டன் கணக்குல அரிசி ஏத்திட்டு வந்த ஆஸ்திரேலிய கப்பலை.. விடுதலை புலிகள் நடுகடலில் நிறுத்தி அதிலிருந்தவர்களை தொரத்திவிட்டுட்டு.. அந்த கப்பல்ல வெச்சி சுட்டு பழகிக்கோன்னு தன்னிடம் தலைவர் பிரபாகரன் சொன்னதா சீமான் பேசிய காணொளி பலர் பார்த்திருப்பீங்க... கிட்டதட்ட விடுதலை புலிகளை ஏதோ கடற்கொள்ளையர்களை போல மக்கள் மனதில் பதியவைக்கும் அயோக்கியத்தனமான பேச்சு அது...
Farhah III என்ற ஜோர்டானிய கப்பல் 25க்கு மேற்பட்ட ஜோர்டானிய... எகிப்த்திய பயணிகளோடு இந்திய காக்கிநாடாவுல இருந்து 14,000 டன் அரிசியோட தென் ஆப்ரிக்கா டர்பன் நகருக்கு பயணமாகும்போது வடக்கு-கிழக்கு இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரைல கப்பல் நிலைதடுமாறி பயணிப்பதை கண்ட கடற்படை புலிகள்..அதில் இலங்கை ராணுவத்தின் வேலை இருக்குமோ என்று சந்தேகத்துடன் உள்ளே சென்று அங்கு உயிருக்கு போராடிய கடற்பயணிகளை காப்பாற்றியதோடு.. விடுதலைப்புலிகளின் பொறியாளர்கள் மூலம் கப்பலை சரி செய்ய முயன்று.. முடியாமல் போனதால் அங்கேயே கப்பலை விட்டுவிட்டு பயணிகளை காப்பாற்றி கரை சேர்த்தனர்... அனால் இலங்கையோ இதை ஒரு கடல்கொள்ளையாக உருவகபடுத்தி சர்வதேச கடல் விதிகளை புலிகள் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு வைத்தனர்... அதை உடனே மறுத்த புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் அங்கு நடந்தவற்றையும்.. கப்பலில் வந்தவர்களை காப்பாற்றியதையும் விளக்கினார்.. இதே புலிகளின் ஐ.நா. தொடர்பு அதிகாரி பூவரேசன் பின்னர் சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழுவிடம் கப்பலில் நடந்தவற்றை எடுத்துக் கூறி தங்கள் மீது சுமத்தபட்ட 'கடற்கொள்ளையர்கள்' பட்டத்தை தவிடுபொடியாக்கினார்..
அனால் அதே பட்டத்தை சீமான் தன்னுடைய சுயநல அயோக்கியத்தனத்திற்காக தலைவர் பிரபாகரன் அரிசி கப்பலை நிறுத்தி பயணிகளை ஓடவிட்டதாகவும்... அந்த கப்பலை வெச்சு சுட்டு வெளயாட சொன்னாருன்னு சொன்னதும் சிலுத்து போய் தம்பிகள் கை தட்டலாம்.. அனா வரலாறு ஒரு நாள் வாயில தூக்கி உண்மையை வைக்கும்.. அதுவரை அடிச்சுவிடுங்கப்பா...
No comments:
Post a Comment