Wednesday, June 20, 2018

ராமனின் வன்முறை பெண் மீது..


‘கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ’ இந்திரனோடு அறியாமல் உறவு கொண்ட தன் மனைவி அகலிகையைச் சபித்தான் கவுதமன்.

இந்த முனிவர்களே இப்படிதான் ‘தானும் படுக்க மாட்டான்.. தள்ளியும் படுக்கமாட்டான்’ பாணி. இதுல பொம்பளைய சாபமிட்டு சபிக்கிறதல மட்டும் கொறச்சல் இல்ல.

பிறகு, ‘தசரத ராமன் பாதம் பட்டால் உன் சாபம், பாவம் தீரும்’ என்று அதற்குத் தீர்வு. அறிவியல் ரீதியாகக் கல்லு மண்ணாதான் மாறும். ஆனால் ராமன் பாதம் பட்டால், அது பொண்ணா மாறும். மாறிடிச்சி. ஏன்னா அவரு அவ்வளவு யோக்கிய ‘ராம்’.

கவுதமன் அகலிகையின் உணர்வுகளுக்கு எதிராகச் செய்த கொடூரத்தை விட, ராமன் அதே காரணத்திற்காக இன்னொரு பெண் மீது மூர்க்கமான வன்முறையை நிகழ்த்தினான்; டெல்லியில் பெண் மீது ரவுடிகள் நிகழ்த்திய வன்முறையை விடக் கொடூரமானது அது.

‘சூர்ப்பனகை இராமனிடம் தன் காதலை சொன்னாள்’ என்பதற்காக, ராமன் பிரதர்ஸ் அவளது மார்பகங்களையும், மூக்கையும் வெட்டி எறிந்தார்கள்.
என்னடா உங்கள் யோக்கியதை? அகலிகைக்கு நீதி? சூர்பனகைக்கு அநீதி?

குற்றவாளிகளே நீதிமான்களாக இருப்பது ராமாயணக் காலத்திலிருந்தே நடக்கிறது.
அகலிகையை முன்னிறுத்தி பெண்ணியம் பேசுகிறவர்கள், சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அவமானம், வன்முறை குறித்துப் பேசுவதில்லை?
ஏன் என்றால் அதில் குற்றவாளி ராமன்.

அப்படியானால் அது பெண்ணியமா? பார்ப்பனியமா?

No comments: