Friday, June 22, 2018

இராமனின் ஆண்குறிபற்றி அனுமன் சீதையிடம் கூறியது

இராமனின் ஆண்குறிபற்றி அனுமன் சீதையிடம் கூறியது.
இது இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 35 ல் கூறப்படுகின்றது.
சீதையிடம் தூது சென்ற அனுமன், சீதை அவனை யாரென்று தெரியாது சந்தேகித்தபோது இராமனைப்பற்றி விபரிக்கிறேன் என்றுகூறி இராமனின் ஆண்குறி முதல்கொண்டு விதைப்பைவரை பின்வருமாறு வர்ணிக்கிறான்.
(அதற்கு முதல் விருஷணம் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன். விருஷணம் என்றால் விதைப்பை)
"மார்பு மணிக்கட்டு முஷ்டி இவை மூன்றும் கெட்டியாயும்; புருவம், புஜம், விருஷணம் இவை மூன்றும் நீளமாயும்; மயிர் நுனியும் விருஷணங்களும், முழங்கால்களும் ஏற்றக்குறைவில்லாமல் சமமாயும்; நாபி, வயிறு, மார்பு இவைமூன்றும் உயர்ந்தும்; உள்ளங்கை, கடைக்கண், உள்ளங்கால் இம்மூன்றும் சிவந்தும்; பாதரேகை, தலைமயிர்கள், ஆண்குறி இம்மூன்றும் மழமழப்பாயும்; நரம்பு வெளியில் தெரியாத பாதங்களையும்; ஒரே மயிரையுடைய மயிர் கால்களையும்; சிறிய ஆண்குறியையும்; ....." என்று பலவாறு தொடர்கிறான்.


No comments: