூடத்தனத்தைக் கண்டித் தான். மத குருவுக்கும், கோயிலுக்கும் பணத்தைச் செலவிட்டால், பிறகு, அரசாங்கம் ஏன்? நீதிமன்றம் ஏன்? என்று கேட்டான்.
6) இளவரசனை வீழ்த்த பார்ப்பனர்கள் சதித் திட்டம் போட்டார்கள். இளவரசனை மன்னனிட மிருந்து பிரித்தார்கள்.
7) மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கனுக்கும், விஜயராகவனுக்கும் கோவிந்த தீட்சத் எனும் பார்ப்பான் சதி செய்து போர் மூட்டினான். விஜயராகவன் தோல்வி அடைந்தான். பார்ப்பன புரோகிதர்கள் மன்னன் மறு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக சடங்குகளை செய்ய வேண்டும் என்றனர். வெண்கலத்தாலான பசு செய்யப்பட்டது. மன்னன் உள்ளே புகுந்தான்; பார்ப்பனர்கள் மந்திரம் ஓத, பசு, கன்றினை ஈனுவது போல, உயிரற்ற அந்த பசு, அரசனை ஈன்றது. மன்னன், குழந்தையைப் போல கையை, காலை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஒரு பார்ப்பன குருவின் மனைவி, மருத்துவச்சியாக இருந்து, 80வயது அரசனை, குழந்தையாக பாவித்து, தனது காலில் கிடத்தி, தாலாட்டி, மார்போடு இணைத்து முத்தம் கொடுத்தாள்.
– இப்படி எல்லாம் பார்ப்பனர்கள் கூத்து அடிக்க, அரசர்கள் அவர்களின் தாசர்களாக இருந்தார்கள் என்பதே இந்த நாட்டின் வரலாறு.
வீழ்ந்த சிவாஜி

1) சூத்திரனாகிய சிவாஜி, பார்ப்பன தாசன். அவன் மூடி சூட ‘சத்திரியனாக’ வேண்டும். அதனால் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்தனர்.

2) பெரும் தொகையை வாங்கிக் கொண்டு காசியி லிருந்து காகப்பட்டன் என்ற பார்ப்பனர் முடிசூட்ட வந்தான். நாடு முழுதுமிருந்தும் 11,000 பார்ப் பனர்கள், குடும்பத்துடன் அழைக்கப்பட்டனர். அன்றாடம் பூசைகளும், சடங்குகளும் நடந்தன. 44வது வயதில் பூணூல் போடப்பட்டு, சத்திரியன் ஆக்கப்பட்டான். தானும் ஒரு சத்திரியன் என்று ஒப்புக் கொண்டு விட்டபடியால், தனது காதில் விழுவதுபோல் மந்திரங்களை ஓத வேண்டும் என்று சிவாஜி விரும்பினான். பார்ப்பனர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது. “வேத மந்திரங்கள் என்பது இரு பிறப்பினருக்கு மட்டுமே உரியது. தற்காலத்தில் பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் இரு பிறப்பாளர்களாக மாட்டார்கள். உலகில் உண்மையான சத்திரியர் களும் இல்லை” என்று கூறிவிட்டனர். “பேராசை பிடித்த பார்ப்பனன் மந்திரங்களின் ஒரு சிறு அசைவுகூட, சிவாஜியின் காதில் விழாத வண்ணம், தங்கள் வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண் டனர்” என்று எச்.எம். அரிபிரசாத் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

3) சிவாஜியின் எடைக்கு எடை பல பொருட்கள் எடையில் நிறுக்கப்பட்டன. திடீரென இரண்டு பார்ப்பனர்கள், சிவாஜி படையெடுப்பின்போது பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மரணம் அடையத்தக்க வகையில் நகரங்களை எரித்தான் என்றும், அப்பாவங்களுக்கு தகுந்த விலை கொடுத்து, பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறவே, அதற்காக, 8000 பார்ப்பனர்களுக்கு பணமாகக் கொடுத்தான் சிவாஜி.
பார்ப்பனர்களை நம்பி, அவர்கள் காலடியில் வீழ்ந்த சிவாஜியின் சாம்ராஜ்யத்தை பார்ப்பனர்கள், பொன்னையும், பொருளையும் சுரண்டியே ஆட்சியை திவாலாக்கி விட்டனர். இந்த வரலாற்றையே-‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ என்று அண்ணா நாடகமாக்கினார். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் ‘சிவாஜி’ என்ற பட்டத்தை பெரியார் சிவாஜி கணேசனுக்கு சூட்டினார்.
(நிறைவு)
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு மலரில் இருந்து

No comments: