Wednesday, June 20, 2018

உழைக்கச் சோம்பியோர் கூட்டம் பார்ப்பனர்கள்தான்

கசப்பான உண்மை என்னவென்றால், இஸ்லாமியர் அல்லாதோருக்கு ரம்ஜான் அன்று வேறு வேலை கிடையாது. சாப்பிடுவது, டிவி பார்ப்பது, ஊர் சுற்றுவது, சினிமா போவது, பகலில் படுத்துத் தூங்குவது, வார இறுதி நாள்களில் ரம்ஜான் வந்தால் அயலூருக்குப் பயணம் போவது இதைத் தவிர வேறு பெரிய வேலைகள் கிடையாது. அதனால் அவர்களுக்கு விடுமுறை இல்லை என்றால் கடுப்பாகிறது. உழைக்கச் சோம்பியோர் ஒரு நாளும் உயர்ந்ததில்லை
---- மாலன் நாராயணன் எழுதிய பதிவு ஜூன் 15 2018
இதைப்பற்றி பெரியார் அப்போதே எழுதியுள்ளார். எழுதிய ஆண்டு 1958
பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.
---பெரியார் ("விடுதலை" 19-10-1958)
மாலன் ஒருவிதத்தில் பெரியாரின் சிந்தனைகளைத்தான் பிரதிபலிக்கிறார். அதாவது உழைக்கச் சோம்பியோர் என்று அவர் குறிப்பிடும் கூட்டம் பார்ப்பனர்களைத்தான் 

No comments: