Tuesday, May 28, 2019

"ஆன்மா" என்று அறிவியலில் எதுவும் கிடையாது...

"ஆன்மா" என்று அறிவியலில் எதுவும் கிடையாது...



சிந்தியுங்கள்...

ஒரு குழந்தையற்ற தம்பதிகளுக்கு

ஒரு ஆய்வக கண்ணாடி குடுவையில் அந்த ஆணின் விந்தை உறைய வைக்கிறார்கள்...

அந்த பெண்ணின் கருமுட்டையையும் தனியாக எடுத்து உறையை வைக்கிறார்கள்...

பிறகு உடலுக்கு வெளியே உள்ள அந்த ஆய்வகத்தில் இரண்டையும் இணைத்து விதைக்கிறார்கள்...கருமுட்டை கண்ணாடி குடுவையில் சினையாகிறது...

சினையான கருமுட்டையை திரும்ப அதே பெண்ணோ அல்லது வேறொரு பெண்ணின் கற்பத்திலோ அடைக்கிறார்கள்...

கரு வளர்கிறது...9 மாதத்தில் குழந்தை பிறக்கிறது...

இதில் கேள்வி என்ன வென்றால்  அறிவியல் கூறாத "ஆன்மா" சினையான குருமுட்டைக்குள் எப்பொழுது சென்றது?

கண்ணாடி குடுவையில் இருக்கும்போதா? அல்லது பெண்ணின் கருவறைக்குள் சென்ற பொழுதா?

கண்ணாடி குடுவையில் என்றால் மனித ஆன்மாவால் கடவுளிடமிருந்து கண்ணாடி குடுவைக்குள்ளெல்லாம் பயண பட முடியுமா?

அந்த தாய்க்கு அதற்கு முன் ஏற்பட்ட ஒவ்வொரு கருச்சிதைவிலும் ஒரு ஆன்மா இறக்கிறதா? 5-8 நாள் வாழ்ந்த ஆன்மாவெல்லாம் உள்ளதா?

தாயின் கருவறை என்றால் அப்பொழுது  கருமுட்டை எப்படி குடுவையில் சினையாகி வளர்ந்தது

No comments: