Thursday, June 21, 2018

ராவண விழாக் கொண்டாடிய தமிழர்கள்.

ராவண விழாக் கொண்டாடிய தமிழர்கள்.
சாணர்கள் எனப்படும் ஈழவர்கள், 100 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதியை சாணர்களின் தேசிய விழாவாகக் கொண்டாடி வந்துள்ளனர்.
இது ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த நாளை ராவணனின் வெற்றி விழாவாகவும், சீதையைப் பிரிந்த ராமனின் துயரை மகிழ்ச்சியுடனும், நினைவுக் கூறும் விழாவாகவும் அவர்கள் கொண்டாடினர்.
ராவணின் முதல் அமைச்சர் மகோதரா என்பவரும் சாணர் இனத்தை சேர்ந்தவர். அசுர/பூத வழிபாட்டை எதிர்த்தவர்கள் மீதான பல்லாயிரம் வருட பகையின் வெளிப்பாடாக இந்த விழாவினை சாணர்கள் கொண்டாடினர் எனக் கையேடு குறிப்பிடுகிறது.
ரொம்பக் குசும்புதான்யா, ரொம்பக் குசும்புதான்....

இதெல்லாம் திராவிடர் கழகத்துக்கு முன்னாடியே, புலவர் குழந்தையின் இராவண காவியம் எழுதப்படுவதற்கு முன்னரே!
 அப்போ இராவணன் சமணனா பௌத்தனா? இமயத்தையே தூக்கிச் சிவனுடைய இருப்பிடத்தை ஆட்ட முயன்றான் என்றால் சரியான வம்புப்பேர்வழியாக இருந்திருப்பான் போலிருக்கிறதே! 

No comments: