Tuesday, June 19, 2018

எது எளிமை - தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்

எது எளிமை
*******************************
தன் வரலாறு தெரியாதவன் வீழ்ந்துபோவான்!
எளிமையின் சிகரமென கக்கனையே எடுத்துரைக்கும் பல தி.மு.கவினரைப் பார்த்து எனக்கு சிரிப்பதா, வேதனைப்படுவதா? என திகைக்கின்றேன் தோழா!
அந்த காலத்திலேயே எம்.ஏ படித்தும், முதலமைச்சராய் பதவி வகித்தும், தமிழகத்தின் மாபெரும் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவை விட எளிமையான ஓர் மனிதரைக் காட்ட இயலுமா?
சாதிக் பாட்ஷாவை அறிவீர்களா?
அவரைப்பற்றியும் நான் சொல்லப் போவதில்லை. போய்த் தேடுங்கள், வரலாற்றைத் தேடுங்கள்.
தி.மு.கவில் எத்தனை,எத்தனை அமைச்சர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், மொழிப்போர் ஈகியர்கள், திராவிட ஆய்வாளர்கள் தனக்காக வாழாமல் தமிழினத்திற்காக வாழ்ந்து மறைந்தனர் எனத் தெரியுமா?
தலைவர் கலைஞரின் எளிமையை அறிவாயா? தன் வாழ்நாளின் எத்தனை இரவுகளை பட்டினியாய், கடும் எதிர்ப்புகளின் மத்தியில் கடந்த மாபெரும் தலைவர்.
இங்கே ஓர் கேள்வி எழும்! சொத்தும், சொந்தமும் கொண்ட மனிதரை எப்படி எளிமையானவர் என்கிறீர்? கேளுங்கள்..,
எளிமைக்கும் சொத்து, நாகரிகமான உடை, சொந்தங்களுக்கும் தொடர்ப்பேது? எளிமை என்றாலே பிச்சைக்காரராய் வாழ்வது போன்ற தவறான புரிதல் இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. தவறு.
காந்தியார் உடையில் எளிமையாக இருந்தார், ஆனால் வாழ்ந்ததோ பிர்லாவின் மாளிகையில்!
காமராசரின், கக்கனின், கலாமின் எளிமையால் மக்களுக்கு என்ன பலன்?
தங்களை எளிமையாக அறிவித்துக் கொண்ட இவர்களால் பலனடைந்தோர் எளிய மக்களல்ல!
பார்ப்பனீயமும், முதலாளித்துவமும், அரசு இயந்திரங்களும்தானே!
ஆக; எளிமை என்பது மக்களோடு மக்களாக, மக்களுக்காக வாழும் மனிதர்களின் செயலே தீர்மானிக்கும்.
இப்போது சொல்லுங்கள் கலைஞரின் அயராத உழைப்பும், கழக அரசும், எப்போதும் அவரை யாரும் சென்று சந்திக்கும் வாய்ப்பும், மக்களின் மீதான அவரின் பற்றும் எளிமையன்றோ!
(ஜெயலலிதாவின் செயல்பாடுகளை ஒப்பு நோக்குக)
அவரைத் தொடர்ந்து செயல் தலைவரின் எளிமை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மக்களிடமே எப்போதும் பயணிப்பதும், மக்களுக்கு பிரச்சினை எனில் சாலையில் இறங்கிப் போராடுவதும், இயற்கை பேரிடர்களில் மக்களில் ஒருவராய் இறங்கிப் பணியாற்றுவதும், அடுதவரின் கருத்துக்களை பணிவுடன் செவிசாய்பதும் என செயல் தலைவரின் எளிமை பாட்டாளி வர்க்கத்தின் எடுத்துக்காட்டு அல்லவா?
தோழனே!
கழகத்தின் வரலாற்றை சளைக்காமல் தேடு!
தேவையிருக்கிறது நீ தேடு!!
இதுவரை தி.மு.கழகத்தை சொன்னேனே..,
அதன் தலைவர் வென்தாடி வேந்தரின் வரலாறு தெரியாவிடில் எதையும் படிப்பது பாழ் அன்றோ?
இல்லாதவன் எளிமையாய் இருப்பது கடினமன்று.
அனைத்தும் இருந்தும் தனக்காக பயன்கொள்ளாமல் தமிழினத்திற்கு கொடுத்துச் சென்ற எம் தந்தை பெரியாரை விட எளிமையாய் வாழ்ந்த ஒருவரை காட்ட இயலுமா?
தோழனே!
வரலாற்றைப்படி, திராவிட இயக்கத்தின் எளிமைதான் உன்னை பகட்டாக்கியிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தியாகம்தான் உனை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வலிமைதான் உன்னை துணிந்துப் பேச வைத்திருக்கிறது.
இதோ, திராவிட இயக்கம்தான் உன்னை சிந்திக்கத் தூண்டுகிறது!
தன் வரலாற்றை அறியாதவன் சூதை வெல்ல இயலாது.
படி,படி,படி..
வரலாற்றைப் படி.
கக்கனைப் போல் 1000 மடங்கு எளிமையாய் வாழ்ந்த தலைவர்களைக் கொண்ட நீ கக்கனைப் பார்த்து மிரள்வது எதனால்?
வரலாறு அறியாததால் என்பதை அறிவாயா?
எளிமை என்பது பரதேசியாக வாழ்ந்து மடிவதல்ல
மானுடநேயத்தோடு தன்னலமற்ற மக்கள் பணியாற்றுவதே எளிமையாகும்.
படி தோழனே
திராவிட இயக்க வரலாற்றை படி!
இல்லையேல்,
அடிமைகளின் கட்சி அழிவதைப் பார்த்தாயா?
வரலாற்றை அறியாவிடில் நீ அழிவதை உன் அடுத்த தலைமுறை பார்த்து இரசிக்கும்.
எனதருமை கழகத் தோழனே!
வரலாற்றைப் படி!
அடுத்த தலைமுறைக்கு அள்ளிக் கொடுக்கவாவது படி!


No comments: