Tuesday, June 19, 2018

இராமநவமி

இன்று இராமநவமி. இராமன் பிறந்த நாள். இன்று அவரை போலவே கணவன் வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கான பதிவு. இந்த பதிவின் முடிவிலும் உங்கள் முடிவு மாறாமல் இருந்தால் என்னை பிளாக் செய்து விட்டு சொல்வதே உங்களுக்கு உசீதமானது.
திருமணம் நடந்த உடன் காட்டுக்கு செல்லும் இராமன் சீதையையும் தம்பி இலட்சுமணனையும் அழைத்து கொண்டு செல்கிறான். அங்கு இராவணனிடம் தன் மனைவியை பறிகொடுக்கும் அவன் பற்பல போராட்டங்களுக்கு பிறகு தன் மனைவியை மீட்கிறான். பல நாட்களுக்கு பிறகு சேர்ந்தவர்கள் கட்டித்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் தானே. ஆனால் உண்மையிலீ நடந்தது என்ன. ஆசையோடு தன்னை அணைக்க ஓடி வந்த சீதையை அங்கிருந்த புரோகிதர்களின் பேச்சை கேட்டு என்னிடம் வராதே தள்ளி நில். உன் கற்பின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறுகிறான். உன் கற்பை நிரூபிக்க தீயில் இறங்கி உன் கற்பை நிரூபி என்கிறான்.
இது தெரிந்த செய்தி தானே. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதையே சொல்லி கொண்டிருப்பீர்கள் என்று கேட்பவர்கள் பொறுமை காக்கவும். அடுத்த தகவலையும் படித்து விட்டு பேசவும்.
அயோத்திக்கு வந்த பின் கருவுறும் சீதையை திரும்பவும் புரோகிதர்களின் பேச்சை கேட்டு காட்டுக்குள் அனுப்புகிறான். அதன்பின் நீண்ட நாட்களுக்கு அவளை பற்றிய நினைவே இல்லாமல் வாழ்கிறான். அசுவமேத யாகம் நடத்திய போது வெளிப்படும் அவனுடைய மகன்களான லவ குச என்பவர்களை பார்க்கிறான். அதன்பின் அவன் மனைவியையும் அழைத்து வரும் அவன் திரும்பவும் அங்கிருந்த புரோகிதர்களின் பேச்சை கேட்டு கொண்டு இவர்கள் என் மகன்கள் தான் நீ இன்னும் கற்புடன் தான் இருக்கிறாய் என்பதை நிரூபிக்க திரும்பவும் தீக்குளித்து நிரூபி என்கிறான்.
அப்போது சீதை இவனுடன் வாழ்வதற்கு உயிரையே விட்டு விடலாம் என்று அங்கிருந்து ஓடி யமுனை நதியில் ல் விழுந்து உயிர் துறக்கிறாள்.
நினைத்த போதெல்லாம் டீ குடிக்கலாம். தீ குளிக்க முடியுமா...

No comments: