Friday, June 22, 2018

வீரப்பனை நீ ஒரு போராளி என பப்பாளி மரத்தின் மேல் ஏற்றிவிட்டனர், அவன் அது முறிந்து விழுந்து செத்தான்

வீரப்பனுக்கு விஷம் வைத்து விஜயகுமார் கொன்றார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக போலிஸ் சலிப்படைந்து கைவிடும் நிலைக்கு வந்தது, வீரப்பனும் அமைதியாக இருந்திருந்தால் சிக்கலே இல்லை
நம்புகின்றீர்களோ இல்லையோ 1986க்கு பின்னரான வீரப்பன் எப்படி இருப்பான் என்றே பின்னாளில் யாருக்கும் தெரியாது, அவனும் அப்படியே மலைவாழ் சாதியாகவோ இல்லை விவசாயியாகவோ இருந்திருக்கலாம், கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லா நிலை
அவ்வளவு ஏன்? கூலி தொழிலாளியாக வெளியூர் சென்றாலும் அவனை கண்டுபிடித்திருக்க முடியாது, அப்படி மர்மமாகத்தான் அவன் இருந்தான்
அவனுக்கு விதி தமிழ் தீவிரவாதிகள், நக்சலைட் வடிவில் வந்தது
தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் உண்டு என பொன்னார் சொல்வது எல்லாம் முழுக்க புறம் தள்ளகூடிய விஷயம் அல்ல, இங்கு ராமசந்திரன் காலத்திலே அவர்கள் முளைவிட்டார்கள். இன்றைய பழனிச்சாமி போல டெல்லி அடிமையான ராமசந்திரன் கடும் நடவடிக்கையால் அவர்கள் வளராமல் பார்த்துகொண்டார்
ஆனாலும் ரகசிய நடவடிக்கையில் நக்சல்கள் இருந்தனர், பின்னர் அவர்கள் தமிழ் தேசியவாதிகளுடன் கை கோர்த்தனர்
அதன் பின் இங்கும் சிக்கல் எழுந்தது, கவிஞர் தாமரை வாழ்வினை கெடுத்த தியாகு அப்பொழுது நடந்த குண்டுவெடிப்பில்தான் மரண தண்டனை பெற்றார்
சில தமிழ்புலிகள் தமிழகத்தின் பொன்பரப்பி போன்ற வங்கி கொள்ளையின்பொழுது மக்களாலே அடித்து கொல்லபட்டான்
இலங்கையினை போல வங்கிகளை கொள்ளை அடித்து இயக்கம் வளர்க்கும் புலிகளின் செயல் தமிழகத்தில் நடக்கவில்லை
மாறாக வேறு வழியில் வந்தார்கள், ராஜிவ் கொல்லபட்டபின் கொஞ்சகாலம் அமைதியாக இருந்தவர்கள் பின் இங்கு மறுபடியும் துளிரிவிட்டார்கள்
அரசியலுக்கு வைகோ, ராமதாஸ், திருமா என பலரை வளைத்தவர்கள், ஆயுதத்திற்கு வீரப்பனை வளைத்தார்கள்
வீரப்பன் மூலம் பலருக்கு ஆயுதபயிற்சி அளித்து அதன் மூலம் பெரும் ரத்தகளறி ஏற்படுத்தும் முயற்சிநடந்தது
வீரப்பனும் அதற்காக பலரை கடத்தி பணம் குவித்தான், ராஜ்குமாரை கடத்தியபொழுது பல நூறு கோடிகளை குவித்தான்
அவனுக்கு ஏன் அவ்வளவு பணம்? அவன் பிள்ளைகளே அனாதையாக தெருவில் நிற்க அவனுக்கு ஏன் அத்தனை கோடிகள்?
அவனை இயக்கியது நக்சலைட் மூளைகள் மற்றும் மாறன் முதலான தமிழ்தேசிய போராளிகள்
வீரப்பனும் அதன் பின் திடீர் போராளியானான், கன்னட அணை திறக்க உத்தரவிட்டான், காட்டுக்குள் தமிழ்தேசிய கொடி ஏற்றினான், படுபயங்கர அறிக்கை எல்லாம் விட்டான்
இனி இவனை விடவே கூடாது என்றுதான் அரசுகள் களமிறங்கின, உளவுதுறை அறிக்கைகள் வீரப்பனுக்கும் அந்நிய சக்திகளுக்கும் உள்ள உறவினை வெளிச்சம் போட்டு காட்டின‌
இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது, வால்டர் தேவாரம் தன் வாழ்நாள் எதிரி என தேடிகொண்டிருந்த வீரப்பன் விஜயகுமாரை கண்டுகொள்ளவில்லை
வீரப்பன் செய்த பெரும் தவறு நக்கீரன் பத்திரிகையில் தன் படத்தை வர செய்தது, அதுவரை அவனின் லேட்டஸ்ட் புகைபடம் யாரிடமும் இல்லை
அதில் அவன் வகை வகையாக போஸ் கொடுக்க, வீரப்பனின் துப்பாக்கி முதல் கூட்டாளிகள் எண்ணிக்கை வரை சிக்கலே இல்லாமல் காவல்துறைக்கு கிடைத்தது, வீரப்பன் செய்த மிக பெரும் தவறு அதுதான்
மாயாவி என சொல்லபட்ட வீரப்பன் உலகெல்லாம் இப்படி காட்சி கொடுக்க ஆரம்பித்தபின் அவனை கண்காணிப்பதும் வளைப்பதும் எளிதாயிற்று
ஈழத்திற்கு செல்லலாம் என சில போராளிகள் ஐடியா கொடுக்க, அதில் ஊடுருவிய காவல்துறை அட்டகாசமாக அவனை கடத்தி வந்து போட்டு தள்ளியது
நிச்சயம் விஜயகுமாரின் சாதனை அது
1990களுக்கு பின் வீரப்பனை பிடிக்க முடியாது என காவல்துறை ஒதுங்கிய நேரத்தில் அட்டகாசமாக வீரப்பனால் செட்டில் ஆகியிருக்க முடியும் எல்லா வாய்ப்பும் அவனுக்கு இருந்தது
ஆனால் இந்த தமிழ்தேசிய வாதிகளின் தொடர்பு நளினி, பேரரிவாளன் போலவே அவன் வாழ்வினையும் முடிக்க வைத்தது
சுருக்கமாக சொன்னால் காடு, மான்கறி என மகா மகிழ்ச்சியாக இருந்த வீரப்பனை நீ ஒரு போராளி என பப்பாளி மரத்தின் மேல் ஏற்றிவிட்டனர், அவன் அது முறிந்து விழுந்து செத்தான்

No comments: