Wednesday, June 20, 2018

ராமன் சீரிஸ்


# ராமன் போல் கணவன் வேண்டும் என்று கேட்கும் பெண்கள் தீக்குளிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

# கிருஷ்ணன் கூட பரவால்ல. ஒரு லட்சம் பேருக்கு மேல இருந்தாலும் வச்சு வாழ்ந்தான். ஆனா இந்த ராமன் இருக்கானே...

# ராமன் யோக்கியன் என்று சொல்பவர்கள் அனைவரும் அயோக்கியன்களே...

# ராமன் சந்தேகபுத்தி கொண்ட ஒரு சில்லறைநாய் என்று கூறியவாறே நகர்ந்தார் அந்த ஏழை பதிவாளர்...

# தன் காதலை தெரியப்படுத்திய பெண்ணை மூக்கறுத்து அசிங்க படுத்தியவன் மனிதனாக கூட மதிக்க தகுதியற்றவன்...

# சூர்ப்பனகை கிட்ட முதல்லயே கல்யாணம் ஆயிடுச்சு னு சொல்லிருந்தா பிரச்சினையே இல்லை.

நாற்பது பாட்டு பாடி கடலை போட்டுட்டு இருந்துட்டு சீதை என்னடா வெளிய போனவனை ஆளை காணாமே னு வந்ததுக்கு அப்புறம் சொல்லிருக்கான் அந்த சில்றப்பய.

இதுல அவன் ஏகபத்தினி விரதனாமா.

# இராமாயணம் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்னவெனில் பார்ப்பானுக்கு குனிந்து கொடுத்தால் அவனின் செருப்பை தலையில் வைத்துக்கொள்ள கூட பார்ப்பான் தயங்க மாட்டான் என்பதே...

# குதிரைக்கும் பெண்ணிற்கும் கிராஸ் ஆகி பிறந்தவன் புத்தி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள புனையப்பட்டதே இராமாயணம்...

# இராமாயணம் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்னவெனில் பார்ப்பானுக்கு குனிந்து கொடுத்தால் அவனின் செருப்பை தலையில் வைத்துக்கொள்ள கூட பார்ப்பான் தயங்க மாட்டான் என்பதே...

# ஜெய் ஸ்ரீராம் என்பதற்கும் Hail Hitler என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இரண்டுமே அறியாமையின் வெளிப்பாடுதான்...

# வால்மீகியின் ராமாயணத்தில் குதிரை மாமிசமும் சோமபானமும் தின்று கொண்டு அந்தப்புரத்திலேயே காலத்தை கழித்தவன் கம்பராமாயணத்தில் உத்தமனாக சித்தரிக்கப் பட்டிருப்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நிகழ்வு அல்ல...

# வால்மீகியின் ராமாயணத்தில் குதிரை மாமிசமும் சோமபானமும் தின்று கொண்டு அந்தப்புரத்திலேயே காலத்தை கழித்தவன் கம்பராமாயணத்தில் உத்தமனாக சித்தரிக்கப் பட்டிருப்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நிகழ்வு அல்ல...

# எட்டுமாத கர்ப்பிணியை கண்ணை கட்டி காட்டிற்கு துரத்தியவனை கடவுளாக கும்பிடுபவர்கள் எவ்வளவு கொடியவர்களாக இருப்பார்கள்...

# குதிரைக்கு பிறந்தவனுக்கு தெரியுமா சீதையோட அருமை...

# குரங்கு தாண்டியதை தாண்ட முடியாதவனை கடவுள் என்று சொல்லுகிறது ஒரு முட்டாள் கூட்டம்.

# ராஜா ஆனதுக்கு அப்புறம் குடி, கூத்தியாள் என அந்தப்புரத்திலேயே வாழ்ந்தவன் விசாரித்த தீர்ப்பளித்த வழக்கு ஒன்றே ஒன்று தான்.

சம்புகன் தலையை வெட்டியது தான் அந்த தீர்ப்பு...

# அக்ரஹாரத்தில் ஒரு குழந்தை இறந்ததற்கு காட்டுக்குள் தவம் செய்யும் ஒருவன் தான் காரணம் என்று கண்டறிந்து அவனை கொன்ற அந்த கால சிஐடி சவுக்கு தான் ராமன்.

# ஜெய் மகிழ்மதி is a word.

ஜெய் ஸ்ரீராம் is an emotion...

# வால்மீகி: ஒருநாள் டோப் அடிச்சுட்டு சுத்திட்டு இருந்தேன். அப்ப குதிரை செய்றதை பார்த்தேன்.

யானை கூட செஞ்சு விநாயகர் வந்த மாதிரி குதிரை கூட செஞ்சா யார் வருவாங்க னு யோசிச்சேன்.

அந்த கணநேரத்தில் என் கற்பனையில் உதித்தவன் தான் ராமன்..

# ராமரோட மனைவி சீதா

சீதாவோட அம்மா பூமாதேவி

பூமாதேவியின் புருசன் விஷ்ணு

ராமனும் விஷ்ணுவும் ஒன்னு

அப்ப அம்மாவும(பூமாதேவி) மகளும்(சீதா)

சக்களத்தி

அப்ப ராமன் (விஷ்ணு) மகள் சீதா வா..??

அடடா

ராமாயணம் என்ன ஒரு அற்புதமான கதை

# சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அரசன்(ராமன்) தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். பிரார்த்தனை செய்வதிலும், விரதமிருப்பதிலும், தன் அன்பு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சுவதிலும் அவன் தனது நாட்களைச் செலவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசனிடமிருந்து சீதையை அவன் வெற்றிகரமாக மீட்டிருந்தும்கூட, பழமைவாதக் கொள்கைகளின் பிடியிலிருந்து தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குரிய சக்தி அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் தன் குடிமக்கள்மீது அக்கறை கொண்டிருந்தான் என்பதை வெறுப்போடு நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் தங்கள் சாதிக் கடமைகளிலிருந்து தவறாமல் இருந்தவரை, அவனுடைய ஆட்சியின்கீழ் அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது. ஆனால் சம்புகனைப் போன்றவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், தர்மத்தின் நீண்ட வாள் அவர்களைத் துரத்தி வேட்டையாடிவிடும். ஒட்டுமொத்த அமைப்புமுறையானது பாகுபாட்டின் அடிப்படையிலும், அனுகூலங்கள் பிறப்பின் அடிப்படையிலும் இருக்கும்போது, வெறுமனே ஓர் ஆட்சியாளனாக இருப்பது மிகவும் கடினம்.

# அப்பனுக்கே அறுபதாயிரம் பொண்டாட்டியாமா. இவன் பொண்டாட்டி மட்டும் ரெண்டு தடவை தீக்குளிச்சு கற்பை நிரூபிக்கனுமாம்..

# இராமனின் அப்பாவிற்கு அறுபதாயிரம் மனைவியாம். அறுபதாயிரம் என்றால் எவ்வளவு. கணக்கு போட்டு பாருங்கள். இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி. அவன் மூனு முனிசிபாலிட்டி வச்சிருந்திருக்கிறான்...

# காடு சுற்றி பலருடன் சேர்ந்து வந்த இராமன் யோக்கியனாம். அசோகவனத்திலேயே இருந்த சீதையின் நடத்தையில் சந்தேகமாம்.

# சுந்தர காண்டத்தில் அனுமன் இராமன் சொல்லியனுப்பியதாக வரும் சீதையைப் பற்றிய வர்ணனைகள் சொல்லும். இராமன் எவ்வளவு யோக்கியன் என்று...

# கம்பன்: ராமன் ஏகப்பத்தினி விரதன்.

வால்மீகி: என்னப்பா அங்க சத்தம்...

# கம்பன்: இராவணன் சீதையை பூமியை பிளந்து தூக்கி சென்றான். அவளை விருப்பமின்றி தொட்டால் அவன் மண்டை வெடித்து சிதறி விடும்.

வால்மீகி: என்னப்பா அங்க சத்தம்...

#கம்பன்_புளுகுகள்

# ராமனின் தவறுகளில் பங்கு கொண்டு அரக்கர் குல மக்களை கொன்று குவித்த லட்சுமணன் சிறந்த தம்பி என்றால் இறப்போம் என்று உறுதியாக தெரிந்தே அண்ணனுக்காக போர்க்களம் சென்ற கும்பகர்ணன் அவனை விட சிறந்தவன் தான்...

#இராமனின் அப்பாவிற்கு அறுபதாயிரம் மனைவியாம். அறுபதாயிரம் என்றால் எவ்வளவு. கணக்கு போட்டு பாருங்கள். இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி. அவன் மூனு முனிசிபாலிட்டி வச்சிருந்திருக்கிறான். (இத சொன்னது பெரியார் )
#வால்மீகி: ஒருநாள் டோப் அடிச்சுட்டு சுத்திட்டு இருந்தேன். அப்ப குதிரை செய்றதை பார்த்தேன்.



யானை கூட செஞ்சு விநாயகர் வந்த மாதிரி குதிரை கூட செஞ்சா யார் வருவாங்க னு யோசிச்சேன்.



அந்த கணநேரத்தில் என் கற்பனையில் உதித்தவன் தான் ராமன்...

#சந்தேகப்பட்ட கணவன். மனைவி தற்கொலை (அல்லது கொலை)

இன்னாள் தினமலர் 

சந்தேகப்பட்ட ராமன் . 
தற்கொலை செய்த சீதை 
என்பதே ராமராஜ்ஜியத்தின் தினமலர் சொன்ன செய்தி

இராமாயணத்தில் வானரங்கள் குரங்குகளா

அனுமன் சுக்ரீவன் வாலி போன்றவர்களை வானரங்கள் என்று இராமாயணத்தில் சித்தரித்துள்ளனர்.
அதனை காரணம் காட்டி நண்பர் ஒருவர் மண்டோதரியை வன்புணர்ந்தது குரங்குகளா என்று கேட்கிறார்.
உண்மையில் அவர்கள் வானரங்கள் இல்லை. திராவிடர்கள் மற்றும் ஆரியர்களுக்கு இடையே கலப்பு உண்டாகி கலப்பினமாக இருந்தவர்களை திராவிடர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர்கள் தனித்து விடப்பட்டனர். அவர்களின் இழிநிலையை சுட்டிக்காட்ட அவ்வாறு சொல்லப்பட்டது. உண்மையில் பார்ப்பன அப்பாவிற்கும் அரக்க குல பெண்ணிற்கும் பிறந்த இராவணனும் வானரமாக சித்தரிக்கப் பட்டிருக்க வேண்டியவன் தான். ஆனால் அவன் ஒரு ராஜ்ஜியத்திற்கு உரிமையானவன் என்பதால் அவ்வாறு சொல்லப் படவில்லை.
ஆனாலும் இந்த கலப்பிற்காக அவனுக்கு ராஜ்ஜியம் வழங்கப்படாமல் அவன் சிற்றன்னை மகன் குபேந்திரனுக்கு தான் அந்த ராஜ்ஜியம் வழங்கப்பட்டது. அதனைத்தான் அவன் போரிட்டு வெற்றி பெற்றான்...

இராவணன் அரக்கன். பேரரக்கன்

லட்சுமணனும் சுக்ரீவன் மற்றும் அவனது படைகளும் சூரியன் மறைந்த பிறகு போரில் ஈடுபடக்கூடாது என்ற விதியையும் மீறி இராவணனின் கோட்டைக்குள் புகுந்து பூஜையில் இருந்த இராவணனின் மகன் இந்திரஜித்தை கொன்றனர்.
பின்னர் இராவணனின் மனைவி மண்டோதரியை தூக்கி சென்றனர். மண்டோதரியை அவனின் கூட்டத்தினர் வன்புணர்ந்தனர். அதற்குள் இராவணனின் கூட்டம் வந்தவுடன் அவர்கள் விட்டு விட்டு சென்று விட நிர்வாணமாக இருந்தாள்.
பின் அவள் உயிரை விட துணிய இராவணன் அவளை தடுத்தான். ஒரு ராஜாவுக்கு மனைவியாக இருக்கும் தகுதியை தான் இழந்து விட்டதாகவும் அதனால் உயிரை விட போவதாகவும் கூறினாள். அதற்கு இராவணன் நீ எந்த நிலையில் இருந்தாலும் என் மனைவி தான். அது எந்த நிலையிலும் எதற்காகவும் மாறாது என்று கூறினான்.
இதற்கு பின் வேலையாட்களின் நகைப்பையும் பொருட்படுத்தாமல் இராவணன் அவளை அழைத்து சென்றான்.
அதனால் தான் அவன் அரக்கன். பேரரக்கன்❤️❤️❤️
கட்டிய மனைவியை சந்தேகப்படும் சில்லறையை கும்பிடுபவர்களுக்கு பேரரக்கனின் அருமை என்றும் புரிய போவதில்லை...

மிளகாய் காத்த பெருமாள்

அவார் : உங்க கோவில் பக்கம் வந்தேன். பரவாயில்லை நல்லா கொடை நடத்துறீங்க.
இவர் : அப்படியா ? நல்லதுங்க
அவார் :எல்லாமே நல்லா இருக்கு. ஆனா இந்த பச்சைமிளகாயை அரைச்சி முகம் வழியே
பலர் விட்டுக்குறீங்களே அது என்ன சடங்கு. எனக்கு பிடிக்கவே இல்ல.
இவர் : அப்படி சொல்லாதீங்க. எங்களுக்கு அதுதான் தெய்வம். எங்க ஊர் பக்கம் பச்சமிளகாய் மட்டும்தான் விளையும். அதுதான் எங்க தெய்வம். எங்க சாமி பேரே ”மிளகாய் காத்தான்” தான்.
அவார் :”மிளகாய் காத்தான்” இப்படி ஒரு சாமி இருக்கா என்ன? இது பெருமாளா ?
இவர் : இல்ல
அவார்: அப்ப சிவனா?
இவர்: இல்ல
அவார் : அப்ப பிரம்மாவா
இவர் : இல்ல
அவார் : விஷ்ணுவும் இல்ல, சிவனும் இல்ல, பிரம்மாவும் இல்ல. அப்ப யார்தான் அது
இவர் : அதான் தெளிவா சொல்லிட்டேன்ல அந்த சாமி பேரே “மிளகாய் காத்தான்” தான்.
அவார்: ஆனா பார்க்க பெருமாளாட்டம்தான் இருக்கார்.
இவர் : இல்லையே அவரு பாக்க “மிளகாய் காத்தான்” மாதிரிதான் இருக்கார்.
அவார் : ஒக்கே ஒக்கே. ஆனா என்ன பண்ணுங்கோ. சிம்பிளா பக்கத்துல சின்னதா ஒரு பெருமாள் வெச்சி கும்பிடுங்கோ. நா ஹெல்ப் பண்றேன்.
இவர் : வேண்டாங்க. இப்படித்தான் பக்கத்து ஊர்ல பேச்சியம்மன் கோவில்ல, பேச்சியம்மனுக்கு கொடைக்கு வருசம் நாலு கெடா வெட்டி நல்லா சாப்பிட்டுட்டு இருந்தாங்க. உங்கள மாதிரி ஒருத்தர் பகக்த்துல பெருமாள் வைங்கன்னு சொன்னாரு. நம்பி வெச்சானுங்க. கொஞ்சம்கொஞ்சமா பெருமாள் பெருமாளுன்னு உங்கள மாதிரி நிறைய ஆட்கள் வந்து தெரியாத பாஷையில மந்திரம் சொன்னானுங்க. அப்புறம் பெருமாள் இருக்கிற இடத்துல கெடா வெட்டக் கூடாதுன்னு சொன்னானுங்க. அப்ப பாத்து ஊருக்குள்ள சிக்கன்குனியா வந்துச்சு. பாருங்கோ பெருமாளுக்கே பொறுக்கலன்னு சொன்னாங்க. உடனே கெடா வெட்ட நிறுத்திப்புட்டானுங்க. இப்ப சக்கரைப்பொங்கல இலைல வெச்சி தின்கானுங்க. சக்கரை பொங்கல் திங்குறதுக்கா கோவில் கொடை கொண்டாடுறோம்.
அவார்: சரி அத விடுங்கோ இந்த மிளகாய் காத்த பெருமாள் இருக்காரில்லையா
இவர் : ஹலோ ஹல்லல்லோ. என்னா சைடு கேப்ல எங்க மிளகாய் காத்தான் சாமிய மிளகாய் காத்த பெருமாள்ன்னு மாத்துறீங்க. இந்த டிகால்டி வேலையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.
அவார் : இல்லங்க இப்பதான் நினைவு வருது. நம்ம மதத்துல “ஜலப்புராணம்” ன்னு ஒண்ணு இருக்கு.
இவர் : அப்படியா சொல்லவே இல்ல.
அவார் : ஹாங் இருக்கு.. ஜலப்புராணத்துல பெருமாள் மிளகாயையும் காப்பார்ன்னு ஒரு கத இருக்கு. எனக்கு இப்பதான் நினைவு இருக்கு.
இவர்: அந்த புராணம் பழமையானதா
அவார்: ஆமா ஆமா
இவர் : இப்ப திடீருன்னு ஜலப்புராணத்துல மிளகாய் காத்த பெருமாள் இருக்கிறது நினைவுக்கு வந்துச்சாக்கும்.
அவார் : ஜலப்புராணம் நாலாயிரம் வருசமா இருக்கு. எனக்கு இப்பத்தான் நினைவுக்கு வந்துச்சு.
இவர் : பச்சை மிளகாய் இந்தியாவுக்கு வந்ததே 15 ஆம் நூற்றாண்டுதான். நாங்க மிளகாய் காத்தான்ன்னு ஒரு சாமியை உருவாக்கினதே 150 வருசத்துக்கு முன்னாடிதான். பிறகு ஏய்யா பெருமாளுக்கும் எங்க மிளகாய் காத்தானுக்கும் கனெக்‌ஷன் போட்டு கத சொல்ற.
அவார் : அது வந்து
இவர் : போதும் உங்க தந்திரம் புரியுது. இனிமேலும் எங்கள ஏமாத்த முடியாது. எங்க வழிபாட்டு முறையில யாரையும் உள்ள விட மாட்டோம். இருங்க எங்க வழிபாட்டு முறையில உங்க முகத்துல அரைச்ச மிளகாயை கரைச்சி ஊத்துறேன்.
அவார் : அட இதென்ன வந்தது. ஏன் கோபம்ங்கிறேன். நீங்க “மிளகாய் காத்தான்” சாமிய நல்லா கும்பிடுங்கோ.
இவர் : நீங்க கிறிஸ்தவங்கள மதம் மாத்துறாங்க, மதம் மாத்துறாங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க இந்த “கனெக்சன்” முறையில எத்தன வழிபாட்ட உங்க மதத்துக்கு மாத்துனீங்கன்னு யோசிங்க. உங்களுக்கு அவுங்க மேலே கோபம் வராது.
அவார்: எனக்கு காது கேக்கல. காது கேக்கல. காதே கேக்கல.
இவர் : உண்மையைச் சொன்னா உங்களுக்கு காது கேக்காதுதான். ஆனா உண்மையை பேச எனக்கு வாயிருக்கு. அறிவு இருக்கு புரிஞ்சிகோங்க. எங்கள
நீங்க ஏமாத்தினது எல்லாம். பண்டு பண்டு ஒரு காலத்துல சரியா. இப்ப கிளம்புங்க. காத்துவரட்டும்.

Tuesday, June 19, 2018

எது எளிமை - தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்

எது எளிமை
*******************************
தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்!
எளிமையின் சிகரமென கக்கனையே எடுத்துரைக்கும் பல தி.மு.கவினரைப் பார்த்து எனக்கு சிரிப்பதா, வேதனைப்படுவதா? என திகைக்கின்றேன் தோழா!
அந்த காலத்திலேயே எம்.ஏ படித்தும், முதலமைச்சராய் பதவி வகித்தும், தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவை விட எளிமையான ஓர் மனிதரைக் காட்ட இயலுமா?
சாதிக் பாட்ஷாவை அறிவீர்களா?
அவரைப்பற்றியும் நான் சொல்லப் போவதில்லை. போய்த் தேடுங்கள், வரலாற்றைத் தேடுங்கள்.
தி.மு.கவில் எத்தனை,எத்தனை அமைச்சர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், மொழிப்போர் ஈகியர்கள், திராவிட ஆய்வாளர்கள் தனக்காக வாழாமல் தமிழினத்திற்காக வாழ்ந்து மறைந்தனர் எனத் தெரியுமா?
தலைவர் கலைஞரின் எளிமையை அறிவாயா? தன் வாழ்நாளின் எத்தனை இரவுகளை பட்டினியாய், கடும் எதிர்ப்புகளின் மத்தியில் கடந்த மாபெரும் தலைவர்.
இங்கே ஓர் கேள்வி எழும்! சொத்தும், சொந்தமும் கொண்ட மனிதரை எப்படி எளிமையானவர் என்கிறீர்? கேளுங்கள்..,
எளிமைக்கும் சொத்து, நாகரிகமான உடை, சொந்தங்களுக்கும் தொடர்ப்பேது? எளிமை என்றாலே பிச்சைக்காரராய் வாழ்வது போன்ற தவறான புரிதல் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. தவறு.
காந்தியார் உடையில் எளிமையாக இருந்தார், ஆனால் வாழ்ந்ததோ பிர்லாவின் மாளிகையில்!
காமராசரின், கக்கனின், கலாமின் எளிமையால் மக்களுக்கு என்ன பலன்?
தங்களை எளிமையாக அறிவித்துக் கொண்ட இவர்களால் பலனடைந்தோர் எளிய மக்களல்ல!
பார்ப்பனீயமும், முதலாளித்துவமும், அரசு இயந்திரங்களும்தானே!
ஆக; எளிமை என்பது மக்களோடு மக்களாக, மக்களுக்காக வாழும் மனிதர்களின் செயலே தீர்மானிக்கும்.
இப்போது சொல்லுங்கள் கலைஞரின் அயராத உழைப்பும், கழக அரசும், எப்போதும் அவரை யாரும் சென்று சந்திக்கும் வாய்ப்பும், மக்களின் மீதான அவரின் பற்றும் எளிமையன்றோ!
(ஜெயலலிதாவின் செயல்பாடுகளை ஒப்பு நோக்குக)
அவரைத் தொடர்ந்து செயல் தலைவரின் எளிமை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மக்களிடமே எப்போதும் பயணிப்பதும், மக்களுக்கு பிரச்சினை எனில் சாலையில் இறங்கிப் போராடுவதும், இயற்கை பேரிடர்களில் மக்களில் ஒருவராய் இறங்கிப் பணியாற்றுவதும், அடுதவரின் கருத்துக்களை பணிவுடன் செவிசாய்பதும் என செயல் தலைவரின் எளிமை பாட்டாளி வர்க்கத்தின் எடுத்துக்காட்டு அல்லவா?
தோழனே!
கழகத்தின் வரலாற்றை சளைக்காமல் தேடு!
தேவையிருக்கிறது நீ தேடு!!
இதுவரை தி.மு.கழகத்தை சொன்னேனே..,
அதன் தலைவர் வென்தாடி வேந்தரின் வரலாறு தெரியாவிடில் எதையும் படிப்பது பாழ் அன்றோ?
இல்லாதவன் எளிமையாய் இருப்பது கடினமன்று.
அனைத்தும் இருந்தும் தனக்காக பயன்கொள்ளாமல் தமிழினத்திற்கு கொடுத்துச் சென்ற எம் தந்தை பெரியாரை விட எளிமையாய் வாழ்ந்த ஒருவரை காட்ட இயலுமா?
தோழனே!
வரலாற்றைப்படி, திராவிட இயக்கத்தின் எளிமைதான் உன்னை பகட்டாக்கியிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தியாகம்தான் உனை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வலிமைதான் உன்னை துணிந்துப் பேச வைத்திருக்கிறது.
இதோ, திராவிட இயக்கம்தான் உன்னை சிந்திக்கத் தூண்டுகிறது!
தன் வரலாற்றை அறியாதவன் சூதை வெல்ல இயலாது.
படி,படி,படி..
வரலாற்றைப் படி.
கக்கனைப் போல் 1000 மடங்கு எளிமையாய் வாழ்ந்த தலைவர்களைக் கொண்ட நீ கக்கனைப் பார்த்து மிரள்வது எதனால்?
வரலாறு அறியாததால் என்பதை அறிவாயா?
எளிமை என்பது பரதேசியாக வாழ்ந்து மடிவதல்ல
மானுடநேயத்தோடு தன்னலமற்ற மக்கள் பணியாற்றுவதே எளிமையாகும்.
படி தோழனே
திராவிட இயக்க வரலாற்றை படி!
இல்லையேல்,
அடிமைகளின் கட்சி அழிவதைப் பார்த்தாயா?
வரலாற்றை அறியாவிடில் நீ அழிவதை உன் அடுத்த தலைமுறை பார்த்து இரசிக்கும்.
எனதருமை கழகத் தோழனே!
வரலாற்றைப் படி!
அடுத்த தலைமுறைக்கு அள்ளிக் கொடுக்கவாவது படி!


தேச துரோகி -

தேச துரோகி

இது இப்போது சாதாரண வார்த்தை போல் ஆகிவிட்டது

ஆனால் இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்

தினமும் செய்தி தாள்களில் பார்க்கும் போது இவர்கள் உண்மை யாலும் தேச துரோகிகள் தான் நக்சல் வாதிகள் தான் என்று நினைத்த மக்கள் தான் நாம்

இன்று இவ்வளவு சமூக ஊடகள் இருந்தும் இதனுடை பாதகங்கள் பற்றி அரசுக்கு சொல்லியும் வீடு நிலம் என்று ஒன்று விடாமல் நம்மிடம் இருந்து பிடிங்கி முதலாளிகளுக்கு கொடுக்கும் போது நமக்கு எப்படி வலிக்கின்றது

இதை 10, 20 ஆண்டுகளுக்கு முன் அந்த மக்கள் யாரிடம் சொல்ல வேண்டும் என்பது கூட தெரியாமல் தன்னுணர்வுரை வெளிப்படுத்த செய்த தவறை மட்டும் சுட்டி காட்டி அவர்களை தன் இடத்தை தன்னுடைய அடையாளத்தை இழந்து நக்சல்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை பதித்தோம்

இது் மண்ணாசை இல்லை எங்களின் உரிமை என்பதை கூட உணர முடியவில்லை உங்களால்

வளர்ச்சி என்றும் வேகமாக சென்று வரலாம் என்று கூறும் நீங்கள் செங்கல்ப்பட்டு முதல் சென்னை வரை உள்ள இடங்களை 8வழி சாலை ஆக்குங்கள் அங்கே தான் பிரச்சனை உள்ளது பின் தெரியும் யார் துரோகிகள் தீவிரவாதிகள் என்று?


நாம தமிழ்தான் பேசுகிறோமா?

முன்னோர்கள் அவர்களின் எழுத்துகளில் பிறமொழிச்சொற்களை பயன்படுத்திருக்கிறார்களா இல்லையா எனப் பார்ப்போம் என்று சென்றபோதுதான். மேலும் ஒரு குழப்பம் வந்தது. முதலில் வடமொழிச் சொற்கள் எவை எவைகள் எனத்தெரிந்திருக்கவேண்டும் அப்போதுதானே மிக எளிதாக கண்டுப்பிடிக்கமுடியும்.
யார் யாரெல்லாம் என்னுடைய இந்த பயணத்தில் கலந்துகொள்ளப் போறீங்க? வாங்க போவோம். தமிழ்ச்சொற்களில் கலந்துக் கிடக்கும் வடமொழிச்சொற்கள் எவை எவைகள் என்றும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதைப்பற்றி அலசுவோம்.
வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே!
அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம்,கால்கோள்
ஆசை - விருப்பம்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இந்திரன் - வேந்தன்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்.
உபமானம் - ஒப்புப்பொருள்.
ஐசுவரியம் - செல்வம்.
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன்,புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு.
சொப்பனம் - கனவு.
சோதி - ஒளி.
ஞானம் - அறிவு.
தண்டித்தல் - ஒற்றுதல்.
தத்துவம் - உண்மை.
தரித்திரம் - வறுமை.
தர்க்கம் - சொற்போர்.
தவம் - நோம்பு.
தானதிகாரி - பொருளாளர்.
தாகம் - வேட்க்கை.
தாசன் - அடியான்.
தாரம் - மனைவி.
தானியம் - கூலம்.
தினம் - நாள்.
தெய்வம் - கடவுள்.
தேசம் - நாடு.
நகரம் - பட்டினம்.
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு.
நியாயவாதி - வழக்குரைப்போன்.
நிர்வாகசபை - ஆட்ச்சிக்குழு.
நித்திரை - உறக்கம்.
நீதிபதி - முறைவேந்தன்.
பக்தி - அன்பு.
பரீட்சை - தேர்வு.
பத்திரம் - ஆவணம்.
பத்திரிகை - இதழ்.
பத்திராதிபர் - இதழாசிரியர்.
பாகம் - கூறு.
பாத்திரம் - கலம், தகுதி.
பிரகாசம் - ஒளி.
பிரசங்கம் - சொற்ப்பொழிவு.
பிரமசாரி - மாணி.
புராணம் - பழமை, பழங்கதை.
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்.
பூசை - வழிபாடு.
மந்திரி - அமைச்சன்.
மந்திரம் - மறைமொழி.
மாதம் - திங்கள்.
மாமிசம் - ஊன்.
முகூர்த்தம் - ஓரை.
முத்தி - வீடு.
மேகம் - முகில்.
மோட்சம் - வீடு.
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு.
வாகனம் - ஊர்தி.
வாதி - வழக்காளி.
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை.
விதி - ஊழ்.
விஞ்ஞானம் - அறிவியல்.
விஷேசம் - சிறப்பு.
வித்தியாசம் - வேறுபாடு.
விமர்சனம் - திறனாய்வு.
வியாசம் - கட்டுரை.
வைத்தியர் - மருத்துவர்.
ஸ்ரீமான் - திருவாளர்.
யப்பா இப்பவே கண்ணை கட்டுதே! இன்னும் எவ்வளவோ இருக்கு, இப்ப சொல்லுங்க , நாம தமிழ்தான் பேசுகிறோமா???????

ஈத்தரபயலுகளா..

சேவல்கள் எண்ணிக்கொள்ளுமாம் தாங்கள் கூவுவதால் தான் பொழுது விடிகிறதென்று..
சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு.. பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன.. 
எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது..
பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்...
பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்.. 
..
சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று ‍.அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது..
..
இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது .. தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை..
..
எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..? கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள் 
ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா ‌மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிநிதிக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் ..
அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான் ..
..
பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி..
ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாஜி அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை .. குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன பிடிங்கி கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜாஜியை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது.. பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே.. மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் ..என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே .. இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாஜியை வீழித்தி காமராஜரை கொண்டுவந்து குழந்தைகள் படிககணுமென்ற பெரியாரை ..
இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்.. பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி .. தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்.. ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை.
அடுக்கிகொண்டு போகலாம்.. 
கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்..
..
இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது
ஈத்தரபயலுகளா..

எளிமையை ரொமாண்டிசைஸ் பண்றவன் பொறாமை படைத்தவன்

யார் எல்லாம் எளிமையை ரொமாண்டிசைஸ் பண்றானோ அவன் எல்லாம் அடிப்படையில் பொறாமை குணம் படைத்தவனாக இருக்க வாய்ப்பு அதிகம்.
ஒரு முதல்வரோ இல்லை அரசியல்வாதியோ செய்யக்கூடிய செய்த ஏராளமான நல்லவிசயங்கள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு அவர் சாகும்போது அவரிடம் இரண்டு வேட்டிதான் இருந்தது தெரியுமா என்கிற ரேஞ்சில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதாவது ஒரு டாக்டர் சைக்கிளில் போய் வைத்தியம் பார்த்தால் அவர் நல்ல டாக்கடர். அதுவே கார், பங்களா என்று இருந்தால் மோசமான டாக்டர். இதுதான் நம்ம ஆட்களின் மனநிலை.

சிவகுமார் - சாதிவெறியன் - பழைமைவாதம் பேசி திரியும் மூடர்

சிவகுமார்..
சாதிவெறியன் எனச் சொல்லி கடந்துவிடலாம் ஆனால் முன்பு பேசியதை மீண்டும்,கதைப்பதிலிருந்தே இந்த சமூகத்தில் வாழும் சில விசகிருமிகளில் தானும் ஒருவராக சொல்கிறார்..
..
ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்தால் தவறு நடக்குமென சொல்வதிலிருந்து அது பழைய சங்கராச்சாரியர் வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரி என்றாரே அதையை இவர் மீண்டும் மொழிகிறார்.. சினிமா பின்னணியில் வாழ்ந்தவரிடம் தான் சார்ந்த துறையில் பெண்களை இவர் எந்தளவிற்கு மதித்திருப்பாரென நமக்கு புரிகிறது.. யோக்கியனாக தன்னை காட்டிக்கொள்ளும் இவரின் சாதிய பின்புலம் அதனோடு கொண்ட வெறி ஏற்கனவே நமக்கு தெரிந்ததென்றாலும்.. ஒரு பொதுவெளில் குறிப்பிட்ட அதிலும் IT துறை சார்ந்த பெண்களை கண்ணிய குறைவாக தரம்தாழ்த்தி பேசுவதென்பது இவரின் மனதின் கசடை நமக்கு உணர்த்துகிறது..
நாமும் அவரைப் போல இறங்கி கதைக்க தேவையில்லை.. அவரின் பிறவி கோளாறென கருதுவோம்.. 
..
சினிமாவில் நாயகன் வேசம் கட்டினால் நாலும் தெரிந்தவன் போல் பேச இங்குதான் முடிகிறது .. தெளிவற்ற வறட்டு சிந்தனையை கொண்டுவந்து இங்கே கொட்டுகிறார்கள்.. தங்களை யோக்கியர்கள் போலவும் .. மிக சிறந்த பண்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள நினைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தொடர்ந்து வருகிறது.. அரசியல் ஆன்மீகம் என பழைய நடிகர்கள் பொழுது போகாமல் எதையாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.. மிக மோசமான விமர்சனபார்வையை சிவகுமார் வைத்துள்ளார்.. என்ன ஆச்சர்யம் .. IT துறையில் அதிகளவில் மேட்டுக்குடியினரே இருந்தும் யாரும் அவருக்கெதிராக கருத்தை கண்டத்தனத்தை சிறு எதிர்ப்பை கூட பதியவில்லை..
..
பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமையை பறைசாற்றும் காலகட்டத்தில் பழைமைவாதம் பேசி திரியும் இப்படிபட்ட மூடர்களை புறந்தள்ளவேண்டும் .. பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது .. பிற்போக்குவாதிகளில் வெற்று கூச்சலை கடந்து வெற்றி பெறுவோம் .. பெண்களை இழிவு செய்யும் மடையர்களை விரட்டியடிப்போம்.. சிவகுமார் போன்ற பிற்போக்குவாதிகளின் குடும்ப பெண்களுக்கு ஆறுதலை சொல்வோம்.. 
..
பெண்களை இழிவாக பேசும் சிவகுமார் நாவடக்குவது நல்லது.. 

மனமோ கருணாநிதியை தேடுகிறது

2005 இல் கட்டுரைப்போட்டி ஒன்றிற்காக மும்பை (அன்று பம்பாய்) சென்றிருந்த போது, இந்தி தெரியாமல் முழித்த போது திமுக மீது எரிச்சலும் வெறுப்பும் கோபமும் வந்தது. அது மட்டுமில்லாமல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எங்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் "இந்தியை படிக்கவிடாமல் செய்த கருணாநிதியையும், திமுக வையும்" மேடையில் கண்ணீரோடும் மிகுந்த கோபத்தோடும் வசைபாடினேன். அப்போது எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் வரலாறும் தெரியாது. திமுக தான் இந்தியை படிக்கவிடாமல் தடுத்தது என்ற செய்தியை மட்டும் பத்திரிக்கை(அன்றைய வாட்ஸாப்) படித்து தெரிந்துவைத்திருந்தேன்.
2009 களுக்குப் பின்னர் அரசியலை படிக்க, கவனிக்க ஆரம்பித்த பின்னர் வாங்கிய புத்தகங்களில் முதன்மையான புத்தகம் பழ கருப்பையா எழுதிய "கருணாநிதி என்ன கடவுளா?".
இன்று 2018. கருணாநிதி உடல்நலமின்மையால் செயல்படாமல் இருக்கிறார்.
"கருணாநிதி என்ன கடவுளா" புத்தகம் எழுதிய பழ கருப்பையாவோ திமுகவில் சேர்ந்துவிட்டார்.
இந்திக்காக கருணாநிதியை வசைபாடிய நானோ திமுகவின் பாதையில் இந்தி எதிர்ப்பு பாதையில் நிற்கிறேன்.
என் மனமோ கருணாநிதியை தேடுகிறது.
என்ன காரணம்?
பல காரணம் இருந்தபோதிலும் ஒற்றைக்காரணமே போதுமே.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
இது அனைவருக்கும் தெரிந்த குறள். அதன் பொருளும் அனைவருக்கும் தெரிந்ததே.
மு.வரதராசனார் ஆத்திகர், "எழுத்துக்கள் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கின்றது". இது மு.வ உரை.
இனி மு.க முறை. அவர் சீரிய பகுத்தறிவாளர். இந்த குறள் தான் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல்குறள்.
ஆதிபகவன் என்றால் என்ன என்று திருவள்ளுவனுக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் உரை எழுதிய எல்லோரும் ஆதிபகவன் என்றால் கடவுள் என்றே உரை எழுதிவிட்டனர்.
கலைஞர் கருணாநிதி என்ன செய்திருக்க முடியும்? கடவுள் என்ற சொல்லை சொன்னால், பகுத்தறிவாளர் தன் நிலை தாழ்ந்து எழுத வேண்டி வருமே..
எனவே இப்படி எழுதினார்.
"அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை,
ஆதிபகவன் உலகில் உள்ள உயிர்களுக்கு முதன்மை".
இதுல வரும் ஆதிபகவனுக்கு என்ன பொருள்.?
நீ என்ன வேண்டுமானாலும் வச்சுக்கோ. எனக்கு "ஆதிபகவன் னா கடவுள் இல்லை".. ன்னு சொல்லிட்டார் மு.க.
படிப்பவர் சாய்வைப் பொறுத்து ஆதிபகவன் பொருள் மாறும். ஆனால் எனக்கு ஆதிபகவன் னா கடவுள் கிடையாது. ஏன்னா ஆதிபகவன் னு எழுதிய திருவள்ளுவரே எந்த பொருளையும் சொல்லவில்லை, நான் ஏன்டா சொல்லனும் என்கிறார் கலைஞர். உனக்கு தேவைப்பட்டதை நீ வச்சுக்கோ. அவ்ளோ தான்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள குறளுக்கு விளக்கம் எழுதும்போது, "கடவுள்" என்ற சொல்லையோ, அந்தப் பொருளையோ பயன்படுத்தாமல் விளக்கம் எழுதும் திறமை, தைரியம், நுண்ணறிவு யாருக்கு வரும்?
அது கலைஞருக்கு உண்டு. இந்த ஒற்றைக்காரணம் போதாதா? கலைஞரை என் மனம் நினைக்க?

கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்

கிருஷ்ண ராஜசாகர் ஆரம்பம் 1926
கபினி அணை கட்ட ஆரம்பித்தது 1959
ஹேரங்கி 1964 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
ஹேமாவதி 1968ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது
கலைஞர் முதல்வரானது 1969ல்தான்
கலைஞர் அரசு புதிய அணைகளை கட்டுவதை எதிர்த்து வழக்குபோட்டதை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தனது 25.1.1971 தீர்பில் டிஸ்மிஸ் செய்துவிட்டது
ஆனா கலைஞர் அணை கட்டியதை தடுக்காமல் விட்டுவிட்டாராம்
பொய்க்கு மேல் பொய் சொல்றானுங்க


 கர்நாடகா அணை கட்டியதை கலைஞர் தடுக்க முயற்சிக்கான ஆதாரம் - https://indiankanoon.org/doc/1945849/

பொய் சொல்ற பயலுக பூரா திமுக என்ற ஒவ்வாமை நோய் பிடித்தவர்கள். சொந்த புத்தியில்லாத முண்டங்கள். இவர்கள் திமுக எதிர்ப்பு என்ற கண்ணாடியை கழற்றாத வரைக்கும் இப்படித்தான் ஊளையிடுவார்கள். பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவனுங்க!

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதில்லை என்ற குற்றச்சாட்டை களைய என்ன செய்யலாம்?
கல்வி வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள், நீதித்துறை என அனைத்து இடங்களிலும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும்! பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கேற்ப 4% இட ஒதுக்கீடு தரப்படவேண்டும்! சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் வகுப்பு வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 100 சதவீத இடங்களும் அதற்கேற்றவாறு முழுமையாக பகிரப்படவேண்டும்..!
இதற்கு பார்ப்பனர்கள் தங்களது முழு ஆதரவையும் தரவேண்டும்!

பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடுமா

கேள்வி: பள்ளியில் சேர்க்கும் போது சாதி குறிப்பிடாமல் விட்டால், சாதி ஒழிந்து விடும் என்கிறார்களே? இன்னும் சிலர் சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடலாம் என்கிறார்களே?
பதில்:
சாதியை அழித்தொழிக்கும் வழி என்று அண்ணல் அம்பேத்கர் ஒரு நூல் எழுதியுள்ளார். அவர் கூட இப்படி எல்லாம் சாதியை ஒழிக்கலாம் என்று கூறவில்லை.
எப்படி ஏழை மக்களுக்குப் பயன்படக்கூடிய சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதை ஒரு பெரிய புரட்சி போல பரப்பினார்களோ, அதே போல் இதையும் விசமத்தனமாக ஒரு சாதனை போன்று பரப்புகிறார்கள்.
பெரும்பான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய சரியான அறிமுகம் இல்லா நிலையில், எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் பயன்படுமோ, அவர்கள் தான் இதை நம்பிப் பலியாவார்கள்.
இட ஒதுக்கீடு என்பது பல தலைமுறைகள் போராடிப் பெற்ற அரசியல் சாசன உரிமை. அது உங்கள் முன்னோர் உங்கள் குழந்தைகள் பெயரில் விட்டுச் சென்ற சொத்து. அதை விற்றுத் திங்க உங்களுக்கு உரிமை கிடையாது. இட ஒதுக்கீடு தனக்கு தேவையா இல்லையா என்று உங்கள் குழந்தை தான் முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் உயிரின வகையில் மனிதன். இனத்தால் திராவிடர். மொழியால் தமிழர். நாட்டால் இந்தியர். எனக்கு மதமே இல்லை என்று நீங்கள் எழுதிக் கொடுத்தாலும் அரசியச் சாசன வரையறைப் படி நீங்கள் கிறித்தவம், இசுலாம் போன்ற பிற நாட்டுச் சமயங்களைப் பின்பற்றாவிட்டால் தானாகவே இந்து என்று கணக்கில் கொள்ளப்படுவீர்கள். அந்த இந்து சமய நூல்கள் உங்களைச் சூத்திரன் (வேசி மகன்) என்றும் பஞ்சமன் (அதனினும் இழிவான தீண்டத்தகாதவன்) என்றும் தான் எழுதி வைத்திருக்கின்றன.
எனவே, சாதி/சமயம் என்னும் இடத்தில் மனிதன், தமிழன், இந்தியன் என்றெல்லாம் குறிப்பிடும் அப்துல்கலாம் தனமான பம்மாத்துகளை ஒழித்து விட்டு சாதிச் சான்றிதழில் உங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் சாசன உரிமையைப் பேணுங்கள்.

நல்லவனா அரசியல் செய்வதா

எனக்கு தன்மானம் இருக்கு என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது சிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த கேவலமான, அருவறுப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிறேன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்;
ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன் !
- தொல்.திருமாவளவன்.

டன் கணக்குல அரிசி ஏத்திட்டு வந்த ஆஸ்திரேலிய கப்பல்

டன் கணக்குல அரிசி ஏத்திட்டு வந்த ஆஸ்திரேலிய கப்பலை.. விடுதலை புலிகள் நடுகடலில் நிறுத்தி அதிலிருந்தவர்களை தொரத்திவிட்டுட்டு.. அந்த கப்பல்ல வெச்சி சுட்டு பழகிக்கோன்னு தன்னிடம் தலைவர் பிரபாகரன் சொன்னதா சீமான் பேசிய காணொளி பலர் பார்த்திருப்பீங்க... கிட்டதட்ட விடுதலை புலிகளை ஏதோ கடற்கொள்ளையர்களை போல மக்கள் மனதில் பதியவைக்கும் அயோக்கியத்தனமான பேச்சு அது...
Farhah III என்ற ஜோர்டானிய கப்பல் 25க்கு மேற்பட்ட ஜோர்டானிய... எகிப்த்திய பயணிகளோடு இந்திய காக்கிநாடாவுல இருந்து 14,000 டன் அரிசியோட தென் ஆப்ரிக்கா டர்பன் நகருக்கு பயணமாகும்போது வடக்கு-கிழக்கு இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரைல கப்பல் நிலைதடுமாறி பயணிப்பதை கண்ட கடற்படை புலிகள்..அதில் இலங்கை ராணுவத்தின் வேலை இருக்குமோ என்று சந்தேகத்துடன் உள்ளே சென்று அங்கு உயிருக்கு போராடிய கடற்பயணிகளை காப்பாற்றியதோடு.. விடுதலைப்புலிகளின் பொறியாளர்கள் மூலம் கப்பலை சரி செய்ய முயன்று.. முடியாமல் போனதால் அங்கேயே கப்பலை விட்டுவிட்டு பயணிகளை காப்பாற்றி கரை சேர்த்தனர்... அனால் இலங்கையோ இதை ஒரு கடல்கொள்ளையாக உருவகபடுத்தி சர்வதேச கடல் விதிகளை புலிகள் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு வைத்தனர்... அதை உடனே மறுத்த புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் அங்கு நடந்தவற்றையும்.. கப்பலில் வந்தவர்களை காப்பாற்றியதையும் விளக்கினார்.. இதே புலிகளின் ஐ.நா. தொடர்பு அதிகாரி பூவரேசன் பின்னர் சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழுவிடம் கப்பலில் நடந்தவற்றை எடுத்துக் கூறி தங்கள் மீது சுமத்தபட்ட 'கடற்கொள்ளையர்கள்' பட்டத்தை தவிடுபொடியாக்கினார்..
அனால் அதே பட்டத்தை சீமான் தன்னுடைய சுயநல அயோக்கியத்தனத்திற்காக தலைவர் பிரபாகரன் அரிசி கப்பலை நிறுத்தி பயணிகளை ஓடவிட்டதாகவும்... அந்த கப்பலை வெச்சு சுட்டு வெளயாட சொன்னாருன்னு சொன்னதும் சிலுத்து போய் தம்பிகள் கை தட்டலாம்.. அனா வரலாறு ஒரு நாள் வாயில தூக்கி உண்மையை வைக்கும்.. அதுவரை அடிச்சுவிடுங்கப்பா...

பூங்கோதையும் 100 ரூபாயும்

பூங்கோதையும் 100 ரூபாயும்
காலை ஆறு மணி அப்பாவின் மொபைல் அலாரம் ரீங்காரம் ஒலிக்க சட்டென எழுந்தாள் பூங்கோதை, ஏதோ கலவரம் கலந்த முகம் ஏதோ ஒன்றை நினைத்து கொண்டு அப்படியே படுக்கையில் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்து வேகமாக தன் ஸ்கூல் பேக் இருக்கும் இடத்திற்கு சென்று ஸ்கூல் பேக்கில் உள்ள ஜிப்பைத் திறந்து ஏதோ தேடிக்கொண்டிருந்தாள். ஆம் அவள் கையில் இப்பொழுது 100 ரூபாய். வேகமாக ஆர்ப்பரித்து அடித்து திரும்பி மெல்ல அழகாக உள்வாங்கி செல்லும் கடல் அலைபோல பூங்கோதை மிகுந்த ஆசுவாசத்துடன் மீண்டும் படுக்கைக்குச் சென்று கண்ணயர்ந்தாள்.
ஏது அந்த நூறு ரூபாய் அதற்கு ஏன் பூங்கோதை இவ்வளவு அதிர்ச்சியானாள். அதற்கு நாம் ஆறு நாள்களுக்கு பின்னே செல்ல வேண்டும்.
பூங்கோதையின் அப்பா பாரி வழக்கமாக காலையில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். அன்று பூங்கோதைக்கும் லீவு என்பதால் அவளையும் கூட கூட்டி சென்றார். பாரி வேகமாக மொபைல் போனை காதில் வைத்துக்கொண்டு வாக்கிங் செல்ல பூங்கோதை அவரை பின் தொடர்ந்தாள்.
அப்போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த நூறு ரூபாய். ஆம் இன்று காலையில் பதட்டத்துடன் பேக்கிலிருந்து எடுத்து பார்த்தாளே அதே நூறு ரூபாய். அதனை எடுத்த பூங்கோதை பாரியை கூப்பிட்டாள் பாரியோ போன் கவனத்தில் இவளை கவனிக்கவில்லை. மீண்டும் அந்த நூறு ரூபாயை பார்த்த அவள் எண்ணத்தில் டேரி மில்க் சாக்கலேட், குல்பி ஜஸ்கிரிம் என்று ஓட அதை மடித்து தன் பைக்குள் வைத்து கொண்டாள்.
அன்று காலை கையில் நூறு ரூபாய் இருக்கும் மகிழ்ச்சியில் ஒரே ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பினாள். பூங்கோதையின் பள்ளி வீட்டிற்கு அருகாமையில் ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் நடந்தே செல்வாள். அவள் பள்ளி அருகிலேயே மாநகராட்சி பள்ளி ஒன்றும் உண்டு என்பதால் நிறைய பிள்ளைகளும் பெற்றோர்களும் உடன் வருவதால் அவள் பயம் ஏதும் இன்றி தனியே சென்று வருவாள். செல்லும் வழியில் ரோடு போடுவதால் பள்ளம் பறித்து கற்களை மேலே கொட்டி வைத்திருந்தார்கள். அந்த கற்களினால் பூங்கோதையின் shoe சற்று நொடித்து நொடித்து சென்றதால் ரோட்டினை திட்டிக் கொண்டே பூங்கோதை நடந்து சென்று பள்ளியை அடைந்தாள்.
முதல் பிரியட் வரப்பவே பூங்கோதைக்கு நியாபகம் முழுக்க பிரேக் டேரி மில்க் சாக்லேட்லே இருந்தது. பிரேக் மணி ஒலித்து பூங்கோதை நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வேகமாக கேண்டின்க்கு ஓடினாள்.
மூச்சு வாங்கிக் கொண்டே கேண்டின் அண்ணாவிடம் அண்ணா ஒரு டேரி மில்க் சாக்லேட் என்றாள். அவரும் ஒரு டேரி மில்க் எடுத்து கொடுத்தார். பூங்கோதை தன் பையில் இருந்த நூறு ரூபாய்யை நீட்டானள், அதை வாங்கிய கேண்டின் அண்ணா
“ என்னமா இது வெறும் பேப்பரை தர”
அந்த நோட்டை மீண்டும் வாங்கி பார்த்த பூங்கோதை
“ இல்லை அண்ணா அது நூறு ரூபாய் நல்லா பாருங்கள”
என்றாள்.
மீண்டும் கேண்டின் அண்ணா
“இல்லமா நல்லா பாரு அது வெறும் பேப்பர்மா, நீ வேணும்னா சாக்லேட் எடுத்துட்டு போ பணம் அப்புறமா அப்பாகிட்ட வாங்கிக்கிறேன்”
என்றார்
பூங்கோதைக்கு ஒரே குழப்பம். சரி பக்கத்து ஸ்டேஸ்னரி போய் செக் பண்ணி பாக்லாம் என்று பக்கத்தில் உள்ள ஸ்டேஸ்னரிக்கு சென்றாள்.
“ அக்கா எனக்கு ஒரு பேனா வேண்டும்”
என்றாள் பூங்கோதை.
“ இதோ இதை எடுத்துக்கோமா 20 ரூபிஸ்மா”
“ ம்ம்ம்ம் ஒகே கா இந்தாங்க 100 ரூபிஸ்” என்றாள் பூங்கோதை
“ என்னம்மா வெள்ளை தாளை கொடுத்துட்டு நூறு ரூபானு சொல்லுற"
“ இல்லை அக்கா நல்லா பாருங்க இது நூறு ரூபாய்”
என்றாள் பூங்கோதை.
“ இல்லமா இது வெறும்‌ பேப்பர் தான்மா’
என்றாள் ஸ்டேஸ்னரி அக்கா.
பூங்கோதேக்கு ஒரே குழப்பம். அப்படியை அந்த நூறு ரூபாயை பையில் மடித்து வைத்துக்கொண்டு குழப்பத்துடன் ஒரு மரத்தடியில் நிழலில் அமர்ந்தாள்.
அப்போது ஒரு குரல் பூங்கோதை பூங்கோதை என்றது
இவள் முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் அந்த குரல் பூங்கோதை பூங்கோதை என்று அழைத்தது.
மீண்டும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரும் இல்லை.
மீண்டும் கேட்கவே அப்போதுதான் அந்த சத்தம் தன் பையினுள் இருந்து வருவதை உணர்ந்தாள்.
உடனே அதிர்ச்சி அடைந்தாள் அந்த நூறு ரூபாயை எடுத்து வெளியே போட்டாள்.
ஆம் பேசியது அந்த நூறு ரூபாய்தான்.
“பூங்கோதை பூங்கோதை பயப்புடாதே நான் தான் நூறு ரூபாய் பேசுறன்”
“நிசமா நீ தான் பேசுறியா” என்றாள் பூங்கோதை
“ஆமா பூங்கோதை நான் தான் பேசுறான்" என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நீ பொய் சொல்ற நீ நூறு ரூபாயை கிடையாது நீ வெறும் பேப்பர்” என்றாள் பூங்கோதை.
“ இல்லே பூங்கோதை நான் வெறும் பேப்பர் இல்லை நூறு ரூபாய் தான் “ என்றது நூறு ரூபாய்.
“ அப்புறம் ஏன் கேட்டின் அண்ணாவும் ஸ்டேஸ்னரி அக்காவும் உன்னை பேப்பர்னு சொன்னாங்க”
என்றாள் ‌பூங்கோதை
“ ஆம்‌ அவர்களுக்கு நான் பேப்பராகத்தான் தெரிவேன்”
என்றது நூறு ரூபாய்.
“ அய்யோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
”குழம்பாதே பூங்கோதே நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்” என்றது நூறு ரூபாய்.
“ ம்ம்ம்ம். கேளு. “
“நான் யார் பூங்கோதை. நான் யாருக்கு சொந்தமானவன்” என்றது நூறு ரூபாய்
“ நீ நூறு ரூபாய். எனக்கு சொந்தமான்.”என்றாள் பூங்கோதை.
“நான் உனக்கு சொந்தமானவனா எப்படி பூங்கோதை” இது நூறு ரூபாய்.
“ நீ எனக்குதான் சொந்தம் நான் தானே உன்னை கீழே இருந்து எடுத்தேன். அப்படியென்றால் நான் தானே உன் சொந்தக்காரி” இது பூங்கோதை
“ கீழே இருந்து எடுத்த என்னை நீ எப்படி உரிமை கொண்டாட முடியும். நீ என்னை பெற எந்த உழைப்பையும் செலவழிக்க வில்லையே. அப்படி இருக்கையில் நீ எப்படி எனக்கு சொந்தக்காரி.” இது நூறு ரூபாய்.
அமைதியானாள் பூங்கோதை.
“ என்ன யோசிக்கிறாய் பூங்கோதை” என்றது நூறு ரூபாய்.
“ இல்லை நான் தான் உனக்கு முதலாளி. நான் சொல்ற மாதிரிதான் நீ கேட்க வேண்டும்” இது பூங்கோதை.
“ சரி பூங்கோதை அப்படி என்றால் நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம்” இது நூறு ரூபாய்.
“ என்ன பந்தயம்”
“ அதாவது 6 நாட்களுக்குள் நான் என் உரிமையாளரிடம் சென்றுவிடுவேன். அப்படி செல்லவில்லை என்றால் நீ என்னை ஏழாவது நாள் உன்னுடைய உரிமையாக்கிக் கொள். அதுவரை நீ என்னை செலவு செய்ய முடியாது நீ என்னை செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் உன்னை தவிர மற்ற அனைவருக்கும் நான் வெள்ளைத்தாள் ஆகவே தெரிவேன்” இது 100 ரூபாய்.
“ சரி நானும் பந்தயத்துக்கு வருகிறேன்” என்றாள் பூங்கோதை
பந்தயம் ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஓடியது.....
ஆம் இதுதான் கடைசி நாள் பூங்கோதை கலவரம் கலந்த முகத்துடன் பையிலிருந்த நூறு ரூபாய் எடுத்துப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்த நாள்.
இனி இன்று….
காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பினாள் பூங்கோதை. இன்று அவளுக்கு சற்று உற்சாகம் மிகுதியாக இருந்தது. ஏனென்றால் இன்று தான் அந்த நாள் பந்தயத்தில் இறுதி நாள். இன்று மட்டும் உரிமையாளர் கையில் நூறு ரூபாய் போகவில்லை என்றால் அது பூங்கோதைக்கு தான் சொந்தம்.
இப்போது பூங்கோதை உற்சாகத்துடன் அதே சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.இன்று parents meeting என்பதால் அவள் அம்மாவும் அவளுடன் வந்தாள். அவர்களுக்கு முன்னே சென்ற ஒரு மாநகராட்சி பள்ளி பையன் அவளை விட சிறிய வயது பையன் தன் வெறும் கால்களுடன் அந்தக் கற்கள் முட்கள் நிறைந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பூங்கோதையின் அம்மாவிற்கு பாவமாய் தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது அவள் அம்மாவுக்கு ஒரு யோசனை சரி அந்தப் பையனை அருகிலுள்ள செருப்பு கடைக்கு கூட்டி சென்று ஒரு புதிய செருப்பு வாங்கி தரலாம் என்று, உடனே அந்த பையனிடம் சென்று
தம்பி நான் உனக்கு செருப்பு வாங்கி தருகிறேன் என்று கடைக்கு வருகிறாயா என்றால் பூங்கோதை அம்மா
சரி வருகிறேன் அக்கா. என்றான் அந்தப் பையன்.
இருவரும் அருகில் உள்ள செருப்பு கடைக்கு சென்றனர். அங்கே 80 ரூபாய்க்கு ஒரு அழகான செருப்பு இருந்தது அதை வாங்கிய பூங்கோதை அம்மா அந்த பையனிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு பார்க்கும்போதுதான் தெரிகிறது பூங்கோதையின் அம்மா தன்னுடைய பர்சினை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கையில் காசும் இல்லை. சரி பூங்கோதை நீங்கள் இருவரும் இங்கேயே நில்லுங்கள் நான் வீட்டில் போய் பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து புறப்பட்டார்பூங்கோதை அம்மா.
இப்போது பூங்கோதைக்கு திடீரென்று ஒரு யோசனை நாம் அந்த 100 ரூபாய் கொடுத்து பார்ப்போமா என்று. கொஞ்சம் பயத்துடனே அந்த ரூபாயை எடுத்து கடைக்காரனிடம் நீட்டினாள்.
அவர் 80 ரூபாய் போக மீதி இருபது ரூபாயை தந்தார்.
பூங்கோதைக்கு ஒரே ஆச்சரியம். இன்று ஆறாவது நாள் தானே நியாயப்படி வெள்ளைத்தாளை தெரிந்திருக்க வேண்டும் எப்படி மாறியது என்று.
குழப்பத்தில் இருந்தால் பூங்கோதை.
அந்தப் பையன் செருப்பை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக
“ அக்கா எனக்கு அம்மா ஆறு நாட்களுக்கு முன்னாடி செருப்பு வாங்கி தரேன் என்று சொன்னால் ஆனால் ஏனோ எனக்கு வாங்கித் தராமல் விட்டு விட்டார். நீங்கள் வாங்கி கொடுத்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி அக்கா”
என்றான் அந்த பையன்.
பூங்கோதைக்கு இப்போதுதான் அனைத்தும் புரிந்தது……….
மீதமுள்ள 20 ரூபாயை அந்தப் பையன் கையில் கொடுத்து dairy milk chocolate வாங்கி தின்ன சொன்னால் பூங்கோதை...

நிலமும் நிச்சியமும்

நிலமும் நிச்சியமும்
அன்று – 1985
மாலை 4 மணி சாமிநாதன் ஒரு பைல் கட்டை தூக்கிக்கொண்டு அலுவலகத்தில் இருந்து மொபட்டில் கிளம்பினார். பன்னையாரின் 14 வயது மகள் தேன்மொழி வாசல் தெளித்து கொண்டிருக்க
ஏம்மா தேன்மொழி பன்னைவாள் இருக்காரா
ம்ம்ம்… அப்பா உள்ள தான் இருக்காரு
சத்தே கூப்பிடுமா
அப்பா! அப்பா!
பன்னையார் வெளியே வந்தார்.
வாங்க சாமிநாதன் உள்ள வாங்க
இல்ல இருக்கட்டும்
என்ன செய்தி சொல்லுங்க
அது அந்த கீழத்தெரு சுப்பன் இருக்கான்ல
ஆமா
அவன் ஒரு மூணு குழி நிலம் பதிவு பண்ண வந்தான்.
அப்படியா
ஆமா நான்தான் இன்னிக்கு நாள் சரியில்ல ராதுகாலம் நாளைக்கு பண்ணிக்கலாம் அப்படினு சொல்லி அனுப்பின்டேன்
ஒஒஒ...இந்த பயல்வோலுக்கு தனியா நிலம் வாங்குற அளவுக்கு ஆய்போச்சா
ஆம இவன்கள இப்படியே விட கூடாது
ம்ம்ம். நாளைக்கு ஆகட்டும், நீங்க இந்த சுப்பன் பயல காலைல ஒரு பத்து மணிக்கு மணியன் டீ கடைக்கு வர சொல்லுங்க.
ம்ம்ம் சரி சொல்லிடுறன் .
ம்ம்ம்ம. சரி டீ குடிச்சிட்டு போங்க சாமிநாதன.
இல்ல இருக்கட்டும் பிள்ளையாண்ட ஸ்கூல்ல இருந்து கூப்பிடனும். நான் கிளம்புறன்.
சரி சாமிநாதன் கிளம்புங்க. அந்த சுப்பன் பயல மறக்காம காலைல டீ கடைக்கு வர சொல்லிடுங்க.
சாமிநாதன் மொபட்டை எடுத்தார். நேராக சுப்பன் வீடு இருக்கும் கீழத்தெருவின் முகப்பிலே மொபைட் நின்றது. தெரு முனையில் ஒரு பள்ளி செல்லும் வயதுடைய ஐந்து சிறுவர்கள் சட்டை இல்லா உடம்புடன் அழகாக பச்ச குதிர ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு சிறுவனை நோக்கி டேய் என்றார் சாமிநாதன்.
சொல்லுங்க ஐயா என்று கையை முன் கட்டிக் கொண்டு கேட்டான் சிறுவன்.
இந்த சுப்பன் பயலே கொஞ்சம் கூப்பிட என்றார் சாமிநாதன.
சிறுவன் விறுவிறுவென்று ஒரே ஓட்டத்தில் சுப்பனின் குடிசைக்கு வந்தான்
சுப்பன் தன் மனைவி பொட்டுவின் வயிற்றில் காது வைத்து தன் அழகிய பிள்ளையின் மழலையை தொலைத் தொடர்பு கருவியே இல்லாமல் ரசித்தபடி இருந்தான்.
மாமா ஒரு ஐயா உன்னை கூப்பிடுது.. தெரு முனையில நிக்குது என்றான் சிறுவன்.
உடனே சுப்பன் ஒரே மூச்சாக துண்டை கையில் எடுத்துக்கொண்டு தெரு முக்கு ஓடினான்.
துண்டை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு, தன்நேரான வலிமையான முதுகில் கூனினை இடைச்செருகலாக செருகி சொல்லுங்க சாமி என்றான்.
பண்ணை நீ நிலம் வாங்குற விஷயமா உன்ன பாக்கணும்னு சொன்னார். காலை 10 மணிக்கு மணியன் டீக்கடைக்கு வந்துடு.
சரிங்க சாமி வந்துடுறேன் என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டான் சுப்பன்.
மீண்டும் மொபைட்டை எடுத்துக்கொண்டு தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு கொஞ்சி விளையாடிய படி சுவாமிநாதன் தன் வீட்டிற்கு சென்றார்.
இன்று - 2018
மாலை 4 மணி மகாலட்சுமி, ஆயிரம் நட்சத்திரங்களை தன்னுள் விழுங்கி செரித்தது போல பளபள உற்சாக முகத்துடன் தன் காதலன அருண் நோக்கி வந்தாள். மாநகராட்சி பூங்கா என்று கூட பாராமல் அருணின் கைகளை மெல்ல பிடித்து காதோரமாய் அணைத்து
நான் அப்பாகிட்ட பேசிட்டேன் அருண். அப்பா உன்னை மீட் பண்றேன்னு சொல்லிட்டாரு.
அப்படியா என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான் அருண்.
அருண். நல்ல படிப்பு ஐடி கம்பெனியில் வேலை. இரு முறை ஆன் சைட்டுக்கு வெளிநாடு சென்று வந்துள்ளான். இன்றைக்கு அவருடைய சம்பளம் மட்டும் 1.5 லட்சம் இருக்கும். சொந்தமாக அப்பார்ட்மெண்டில் ஒரு வீடும் வாங்கி வைத்துள்ளார்.
மகாலட்சுமியின் அப்பா கணேசன் ஓய்வுபெற்ற தனியார் வங்கி கிளார்க். மிடில் கிளாஸ் ஃபேமிலி. அருணை விட வசதியில் சற்று குறைவு.
சரி அப்பா எங்க என்ன மீட் பண்ணனும்னு சொன்னாரு உன் வீட்டிலயா மகா
இல்லடா எங்க தெருமுக்குல இருக்க காபி ஷாப். நாளைக்கு காலைல 10 மணிக்கு.
சரி நான் வந்துடுறேன்
அன்று - 1985
காலை ஒன்பது 45 மணி. சுப்பன் மணியன் டீ கடைக்கு சென்றான். டீ கடையின் முன் ஆட்கள்் உட்கார இரண்டு மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அதில் இருவர் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். சுப்பன் மர பெஞ்சிகளுக்கு பின்னுள்ள மண்மேட்டில் கீழே உட்கார்ந்தான். அந்த இருவரும் டீ சொன்னார்கள். சுப்பனும் எனக்கு ஒரு டீ கொடுங்க சாமி என்றான். டீ போடுபவர் நன்கு சுட சுட மூன்று டீயை போட்டு அதில் 2 க்ளாசில் ஊற்றி அந்த இருவருக்கும் எடுத்துக்கொண்டு போய் கையில் கொடுத்தார். இன்னொரு டீயை அப்படியே கொண்டு வந்து சுப்பனிடம் நின்றார். அங்கு அருகில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கொட்டான் குச்சியில் ஒன்றை எடுத்து நீட்டினான் சுப்பன் கீழே உட்கார்ந்து கொண்டு. டீ போடுபவர் மேலே நின்றவாரே அந்த டீயை அவன் கொட்டாங்குச்சியில் ஊற்றினார். டீயை குடித்துவிட்டு அந்த இருவரும் காசு கொடுத்தனர். சுப்பனும் காசு கொடுத்தான்.
புல்லட் சவுண்ட் புடு சுடு என்று கேட்க திரும்பி பார்த்தான சுப்பன். அங்கே பண்ணையார் தன்னுடைய பெரிய மீசையை முறுக்கியவாறு புல்லட்லிருந்து இறங்கி டீ கடை நோக்கி வந்தார்.
பண்ணையாரை பார்த்தவுடன் சுப்பன் துண்டைத் தன் கக்கத்தில் வைத்து கூனினான்.
என்னடா சுப்பா உனக்கு நிலம் வாங்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா
இல்லை ஐயா என் பெண்சாதி நிறை மாசத்தில இருக்கு அதுக்கு ஒரு ஆசை ரெண்டு குழி நிலம் வாங்கி சொந்தமாக ஒரு கான்கிரீட் வீடு போட்டு வாழனும்னு அதுக்குதான் ஐயா.
உன் பொஞ்சாதி ஆசைப்பட்டா நீ எல்லாம நிலம் வாங்கிடலாமா.அதுக்கெல்லாம் ஒரு இது வேணாம்.
ஐயா
சரி உனக்கு ஏது இவ்வளவு பணம்.
ஐயா என் பொஞ்சாதி சொந்தமா கொஞ்சம் சவரன் வச்சிருந்தா அப்புறம் கூலி வேலை பாத்து நானும் அவளும் சொந்தமா கொஞ்சம் காசு சேத்து வச்சி இருக்கோம்
என்னது நீ எல்லாம் காசு சேத்து வச்சிருக்கியா. சரி போன அறுப்புக்கு அப்புறம் என்கிட்ட இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கடன் வாங்குனல
ஆமா ஐயா அதுக்குத்தான் நான் வட்டி தவனை கரெக்டா கட்டிகிட்டு இருக்கனேய்யா
என்னையே எதித்து பேசுறியா. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு இப்போ முழு காசு தேவைப்படுது நீ கொண்டு வா.
ஐயா ஐயா மன்னிச்சிடுங்க ஐயா
அதல்லாம் முடியாது போ போய் வீட்ல இருக்க காசு கொண்டு வா.
வீட்டை நோக்கி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் சென்றான்
சுப்பன்…...
இன்று(2018)
காலை ஒன்பது 45 மணி காபி ஷாப் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அருண்.
அங்கே அவனுக்காக ஏற்கனவே மகாலட்சுமியும் அப்பா கணேசனும் காத்திருந்தனர்.
சமமாக போடப்பட்ட உயர்தர கண்ணாடி டேபிளின் ஒரு முனையில் அப்பா கணேசனும் நடுவில் மகாலட்சுமியும் உட்கார்ந்திருக்க எதிரே உள்ள நாற்காலி அருணுக்காக காத்து இருந்தது.
அருண் உள்ளே வந்து ஹாய் அங்கிள் என்று சொல்லி எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்
சொல்லுப்பா என் பொண்ணு எல்லாத்தையும் சொன்னா
ஆமா அங்கிள் நாங்க 3 இயர்ஸா லவ் பண்றோம். நான் அவள நல்லா பாத்துப்பேன் சொந்தமா வீடு வச்சிருக்கேன். என்னோட சேலரி இப்போ 1.5 லட்சம் அங்கிள் கொஞ்ச நாள்ல இன்னும் அதிகமாகும் அங்கிள். அப்புறம் எனக்கு சிகரெட் தண்ணி என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது அங்கிள். என்று தன்னை பற்றி சொல்லி முடித்தான் அருண்
ம்ம்ம்ம் எல்லாம் சொன்னாபா என் பொண்ணு எனக்கு சம்ம்ம்ம் என்று சொல்ல வரும் போது கனேசனின் போன் அடித்தது
போனில் சிவராமன,கணேசனின் நண்பன் தன் காதல் விவகாரத்தை சொன்ன உடன் சிவராமன் அருண் ஊர் என்பதால் அவரிடம் அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தார கனேசன்.
போனை எடுத்து செல்லு சிவராமன் என்றார.
இப்பொழுது இரண்டு உயர்தர கோப்பையில் மூவருக்கும காபி டேபிளில் வந்து வைக்கப்பட்டது.
சிவராமன் ஒரு இரண்டு நிமிடம் கணேசனுடன் பேசினார். ஆனால் கணேசன் எதுவும் பதில் பேசவில்லை .சரி சரி என்று ம்ம்ம் கொட்டியவாரே போனை கட் செய்தார்.
ஏதோ ஒன்று நினைத்தபடி அமைதியாக இருந்தார் கணேசன்.
இப்பொழுது மகாலட்சுமி அப்பா எனறார்்
டக் என்று நினைவுக்கு வந்த கணேசன் சொல்லுமா என்றார்
அருண் பா
சொல்லு தம்பி
உங்களுக்கு சம்மதம் தானே அங்கிள்
இல்லை அது வந்துபா என் பெண்ண இன்னும் கொஞ்சம் படிக்க வைக்கலாம் நினைக்கிறேன்
கல்யாணதுக்கு அப்புறம் நானே படிக்க வைக்கிறன் அங்கிள்.
அது இல்லப்பா எங்க குடும்பத்திற்கு இந்த காதல் அது இது எல்லாம் சரியா வராது. உன்னை நேர்ல பாத்து சொல்ல தான் உன்னை இங்க கூப்பிட்டேன்.நீ அவளை மறந்துடு பா நீ உன் வாழ்க்கையை பாரு என்றார் கணேசன.்
இடி இறங்கியது போலிருந்தது மகாலட்சுமிக்கும் அருணுக்கும்
உடனே அங்கிருந்து எழுந்து சரி நான் கிளம்புறேன் அங்கிள் என்று காபியை அப்படியே வைத்துவிட்டு கிளம்பினான்.
யோசனையில் காபி ஷாப் கதவைத்திறந்து வெளியே செல்லும்போது அருணின் போன் ரிங் அடித்த்து.
போனை பார்த்தான். அப்பா கால் செய்து கொண்டிருந்தார்.
கவலையில் கை நடுக்கத்துடன் போனை அட்டன் செய்து
சொல்லுப்பா என்றான் அருண்
என்ன ஆச்சி தம்பி பொண்ணு வீட்ல பேச போறதா சொன்னல. பேசிட்டியா தம்பி. சம்மதம் சொல்லிட்டாங்களா.
ம்ம்ம் இல்லப்பா அவங்க அப்பாக்கு என்ன முதல்ல பிடிச்சி இருககுனு சொன்னாரு. ஆனா திடீர்ன்னு ஏது எதோ சொல்லு சம்மதம் இல்ல சொல்லிட்டாங்கப்பா என்றான் தன் தள தளத்த குரலில்.
நீ கவல படாத தம்பி எல்லா நல்லதா நடக்கும் என்று சொல்லி போனை கட் செய்து விட்டு
ஏதோ ஒன்றை யோசித்தபடி தன் கவலை கலந்த முகத்துடன் வருத்தத்துடன் நின்றான்
சுப்பன்…