Saturday, July 28, 2018

வெளிநாட்டு புலி ஆதரவு அகதிகளுக்கு ஈழ விவகாரம் ஒரு பொழுது போக்கு

வெளிநாட்டு புலி ஆதரவு அகதிகளுக்கு ஈழ விவகாரம் ஒரு பொழுது போக்கு . தமிழக அகதிகள் எக்கேடு கேட்டலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களது பூபுனித நீராட்டு பர்த்டே மற்றும் பார்ட்டிகளுக்கே அவர்களுக்கு நேரம் இல்லை. புலிகளின் ராஜ்வ்காந்தி கொலை எப்படி ஈழமக்களின் தலையில் இடியாக இறங்கியதோ அதே போன்றுதான் இப்போது திமுக மீதான் புலிகளின் துர்ப்பிரசரமும் அமைந்துள்ளது .. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கடும் கோபத்தை ஈழமக்கள் மீது திருப்பி விட புலம் பெயர் தமிழர்கள் ஓவர் டைம் வேலை பார்க்கிறார்கள் சீமான் போன்ற ஜால்ராக்கள் அவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள் .. . திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனியும் தங்கள் பகல் வேஷத்தை களைந்து உருப்படியாக நேர்மையாக இருக்க முயற்சிக்கலாம் . சீமானை விட திருமுருகனுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறது என்று இன்னும் நம்புவதாலேயே இந்த மென்மையான விமர்சனம் .. கலைஞரை விமர்சிக்க கூடியி தகுதி சீமானுக்கோ திருமுருகனுக்கோ புலம் பெயர்தமிழர்களுக்கோ கிடையாது, .. வரலாறு தெரியாத தற்குறிகள் பிதற்றல்கள் அவை

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் vs வெளிநாட்டுல வாழ்ற பணக்கார அகதிகள்

“குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தைக்கு அதற்குள் ஆதார் அட்டை கொடுத்துவிட்டார்கள். அதில் இலங்கை அகதி என்று குறிப்பிட்டிருக்கு.
இலங்கை அகதி என்றால் அகதி முகாமில் தான் இருக்க வேண்டும், குறைந்த பட்சம் மாதமொரு முறை கணக்கெடுக்கும் போதாவது.
கல்வி வசதி உண்டு, முகாமில் மாதம் தலைக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவார்கள், மாண்ய விலையில் மளிகை பொருட்களும் உண்டு. 10x10 லைன் வீடு இலவசம் தான். மருத்துவ வசதி இலவசம்.
போர் முடிந்த பிறகு விரும்புவோர் இலங்கைக்கு திரும்பலாம் என்றாலும், பெரும்பாலோர் அங்கு போக விரும்பவில்லை, போனவர்களும் பெரியவர்கள் மட்டும் தான்- சொத்தை விற்றுவிட்டு இந்தியா திரும்ப தான் யத்தனிக்கிறார்கள். ஏன் என்றால் இளைஞர்கள் யாருக்கும் சிங்களம் தெரியாது, ஶ்ரீலங்கா என்பது கிட்ட தட்ட வெளிநாடு மாதிரி தான். அதுவும் போக அங்கே ஒரு இரண்டாம் தர பிரஜையாக வாழ விரும்பவில்லை. இந்தியாவிலேயே இருக்க தான் விருப்பம்.
ஆனால் ஒரு சிக்கல், இன்னமும் இந்திய குடி உரிமை கிடைக்கவில்லை. அதனால் சட்ட பூர்வமாக வெளிவேலைக்கு போக முடியாது, பெரிய வீடு வாடகைக்கு போகவோ, வாங்கவோ முடியாது.
குடியுரிமை கிடைத்தால் வசதியாக வாழலாம்.
ஆனால் அதற்காக யாரை நாடுவது?
தற்போதைய இந்திய மத்திய அரசோ ரொய்ங்கா இஸ்லாமிய அகதிகளுக்கு ஆதரவு கூட தரவில்லை. அகதிகளை அவர்கள் பாரமாக நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முயன்றால் தான் இது முடியும். ஆனால் தற்போதுள்ள அரசியல்வாதி யாருக்கும் இது பற்றி அக்கறை இல்லை. உதவி கேட்டு போக இனி யார் இருக்கிறார்கள்? அதிமுகவில் யாரும் இது பற்றி இது வரை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் போய் பார்த்து நிலவரத்தை எடுத்து சொல்லவாவது முடியும். ஆனால் திமுகவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்த விடாமல் தடுக்கிறார்களே?”
“யாரு தடுக்குறா?”
“வெளிநாட்டுல வாழ்ற பணக்கார அகதிகள். அவர்களது கோஷங்களால் திமுகவை பகைக்கிறார். ஆனால் இனி தொடர்ந்து இந்தியாவில் வாழ விரும்பும் எங்களுக்கு இது பாதகமாக இருக்குமே. எங்களை பற்றி யாரும் யோசிப்பதில்லை”
அசவுகர்யமான ஒரு மௌனம்......
“ஆனா ஒண்ணு மட்டும் நல்லதா ஆயிடுச்சு, அகதி முகாம்ல யாரும் ஜாதி பார்க்குறதில்லை!”

2009 ஈழப்போரின் போது கலைஞர் ராஜினாமா செயதிருந்தால் என்ன நடந்திருக்கும்?

2009 ஈழப்போரின் போது கலைஞர் ராஜினாமா செயதிருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஈழத்தில் எதுவும் மாறியிருக்காது...ராஜபக்சே அதே போல போரை நடத்தி புலிகளை அழித்திருப்பார்.

மாறாக, தமிழ்நாட்டில், நாம்தான் கீழ்கண்டவற்றை இழந்திருப்போம் -

கோவை டைடல் பார்க்,

மதுரை டைடல் பார்க்,

திருச்சி IT பார்க்,

அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

திருச்சி IIM (Indian Institute of Management)

செம்மொழி பூங்கா, சென்னை(தாவரவியல் பூங்கா)

அடையார் தொல்காப்பிய பூங்கா(சூழியல் பூங்கா, 145 ஏக்கர்)

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி(2010)

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி(2010)

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி(2010)

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி,(2010)

மத்திய பல்கலை கழகம், திருவாரூர் (2009)

அண்ணா பல்கலைக்கழகம், மதுரை (2010)

புதிய தலைமை செயலகம்(தற்போது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை)

மாம்பழத்துறையாறு அணை, கன்னியாகுமாரி (2011)

இருக்கன்குடி அணை, விருதுநகர் (2009)

மீஞ்சூர் கடல்நீர் சுத்தேகரிப்பு நிலையம்(2010)

நெம்மேலி கடல்நீர் சுத்தேகரிப்பு நிலையம்(2010)

தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்

செம்மொழி மாநாடு, கோவை..

..இன்னும் பல.

இவையெல்லாம், ஈழப்போரிற்கு பிறகு, கலைஞரால் கொண்டு வரப்பட்ட வந்த திட்டங்கள். இன்னும் பல திட்டங்கள் என எல்லாவற்றையும் இழந்திருப்போம்.

மீண்டும் ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். இந்த திட்டங்கள் எதுவும் நடைபெற்றிருக்காது.

1991-ல் புலிகளுக்கு ஆதரவாக திமுக இருந்ததாக கூறி திமுக அரசு கலைக்கப்பட்டது. திமுகவினர் வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு வந்த தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தனர். ஜெயலலிதா புலிகள் இயக்கத்தை தடை செய்தார்.

பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார் ஜெயலலிதா. அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தந்தவர் சீமானின் மாமனார் காளிமுத்து. இதுதான், இவர்களின் ஈழ நாடகம்.

ஈழப்போரின் போது திமுக அரசு ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று சொல்லும் சீமான் மற்றும் சில நடுநிலைகளுக்கு எந்த தொலைநோக்கும் கிடையாது.

இந்த அரைவேக்காடுகளுக்கு அரசியலும் தெரியாது. அனுபவமும் கிடையாது. உணர்ச்சியில் திரியும் ஆட்டு மந்தைகள்.

மக்கள் இது போன்ற உணர்ச்சியில் பேசி திரிபவர்களை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல. அப்படி செய்துதான் இன்று அனுபவிக்கிறார்கள்.

கலைஞர் மீதான வெறுப்பில் லாபம் இருக்கிறது

‘கலைஞர் மீதான வெறுப்பில் லாபம் இருக்கிறது’
*
‘பணக்கார நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலரும் திராவிட இயக்க குறிப்பாகத் திமுக விற்கும் கலைஞருக்கும் எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.
அதனால்தான் தமிழகத்தில் இன்னும் ஈழப் பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுகிற சகலமானவர்களும்; திமுக, கலைஞர் எதிர்ப்பை தீவிராமக பேசுகிறார்கள்’

என்று 2 மாதங்களுக்கு முன் திராவிடம் 2.o நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் பல வருடங்களாக எழுதியும் வந்திருக்கிறேன்.

இப்போதும் கலைஞர் உடல் நிலை சரியில்லாதபோதும் அது அப்படியே நடக்கிறது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலர் கலைஞர் குறித்து மோசமாக எழுதிய பிறகே,
இங்கும் இருக்கும் பணக்கார நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்களும் அவர்களைத் திருப்தி படுத்தும் விதத்தில் மிக நாசுக்காகவும், மோசமாகவும் கலைஞரை பேசுகிறார்கள்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரின் ஊழல் ஆட்சி குறித்தோ, ஈழத் தமிழர் பிச்சினையில் அவரின் வேடம் குறித்தோ விமர்சிக்காத சகலமானவர்களும், மார்க்சிய முறையில் தமிழ்த்தேசிய அரசியல் பேசுகிறவர்கள் கூடக் கலைஞரை சீண்டுவது ‘அவர்கள்’ பொருட்டே.
...
மீண்டும் திமுக ஆட்சி வந்து, ஸ்டாலின் முதல்வர் ஆவதை பார்த்தப் பிறகுதான் கலைஞர் தன் பயணத்தை நிறைவு செய்வார். அதனால் எப்பவும் அவருதான் தலைவர்.
ஆக, ‘நீங்க’தான் வயிறு எரிஞ்சு சாகனும்

Friday, July 27, 2018

தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது திரு.சீமானின் நாம் தமிழர் இயக்கம்.

ஏதோ ஒரு நாட்டில், எங்கோ நடந்த தலைவர்களின் இறப்புகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லுவதாகட்டும், துக்கத்தில் பங்கெடுப்பதாக இருக்கட்டும் முதலாவதாகத் தமிழகத்தில் இருந்தே ஆதரவுக் குரல் வெளிப்படும். அது நம் கூடப் பிறந்தது.
ஆனால்
தமிழகத்தில், தமிழகத்தை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவரான தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட இந்தச் சூழலில்,
ஒருபக்கம் பார்பணர்கள் வெளிப்படையாகவே தலைவர் கலைஞர் அவர்களின் இறப்பு பார்பணர்களுக்கு மற்றொரு தீபாவளி எனவும்,
நாம் தமிழரைச் சேர்ந்த சில வரலாறு அறியா இளைஞர்கள் கலைஞர் சாகவேண்டும் எனவும் வெளிப்படையாக எழுதி வருவது மனதைக் கனக்க வைத்துப் பிழிகிறது.
       அரசியலில் எல்லாம் இருக்கிறதுதான்.
ஆனால்
அரசியலே தெரியாத சில  இளைஞர்கள்,
ஈழ அரசியலை மனதில் வைத்து, தலைவர் கலைஞர் அவர்கள் மீது வன்மத்தை, அள்ளித் தெளிப்பது என்பது அந்த இளைஞர்களின் தலைவர் சரியில்லை என்பதற்கான சான்றாகவே எடுத்துக் கொள்ள முடியும். அதிலும்,
நான் உயிராக மதிக்கும் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்நேரம் இருந்திருந்தால் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு சுட்டுத் தள்ளியிருப்பார்.
     தலைவர் கலைஞர் அவர்கள், தான் மட்டும் ஜொலிப்பது என்பதல்லாமல்,
அமைச்சரவைச் சகாக்களும் ஜொலித்தால்தான் மக்களுக்குச் செல்ல வேண்டிய பலன்கள் சரியாகச் சமமாகச் செல்லும் என நம்பியவர் .
ஆனால்
    திரு.சீமான் போன்றவர்கள், தான் மட்டுமே ஜொலிக்க வேண்டும் என்கிற சுயநலம் உள்ளவர் .அதனால் தான், அவரை நம்பிய இளைஞர்களை வரலாற்றை அறியாமலேயே வைத்திருந்து, சமூகத்தில் அனைவரும் காரி உமிழும் வண்ணம் அசிங்கப்பட வைத்திருக்கிறது .
      முதலில் எந்த நேரத்தில், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்றைய இளைஞர்கள் அதுவும் நாம் தமிழர் கட்சியினராக  இருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம்?
    திரு.சீமான் வீட்டில் ஒரு சாவு என்றால், பக்கத்து வீட்டில் மேள தாளத்துடன் சுப நிகழ்ச்சி நடத்தி பிரியாணி விருந்து வைத்தால் எப்படி இருக்கும்?
     திமுகவில் பெரும்பாலானோர் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய அரசியல் கட்சி, இங்குள்ள அரசியலையும்  மனதில் கொண்டுதான் காய் நகர்த்துவார்கள் .
   சிறு சிறு அரசியல் கட்சிகள் உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதைப் போல திமுக பேசிவிட முடியாது. அப்படிப் பேசும் அரசியல் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது. அப்படி ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லாத நாம் தமிழர் போன்ற கட்சிகளின் பேச்சை நம்பிய இளைஞர்கள் இன்று நடுத்தெருவில். அறிவார்ந்த பெருமக்கள் விலகிச் சென்றுவிட்ட சூழலில், மிச்சம் இருக்கும் இளைஞர்களைத் தக்கவைக்க
தவறான தகவல்களை, தவறான வரலாறுகளை, ஆதாரமில்லாக் குற்றச்சாட்டுகளை, தொண்டை கிழியப் பேசித் தக்க வைத்து , தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது திரு.சீமானின் நாம் தமிழர் இயக்கம்.
    அண்ணன் திரு. வைகோ அவர்கள், சமீபத்தில் தனது தொண்டர்களுக்கு, எக்காரணத்தை கொண்டும் திமுகவையோ, தளபதி அவர்களையோ விமர்சனம் செய்தால் மதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை என்று  ஒரு பகிரங்க எச்சரிக்கையைத் தனது பேட்டியின் மூலமாக வெளிப்படுத்தினார்.
அதேபோல திரு.சீமானும் ஒரு எச்சரிக்கையை தனது தொண்டர்களுக்கு வழங்கிட வேண்டும்.
அதுவே, அந்த நிலையே" நல்தலைமை" என்பதற்கான எடுத்துக்காட்டாக அமையும்.
இது எனது கோரிக்கைதான்.
    இக் கட்டுரையைப் படித்த என் நட்பு வட்டத்தில் எவரும் எக்காரணத்தை முன்னிட்டும் நாம் தமிழர் கட்சியையோ, அது சார்ந்த எவரையும் தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம்.
அது நல்லதல்ல. அப்புறம் இந்த அறிவுரைக்கும் மதிப்பில்லாமல் போகும்.
    வரும் எரிகணைகளுக்குப் பக்குவமாக விளக்கம் கொடுங்கள்.
நல்லது நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படி நினைப்பவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள்.

பிரபாகரன்/வி.பு.களுக்கு கருணாநிதி/திமுக ஆயிரமாயிரம் மடங்கு தேவல

கருணாநிதி நிலைமை பார்த்து ஐரோப்பா வாழ் டுமீலர்கள் கொண்டாடுதுகள். என்னமோ இந்தியத்தமிழன் தான் இவங்கள கொன்ன மாதிரி.
நீங்களே சண்ட போட்டுக்கிட்டீங்க, இன்னைக்கு அடிச்சுப்போம் நாளைக்கு சேந்துப்போம் இது சகோதர யத்தம்னு சொல்லிக்கிட்டீங்க. இப்ப பழிய தூக்கு எங்க மேல போட்றீங்க.
மலையகத்தமிழர்கள மனுசனா கூட மதிக்காத கூட்டம்,
சிங்களன் கூட சேர்ந்து இந்திய தமிழர்களை விரட்டின கூட்டம்.
பிரபாகரன்/வி.பு.களுக்கு கருணாநிதி/திமுக ஆயிரமாயிரம் மடங்கு தேவல. குண்டடிபட்டு சாகுறதுக்கு/குடும்பத்தோட அகதியா வாழ்றதுக்கு, உள்ளூர்ல குடும்பத்தோட நிம்மதியா வாழ்ந்துட்டு லஞ்ச/ஊழல சகிச்சுக்கலாம்.
உங்க ரத்த/இன வெறியால நாங்க இழந்தது ஒரு (முன்னாள்) பிரதமர், 1200 ராணுவ வீரர்கள், பல அப்பாவி பொதுமக்கள்.
இலங்கைல இருக்குற மிச்சசொச்ச தமிழனாவது நிம்மதியா இருக்கணும்னு நெனைங்கடா. அவங்கள மொதல்ல படிக்க வைங்க, அப்றமா தமிழ்நாட்ல அரசியல் மாற்றம் கொண்டு வரலாம்.
ஒரு கசப்பான உண்மை, நீங்க திட்ற இதே கருணாநிதி இலங்கைல பொறந்திருந்தா, நீங்க இன்னைக்கி அகதியா திரிய வேண்டிய அவசியமில்ல. சிங்கள-தமிழன் பிரச்சினை வேற மாரி டீல் ஆகிருக்கும்.
ஒன் லைன் மெஸேஜ்: கட்டுமரம் எங்களுக்கு மட்டுமான எண்டர்டைன்மெண்ட்.

கருணாநிதியை 2009இல் மௌனமாக்கியது உங்கள் நொண்ணைத் தலைவனின் செயற்பாடுகள்தான்!

பாஜக, சில வலதுசாரி அமைப்புகள் மற்றும் சில அதிமுகவினர் கருணாநிதியை விமர்சிப்பதையும், திட்டுவதையும் கட்சி சார்பாக பார்த்து ஒதுக்கிவிடலாம்.
சில தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், ஈழ வியாபாரிகளும் கருணாநிதியை திட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களை, நன்றி என்றால் என்ன என்று தெரியாத துரோகிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்களின் நொண்ணை தேசியத் தலைவன் 20 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் கருணாநிதிதான். எண்பதுகளின் இறுதியில் போய் சேர்ந்திருக்க வேண்டியவன்தான் பிரபாகரன்.
அன்றைய இந்தியப் படைகள் இந்த நொண்ணைத் தலைவனை சுற்றி வளைத்து, போட்டுத் தள்ள தில்லியிடம் இருந்து க்ரீன் சிக்னல் எதிர்பார்த்துக் காத்திருந்த போது, அன்றைய பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து இந்தியப் படைகளை பின்வாங்கச் செய்தவர் கருணாநிதி!
இவர்களின் நொண்ணைத் தலைவனுக்காக தன் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் தன் ஆதரவு நிலைப்பட்டை கருணாநிதி மாற்றிக் கொள்ளவில்லை.
ராஜீவ் படுகொலை கருணாநிதியை நிலைகுலையச் செய்தது. அந்த நொண்ணைத் தலைவன் இந்த அளவிற்கு போவான் என்பதை பத்பநாபா கொலையிலேயே புரிந்து கொள்ளாமல் போனதுதான் இவர்கள் விஷயத்தில் கருணாநிதி செய்த தவறு. ராஜீவ் படுகொலைக்கு பிறகு நேரடியான ஆதரவுப் போக்குகளை கருணாநிதி குறைத்துக் கொண்டாலும், எதிராக பேசி/செயல்பட்டதில்லை.
கருணாநிதியை 2009இல் மௌனமாக்கியது உங்கள் நொண்ணைத் தலைவனின் செயற்பாடுகள்தான்!
கொஞ்சமாவது நன்றின்னா என்ன, விசுவாசம்ன்னா என்னன்னு தெரிஞ்சிக்கங்கடா.

யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி யாகம்

குழந்தை இல்லையா? கவலையை விடுங்கள் இந்துக்களே! மருத்துவரிடம் செல்லத்தேவையில்லை! நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை! மந்திரம் போட்டு அதையும் செய்துவிடலாம். வாருங்கள் ஆரிய பக்தகோடிகளே! பார்த்து பயனடையுங்கள்.
வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;.
புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"
- என்று கூற வேண்டும்.
இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும்.
பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."
இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"
பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள்.
இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்யக் கோருகின்றது.
இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம். குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் ஆரிய இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியேயன்றி வேறெதுவும் இல்லை.

கலைஞருக்கு ஏன் எதுவும் ஆகவில்லை என்பதில் இந்த தும்பிகளுக்கு கடும் கவலை

கலைஞருக்கு ஏன் எதுவும் ஆகவில்லை என்பதில் இந்த தும்பிகளுக்கு கடும் கவலை

ஈழம் தொடங்கி எங்காவது யாராவது செத்துகொண்டே இருக்கவேண்டும் என்பது இவர்களின் கொடூரமான ஆசை

காந்தி கொலை, பாபர் மசூதி இடித்து பலரை கொன்ற, பசுமாட்டிற்காக சிலரை கொல்லும் அந்த கொலைகார‌ கும்பலுக்கும் கலைஞர் உடல்நிலையில் மகிழ்ச்சி, அதில் ஆச்சரியம் ஏதுமில்லை

சாவுக்கு அலைவதும் மகிழ்வதும் அவர்களின் மனவியாதி

ஈழபோராட்டத்தில் புலிகளின் முதல் பலி தமிழரே, அதுவும் யாழ்பாண தமிழரே

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது.


அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது
இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது
அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி இருந்தது, அவர் மேடை ஏற அரசு தடை விதித்திருந்தது
ஆனால் மிக தந்திரமாக அவரை தமிழர் தரப்பு மேடை ஏற்ற அவர் சைமன் ஸ்டைலில் தொலைச்சு புடுவேன் தொலைச்சி என கத்த, காவல்துறை கைது செய்ய முயல அந்த களபேரத்திலே துப்பாக்கி சூடு நடந்தது
இதை வாய்ப்பாக வைத்து தமிழரே துரையப்பா தமிழ்துரோகி என சொல்ல தொடங்கினர், அக்கால இளைஞரெல்லாம் இந்த தும்பிகளாக நம்பிகொண்டனர்
பலர் துரையப்பாவினை கொல்ல தேடினர், பொன் சிவகுமாரன் அதில் முக்கியமானவர் ஆனால் அதற்குள் சயனைடு கடித்து செத்தார்
அதன் பின் பிரபாகரன் கும்பல் குறிவைத்தது, அதுவரை பிரபாகரன் கொலை செய்ததில்லை என்பதால் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை
அந்த கிருஷ்ணன் கோவில் முன்பு நிற்பதும் செல்வதுமாக இருந்தார் பிரபாகரன், யாருக்கும் சந்தேகமில்லை
துரையப்பா அக்கோவிலுக்கு வருவது வழக்கம், அப்பொழுது பாதுகாவல் இல்லாமல் இருப்பதும் வழக்கம்
அந்த கோவிலுக்கு துரையப்பா வந்துவிட்டு செல்லும்பொழுதுதான் பிரபாகரனால் சுடபட்டார், அத்தோடு தப்பினான் பிரபாகரன்
அதுவும் சும்மா சுடவில்லையாம், கண்ணனை வணங்கிவிட்டு பகவத் கீதையினை மனதில் நினைத்துவிட்டு அர்ஜூனா கொல்வதும் நானே, கொல்லபடுவதும் நானே, உன் கடமை கொல்வது என கீதை காதில் ஒலிக்க சுட்டானாம்
அது அவனே சொன்னது
கண்ணன் என்ன பீமனையும், நகுலனையுமா கொல்ல சொன்னான்?
துரையப்பா கொல்லபட்டது இதே ஜூலை 27, ஈழபோராட்டத்தில் புலிகளின் முதல் பலி தமிழரே, அதுவும் யாழ்பாண தமிழரே
அதன் பின் தன்னோடு இருந்தவரை எல்லாம் கொல்ல தொடங்கினார் பிரபாகரன்
தொடக்கத்தில் 10 பேர்தான் புலி, அதில் ஆயுதம் வாங்க தாமதித்த மைக்கேல் என்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டியுடன் மகிழ்ச்சியுடன் செல்வதை கண்ட பிரபாகரன் அன்றே அவரை கொன்றார். அவன் எப்படி குடும்பத்தோடு பேசலாம்?
அக்கும்பலில் பற்குணம் என்றொருவரும் உண்டு, முதலில் புலிகள் ஆயுதம் வாங்க தன் தங்கையின் நகைகளை விற்றுகொடுத்தவர், ஆயுத போராட்டத்தோடு முழு மக்களையும் திரட்ட வேண்டும் என அவர் சொன்ன ஆலோசனையின் முடிவு பிரபாகரனால் இரக்கமில்லாமல் கொல்லபட்டார்.
இந்த இருவரையும் கொன்றுவிட்டு, உருதெரியாயமல் அழிக்க சடலத்தோடு சீனி கலந்து எரிக்கும் முறையினை பிரபாகரன் சோதித்து பார்த்து வெற்றியும் பெற்றார், இறுதிவரை புலிகளின் பாணி இது.
அக்காலத்தில் இயக்கத்தில் இணைய வரும் போராளிகளுக்கு பிரபாகரன் சொல்லும் நிபந்தனை என்ன?,
"கொல்லுங்கள், அடிக்கடி உங்களை பிடிக்காதவர்களை சுடுங்கள், கொல்லுங்கள் அப்பொழுதுதான் மனம் இறுகி, கொலை பழக்கபட்டு நாமெல்லாம் போராளிகளாக உருமாற முடியும், மனதில் இரக்கம் கொஞ்சமும் கூடாது"
‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ஒரு தொடக்கால போராளியின் குறிப்பில் இருந்து மேற்சொன்னது எடுத்தது.
கொஞ்சநாளைக்கு முன் ஒரு கன்னட கொள்ளை கூட்ட கதை தண்டபால்யா எனும் படமாக வந்தது, விருதுகளும் பெற்றது கொஞ்சமும் இரக்கமே இல்லா கொள்ளைகூட்ட உண்மை கதை அது, இப்படியும் மனிதர்கள் உண்டா என பொலீஸ் அதிகாரியே மனம் வெறுத்த கும்பல் அது, அதன் அட்டகாச வெறி அப்படி.
புலிகளிளுக்கும், அந்த தண்டபால்யா கும்பலுக்கும் ஒரு வித்தியாசம் கூட காட்ட முடியாது. இவர்களை வழிகாட்டி என்றால் சீமான் எப்படி பட்டவராக இருப்பார்?, இந்த கொலைபாதக பிரபாகரனின் படம் தமிழகத்திற்கு ஏன்?
இன்று ஆல்பர்ட் துரையப்பா கொல்லபட்ட நாள்
தமிழரை கொன்று தொடங்கபட்ட போராட்டம் பின் போராளி இயக்கங்கள், அமிர்தலிங்கம், திருச்செல்வம், லட்சுமன் கதிர்காமர் என தமிழரையே கொன்று பின் சில ஆயிரம் தமிழரோடு முள்ளிவாய்க்காலில் முடிந்தது

அண்ணாவிற்கு அடுத்தது யார் என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது

அது அண்ணா மறைந்த நெருக்கடியான நேரம், அடுத்த முதல்வர் யார் என தமிழகமும் இந்தியாவும் எதிர்பார்த்திருந்த நேரம்
காரணம் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சியினை பிடித்த திமுக, அப்பொழுது பலத்த கவனம் பெற்றிருந்தது. அண்ணாவிற்கு அடுத்தது யார் என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது
நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், நடராசன் என்ற பலத்த வரிசையில் 5ம் நபராக இருந்தார் கலைஞர். ஆனால் கட்சியில் கலைஞருக்கே செல்வாக்கு இருந்தது
இதை புரிந்துகொண்ட ராமசந்திரனும் கலைஞர் பக்கம் சாய்ந்தார், கலைஞர் முதல்வரானார். பெரியாருக்கு பெரும் மகிழ்ச்சி
அய்யயோ கருணாநிதியா? என முகம் சுழித்தவர்கள் உண்டு, காரணம் அண்ணா பண்பாளர் என பெயரெடுத்தவர், கல் எறிந்தாலும் பூக்களை சுற்றி வலிக்காமல் எறியும் பக்குவம் அவரிடம் இருந்தது
கலைஞர் தீ போல சுட்டவர், சூறாவளியாய் தாக்கியவர் என்பதால் அவர் மேல் எல்லோருக்கும் ஒருவித நெருடல் இருந்தது
எதை வைத்து அவரை பழிக்கலாம் என்றிருந்தவர்கள், அவரின் நடத்தை சரியில்லை பல திருமணம் செய்தவர், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றவர் என சாட ஆரம்பித்தனர்
நேரு ஐரோப்பாவில் லேடி மவுண்பேட்டனுடன் ஊர் சுற்றினால் அது சோஷலிசம், ஆனால் கலைஞர் ஒழுங்காக தன் மனைவியோடு குடும்பம் நடத்தினால் அது ஒழுக்கம் கெட்டதனம் என்பது காங்கிரசார் நிலைப்பாடு
அதை தவிர கலைஞர் மேல் குற்றம்சாட்ட அவர்களுக்கு ஒரு விஷயமும் சிக்கவில்லை
ஆட்சிக்கு கலைஞர் வந்தாரே தவிர, கட்சியில் சிக்கல் இருந்தது
ஆம் திமுக தொடங்கும்பொழுது அதற்கு தலைவர் பதவி கிடையாது, பெரியாரே தலைவர் என் காலி நாற்காலியினை காட்டினார்கள்
பொதுசெயலாளர் பதவி இருந்தது, அவை தலைவர் பதவி இருந்தது, தலைவர் பதவி காலியாகவே இருந்தது
இந்நிலையில் சக்திவாய்ந்த பொதுசெயலாளர் பதவியினை பிடிக்க நெடுஞ்செழியன் காய்நகர்த்தினார், முதல்வர் பதவி கிடைக்கா நிலையில் இப்பதவி தனக்கே என்பதில் அவர் உறுதியாக இருந்தார்
இவர்களை கவனித்துகொண்டிருந்த பெரியார் தனக்கே உரித்தான புத்தி கூர்மையில் ஆலோசனை சொன்னார்
கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற சிக்கலில்தான் காங்கிரஸ் தோற்கடிக்கபட்டது, இதனால் சக்தியும் ஆற்றலும் வாய்ந்த ஒருவரிடம் இருபதவியும் இருக்க வேண்டும் என தன் பாணியில் சொன்னார்
பஞ்சாயத்து செய்ய மறுபடியும் ராமசந்திரன் வந்தார், பெரியாருக்கு அது பிடிக்கவில்லை ராமசந்திரன் மேல் அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்லை
சிக்கலை தீர்க்க திமுகவின் விதி திருத்தபட்டது, அவை தலைவர் பதவி திமுக தலைவராக்கபட்டது. பொதுசெயலாளர் பதவி டம்மியாக்கபட்டது
நெடுஞ்செழியனுக்கு அவர் விரும்பிய பொதுசெயலாளர் பதவி கொடுக்கபட்டது, ஆனால் அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாதபடி பல் பிடுங்கபட்டது
முதல்வர் பதவியினை நெடுஞ்செழியனிடமிருந்து தட்டிவிட்டோம், அவர் சக்திவாய்ந்த பதவியில் இருந்தால் நம்மை கடிக்காமல் விடமாட்டார் என தந்திரமாக அவர் பல்லை பிடுங்கினார் கலைஞர்
ஆயினும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க தவறவில்லை
இந்த கட்சி சீர்திருத்தத்தில் இன்னொரு இமாலய தவறு நடந்தது, கலைஞர் செய்த அந்த மாபெரும் தவறே பின்னாளில் திமுக எதிர்கொண்ட சிக்கல்களுக்கு எல்லாம் அதுவே காரணம்
ஆம், கட்சியின் பொருளாளர் பதவிக்கு செல்வரஜ் என்பவரும், தேவசகாயம் என்பவரும் போட்டியிட்டனர்
ஆனால் ராமசந்திரனை பொருளாளர் ஆக்கினார் கலைஞர், அவரை அவ்வளவு நம்பினார்
எல்லோரும் ஆதரிக்க பெரியார் மட்டும் தள்ளி இருந்து புலம்பினார்
"கருணாநிதி எதிலோ கால்வைத்துவிட்டார், அய்யோ இது பெரும் சிக்கலை பின்னாளில் கொடுக்கும்"
பின்பு பெரியார் கணித்ததே நடந்தது
இதே ஜூலை 27, 1969ல் திமுக தலைவரானார் கலைஞர். திமுகவின் முதல் மற்றும் இன்றுவரை உள்ள ஒரே தலைவர் அவரே, 50 வருடமாக அவரே
நிச்சயம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி என்ற வார்த்தைகள் அவர் காதில் விழப்போவதில்லை,
அவ்வகையில் யாருக்கும் இல்லா வரலாறு அம்மனிதனுக்கு இருக்கின்றது

கலைஞர எதனால திட்டுரோம் ப்ரூ

கலைஞர் இனப்படுகொலை செய்யும் போது சும்மா இருந்தாரு ப்ரூ அதனால தான் அவர திட்டுரோம் ப்ரூ
ஓ அப்ப சரி அப்ப சரி...நீ என்ன பண்னிட்டு இருந்த அப்போ
ப்ரூ ஸ்கூல் போயிட்டேன் ப்ரூ
ஆமா காமராஜ் பத்தி என்ன நிணைக்கிற
ப்ரூ கல்வி கண் திறந்தவர் ப்ரூ தமிழர்களின் தலைவன்
நல்லது இந்த அப்துல்கலாம் பத்தி
எளிமையா இருந்தாரு பெரிய விஞ்சானி அவரும் தமிழர்களின் தலைவர் தாம் ப்ரூ
சரி இப்ப நான் சொல்ர வரலாற கேளு நீ சொன்ன அதே படுகொலை நடந்தப்போ அந்த விஞ்சானி அய்யா எங்க ஊ*** போயிருந்தாரு அனு உலைக்கு போராடிரியே அது இங்க வந்ததுக்கு உங்க தமிழர் தலைவர் விஞ்சானி தான் காரணம் தெரியுமா...
அடுத்த வரலாறு கேட்டுக்கோ கல்வி கண் திறந்த காமராஜ் ஆட்சியில தமிழ் தமிழ் சொன்னவங்களே தன் சொந்த மாநிலத்திலையே சுட்டு கொண்னவருதாம் காமராஜ்...ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலறா கொஞ்ச படிங்க...
அதுக்காக கலைஞர் உத்தமர்னு சொல்லல அவர குறை சொல்ல உங்க யாருக்கும் தகுதி இல்லனு தான் சொல்ரேன்...
இனப்படுகொலை வலியை நானும் நன்கு அறிந்தவன் தான் அதனால் தான் இந்த வலியையும் தாங்க முடியவில்லை..
இதுக்கு மேலயும் கத்துனனு வச்சிக்கோ
என்ன ப்ரூ பண்னுவிங்க
பதில் தான் வேர என்ன
இனப்படுகொலை நடக்கும் போது வேடிக்கை பார்த்த அப்துல்கலாமும் ஹிந்திய எதிர்த்தவங்கள சுட்டுக்கொண்ன காமராஜரும் உனக்கு தலைவனா ...
நான் கலைஞர தலைவருனு சொல்ரதுல தப்பே இல்லடா

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம்

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம் என்று காத்திருந்த சிலோன் தமிழர்களுக்கு (டிவிட்டரில் தன் ஆணுறுப்பை படம் வெளியிட்ட ச்சீறிலங்கா கிரிக்கெட்டர் சங்கக்கராவின் ரசிகர்கள் என்பதால் இவர்களை சங்கா"தமிழர்கள் என்றும் பலர் சொல்வார்கள்) கலைஞர் வாழ்கிறார் என்பது தெரிந்து மனம் நொந்து சோகத்துடன் சயனைடு சப்பிகளுடன் திரிவதாக லண்டன் ஈஸ்ட்ஹாம், பாரிஸ் லா சாப்பல்,
கனடா டோரொண்டோ பார்க் வீதிகள், அவுஸ்திரேலியே சிவப்பு விளக்கு பகுதிகளில் இன்று போதைப்பொருள் சப்ளை நடைபெறவில்லையாம். கலைஞர் வாழ்ந்து முடித்தவர், ஆனால் உங்களுக்கெல்லாம் எதிர்காலம் இருக்கிறது, ஆக கலைஞருக்காக காத்திருக்காமல் உங்கள் போதைப்பொருள் சப்ளை வேலைகளைத் தொடர்ந்து செய்தால்தான் உங்களுக்கு கையில் நாலு காசு நிற்கும். தமிழ்நாட்டுத்தமிழர்களைப்போல உங்களுக்கு படிப்பறிவும் கிடையாது. இந்த பொழைப்பைவிட்டுவிட்டால் ஒரு நாதியும் கிடையாது. தொப்புள் கொடி சொந்தங்களே இருக்கும் வேலையை சமூக ஊடக கொண்டாட்டங்களுக்காக விட்டுவிடாதீர்கள்.

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?
ஆம், வேறு வழியில்லை. எல்லாவற்றிற்குமே இவர்கள் இப்படித்தான் காத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் தானாக நடந்தால்தான் உண்டு. நடத்திக் காட்டுகின்ற வல்லமை அவர்களிடம் இல்லை. எதிர்காலத்திலும் அது வரப் போவதும் இல்லை.
காணி வேண்டுமா? காணாமல் போனவர்கள் நிலை தெரிய வேண்டுமா? அதிகாரப் பகிர்வு வேண்டுமா? எதுவும் தமிழர்களின் போராட்டத்தினால் வரப் போவது இல்லை. வேறு யாரவது அழுத்தம் தந்து இவை கிடைக்க வேண்டும். அல்லது எதிரியே போனால் போகட்டும் என்று தந்து விட வேண்டும். இதுதான் நிலை. தானாக எல்லாம் நடக்கட்டும் என்று காத்திருக்க வேண்டிய பரிதாபமான நிலையில் ஈழத் தமிழினம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தியாமல், இயற்கையாக வந்தே ஆக வேண்டிய சாவு கலைஞருக்கு எப்பொழுது வரும் என்று சில ஈனத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
கலைஞர் சில ஆண்டுகளாகவே செயற்பட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால் தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சி வலுவோடு இருப்பதற்கான ஏற்பாடுகளை அவர் என்றைக்கோ செய்து முடித்து விட்டார். மிகப் பெரும் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட அவருடைய கட்சி, இன்றைக்கும் மிகப் பெரும் வலிமையோடு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும்.
இன்றைக்கு தேர்தல் நடந்தால், கலைஞரின் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார். இது எல்லோருக்கும் தெரியும். கட்சி மட்டும் அல்ல. கட்சியின் சமூகநீதிக் கொள்கையும் தமிழ்நாட்டில் வலுவோடு என்றைக்கும் இருக்கும். கலைஞரின் சாதனை இது. தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சியும், கொள்கையும் வலுவோடு இருப்பதற்கான அடித்தளத்தை அவர் போட்டிருக்கிறார்.
மறுபுறம் ஈழத் தமிழர்கள் தமது தலைமையை இழந்து பத்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பல குழுக்களாக சிதைவுற்று, தமக்குள் மோதிக் கொண்டு, எல்லாம் தானாக நடக்கும் என்று காலத்தை கழிக்கின்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
அவர் சாவார், இவர் சாவார், முகநூலில் வெடி கொழுத்தலாம் என்று தமது வக்கிரத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பவர்கள், இந்தப் பரிதாப நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படியான வக்கிரபுத்தி படைத்தவர்கள் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது.

Thursday, July 26, 2018

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை:
1) அமெரிக்காவுல தயாரிக்கற மாத்திரைக்கு இங்க நோயைக் கண்டுபிடிக்கறாங்க. (ஃபார்மக்காலஜி லைன்ல வாங்க)
2) டெங்கு காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு போனவங்க செத்தாங்க. வீட்ல நிலவேம்பு குடிச்சவங்க பிழைச்சாங்க. (ஜெனரல் மெடிசின் லைன்ல வாங்க)
3) அலோபதி மருத்துவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த ஹீலர்களுக்கு இருக்கு. (கம்யுனிட்டி மெடிசின் லைன்ல வாங்க)
4) பஞ்சகவ்யா மூக்குச்சளி முதல் எய்ட்ஸ் உட்பட அனைத்து நோயையும் குணமாக்கும். (வைராலஜி யாராவது இருக்கீங்களா?)
5) பஞ்சகவ்யம் குடித்தால் கண்ணாடி போட வேண்டியதில்லை. (தம்பி, ஆப்தல்மாலஜி அதான் ஐயா சொல்லிட்டார்ல!)
6) வெள்ளைக்காரன் நாற்காலியைக் கொண்டுவந்துதான் நோயைப் பரப்பினான். அதனால் எப்போதும் சம்மணம் போட்டு உக்காருங்க. (பிஸியோ எங்கப்பா?)
7) இங்கிலீஷ் டாக்டருங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உடம்பைக் கிழிச்சி தைக்கிறது மட்டும்தான். ஏன்னா அதுக்கு அவங்க்கிட்ட லைசன்ஸ் இருக்கு. கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும்? (சர்ஜரி கைஸ், கேட்டீங்களா?!)
8). உடம்பைக் கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அது எதுக்கு ஆகும்? இதை நாகரிகம்ங்கிற பேர்ல நாமளும் ஏத்துக்கறோம். (ரிஹேப் பசங்களா, கேட்டீங்களா?!)
9) வயித்தைக் கிழிச்சு குழந்தையை எடுக்கறதுக்கு எதுக்கு ஒம்போது மாசம் வைத்தியம் பாத்தீங்க, ஸ்கேன் பண்ணுனீங்க? (கைனக்ஸ் ஆன்சர் ஐயா'ஸ் கொஸ்டின்)
10) வீட்ல வச்சு பிரசவம் பாத்து எதாச்சும் ஆச்சுன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருவேன்னு சொன்ன அந்த பெண்ணோட அம்மாவை நினைச்சு ஐயா எக்காளமாய் சிரிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா! (மெடிக்கோ லீகல்! ஹாஹாஹா!!)
11) குழந்தையை ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்கற தாயோட உடம்பு இதயத்தையும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒழுங்காத்தான் உண்டாக்குது. அப்படிப்பட்ட தாயோட உடம்பு தன்னோட இதயத்துல இருக்கற ஓட்டைய அடைச்சுக்காதா? (ஏம்ப்பா கார்டியாலஜி துரை, ஐயா கேட்டது புர்தா?!)
12) வீட்டுக்குள்ள இருக்கற குப்பையைக் கூட்டி வெளில தள்ளிட்டு விட்டுர்றோம். அதேமாதிரி உடம்பு குப்பை, கழிவுன்னு தனக்கு தேவையில்லாததை மலக்குடல் வழியா வெளிய தள்ளிடுது. அதப்போயி இவிங்க மலப் பரிசோதனைன்னு பண்ணிகிட்டு இருக்காங்க. ஹாஹாஹா! ஃபன்னி கைஸ்!! (லேபுக்கார தம்பி, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதப்பா!).
இதெல்லாம் சின்ன சாம்பிள். விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தி வைக்கப்படும் நம்மாழ்வாரின் அறிவியல் இதுதான். இந்த மாதிரியான கோட்பாடுகளை வைத்து இன்று விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
சாவு அடுத்தவன் வீட்டில் விழும்வரை அது நமக்கு செய்திதான். நமது மனைவியோ, கணவனோ, குழந்தையோ, தாயோ, தகப்பனோ இறந்தால்தான் அதனுடைய வேதனை புரியும்.
சாவு எல்லோருக்கும் ஒருநாள் வரும்தான். ஆனால் அதை நமது முட்டாள்தனத்தால் நாமே வரவழைத்துக்கொள்வதோ, நமக்கு நெருங்கியவர்களுக்கு வரவழைப்பதோ கொலை செய்தலுக்கு ஒப்பாகும்.
நம்மாழ்வார்கள், ஹீலர்கள், வாழ்வியல் புடலங்காய் புண்ணாக்கு விற்பன்னர்களை நம்பி யாரும் அகாலமரணம் அடையக்கூடாது.

அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல.

//கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றால் கண்ணாடி அணியக்கூடாது. ஏன் அணியக்கூடாது என்றால் அது இயற்கைக்கு எதிரானது , ஏனெனில் மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது கண்ணாடியுடன் பிறப்பதில்லை//
இரண்டாண்டுகளுக்கு முன்பு செந்தமிழன் மணியரசன் என்பவரின் இந்த பேச்சுக்காக அவரிடம் பேஸ்புக்கிலும் அதில் ப்ளாக் ஆனதைத் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியிலும் மல்லுக்கட்டியது நினைவுக்கு வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் அவர் தன்னால் கண்ணாடி போடாமல் பார்வையை கொண்டுவருகிற சிகிச்சை முறையை இந்த உலகத்துக்கு குறைந்தபட்சம் தமிழ்நாட்டு மக்களுக்காவது தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டபோது கடைசிவரை அவர் அந்த சிகிச்சை முறையை சொல்லவேயில்லை. ஏன் இன்றுவரையிலும் அவர் சொல்லவில்லை !
கடைசியாக கோபிநாத் “கத்தியைக் கொண்டு பழத்தையும் நறுக்க லாம் ஆளையும் கொலை செய்யலாம்” என்ற மொண்ணையான பட்டிமன்ற பேச்சு போல “செந்தமிழன் ! உங்களைப்போன்ற இயற்கையோடு வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரிவரும். எல்லாருக்கும் அல்ல “ என பேசி எங்கள் இருவருக்கும் பொதுவாக பேசி சமாதானம் செய்து முடிப்பது போல முடித்தார்.
அறிவியல் மற்றும் மருத்துவம் என்பது குறி சொல்வது போன்றது அல்ல. என் கிட்ட வந்தா தான் நடக்கும் , மற்றவர்களால் அதை பண்ணமுடியாது என புருடா விடுவதல்ல மருத்துவம்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இங்கிலாந்திலும் அதே 24 மணி நேரம் தான். இங்க ஒருத்தன் வாயையும் மூக்கையும் பொத்துனா செத்துடுவான் என்றால் ஆஸ்திரேலியாவில் இருக்கறவனை அப்படி பண்ணாலும் செத்துடுவான். இதுதான் அறிவியல்.
அறிவியல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல. அது ஆய்வுகளோடும் தரவுகளோடும் உலகம் முழுவதும் நிரூபிக்கப்படவேண்டும்.
வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டுல வெளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆகாது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை. அது மூட நம்பிக்கையோ ஏதோ ஒரு நம்பிக்கை. ஆனால் அறிவியல் என்பது தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ஒரு வீட்டுல வெள்ளிக் கிழமை விளக்கு ஏத்தலன்னா வீட்டுக்கு ஆபத்து என்றால் அமெரிக்காவில் கலிபோர்னியா வில் இருக்கிற ஒரு வீட்டுலயும் வெளக்கு ஏத்தலன்னா லும் ஆபத்து ஏற்படவேண்டும். அப்ப தான் அது அறிவியல்.
துரதிர்ஷ்டவசமாக சிலர் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட அறிவியல் மருத்துவத்தை ஏதோ பன்னாட்டு சதி போல நினைத்துக்கொண்டு / அப்படி பொய்ப்பரப்புரையில் மயங்கி , “ மருந்தே இல்லாமல் நோயை குணமாக்குகிறேன் , ஊசி ஆஸ்பத்திரி இல்லாமலேயே பிரசவம் பண்ணலாம் , எருமை சாணியை இளநீரோடு சேர்த்து குடித்தா டாக்டர் கிட்டயே போகவேணாம் “ என்றெல்லாம் பசப்புகிற மோசடிப்பேர்வழிகளை நம்பி திசை மாறுவது வருந்தத்தக்கது.

பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி

இது கோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி,,,


பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார்னு பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம ஹரீஸ் பட்டேல்,,,,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார்னு பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்,,,,
இது ஒன்னும் எதர்ச்சியா நடந்தது இல்ல,,,அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க,,,1997 கோவை கலவரம்,,, பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி,சிறு கடைகள் வரை அனைத்தும் இஸ்லாமியர் கடைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் வேட்டையாடப்பட்டுச்சு,,,
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு ,எதற்காக எல்லா இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும்,நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான்,,,வணிகம் செய்வது,,,
ஆக நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர்குள்ள வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்,,,
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை நம்ம பஜன்லால் கும்பலுக்கு இருந்தது,,,
கரைக்டா அந்த நேரம் பார்த்து, இப்படி ஒரு கொலை நடக்க அது நம்ம பணியா,மார்வாடி கும்பலுக்கு வசதியா போச்சு,,,
உடனே தெருப் பொறுக்கிகளா சுத்தீட்டு இருந்த இந்துத்துவ கும்பலுக்கு பெரும் அளவுள பைனாஸ் பண்ணி,அந்த கலவரத்துல அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களையும் குறிவெச்சு அழிச்சாங்க,,,
( காஸ் சிலிண்டரை கட்டத்திற்குள் உருட்டி விட்டு வெடிக்க வைக்கும் டெக்னிக் ,குஜராத் கலவரத்துக்கு முன்னாடியே சோதனை செஞ்ச இடம் கோவை தான்னா பாத்துகோங்களே !! )
அந்த கலவரத்துக்கு அப்பறம் அப்படியே கோவை முழுக்க மார்வாடி கும்பல் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது,,,இன்னைக்கு குண்டூசி துவங்கி வைரம் வரைக்கும் அனைத்து ஹோல்சேல் கடைகளும் மார்வாடிகள் கைல தான்,,,
கோவையில் செழிப்புமிக்க பகுதிகளான ஆர்எஸ்புரம்,ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளே அவுங்களுக்காக தான்,,,நீங்க எல்லாம் அங்க வேடிக்கை வேணா பார்க்க போலாமே ஒழிய, ஒரு இஞ்ச் இடம் கூட வாங்க முடியாது,,,அவ்வளவு ஆடம்பரமான பகுதிகள்,,,
ஆக இவங்களுக்கு இந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்த பொறுக்கி கூலிப்படைகளான இந்துத்துவ கும்பலுக்கு விநாயகர் சதுர்த்தி துவங்கி, கட்சி நடத்த பன்டிங் செய்வது வரை அனைத்தும் இந்த பஜன்லால் கும்பல் தான்,,,
ஆக கட்சிக்கே படி அளக்கறவங்க சாதாரண பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதிவியில் இருப்பது எல்லாம் பெரிய விசயம் இல்ல ஜீ !!

ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்

//ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்//
காங்கிரஸ்சாவது புலிகளை மாத்திரம் எதிரியாய் பார்த்தது, அதுவும் ராஜீவ் படுகொலையால், ஆனால் பாஜக RSS கும்பலோ, ஒட்டுமொத்த தமிழினத்தையே எதிரியாய் பார்க்கும்..
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிஜேபி கட்சி வெளியிட்ட காங்கிரஸின் மீதான குற்றபத்திரிக்கையில், "உள்நாட்டு, பிரதேச" அழுத்தங்களுக்கு பணிந்து, தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில், இலங்கை ராஜபக்சே அரசுக்கு முழு ஒத்துழைப்பை, உதவியை மந்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்யவில்லை என்று குறைசொல்லி, நாங்களாய் (பிஜேபி ஆட்சி) இருந்திருந்தால், இத்தைகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்... அப்படியென்றால் என்ன அர்த்தம்?? "கூட்டணி கட்சியான திமுக கொடுத்த அழுத்தங்களால், மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு, புலிகளை ஒழிக்க சரியான முறையில் உதவவில்லை.. ஆனால், நாங்கள் (பிஜேபி) இவ்வாறு உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ராஜபக்ஷே அரசுக்கு உதவியிருப்போம்" என்பதுதானே.. .
சரி, இலங்கையில் தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டபோது, எந்த RSS ஹிந்துத்துவா இயக்கங்களும் போராடவில்லையே... இலங்கையில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே... ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ, அறிக்கையோ எதுவும்மே செய்யவில்லையே??, அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
சாதாரண சப்பை காரணக்களுக்காக பலமுறை, வாரக்கணக்கில் இந்திய நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கிவைத்த அப்போதைய எதிர்கட்சியான பிஜேபி, தமிழ் நாட்டு மீனவர்களுக்காகவும், ஈழ தமிழர் (இந்துக்கள்) படுகொலைகளின் போதும், எத்தனை முறை நாடாளுமன்றத்தை முடிக்கிவைத்தது??? அவற்றின் மீது விவாதம் நடத்த அரசை கோரியது????... விடை : பூஜ்யம்
காங்கிரஸ் அரசே ஒருவழியாய் ஒத்துக்கொண்டு, போற்குற்றத்துக்காக இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தது... ஆனால் அந்த தீர்மானத்தைகூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கூடாது என்று எதிர்த்தும், அதை தாக்கல்செய்யகூட ஒத்துழைக்காத கட்சிதான் பிஜேபி.... "இலங்கையில் நடந்தது போர்குற்றம் அல்ல", ராஜபக்ஷேவை "போற்குற்றவாளி" என்று குறிப்பிடக்கூடாது என்று சொன்னகட்சிதான் பாஜக...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட்டது ஏன்?????
தமிழர்களை கொன்ற சிங்கள ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் BJPயை சேர்ந்தவரும், மோடியின் நண்பருமான சு.சாமி... மோடியின் அமைச்சரவையில் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ரவிசங்கர் பிரசாத், இலங்கையில் நடந்தது போர்குற்றம் கிடையாது, ராஜபக்சே போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறுதியாய் சொன்னவர்.... சுஷ்மா சுராஜோ, ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.. இந்தியாவுக்கு அவரை அழைத்து மரியாதை செய்தவர்.. ஈழ தமிழர்கள் தனி நாடு என்பதை கேட்கவில்லை என்று சொல்லி, உயிர்த்தியாகம் செய்த போராளிகளை அவமதித்தவர்..

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்
இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்
மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.

Wednesday, July 25, 2018

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை
அந்த காலத்துல இத்தனை நோயா இருந்துச்சு எங்க ஆத்தா பதினாறு பிரசவமும் வீட்லயேதா பாத்துச்சு என்று பெருமை பேசி திரிபவர்கள் ஆபத்தானவர்கள்.அவர்களை போன்ற ஒரு கொலைகார கணவன் தான் இன்று திருப்பூரில் வீட்டிலேயே 'You Tube' வழியாக பிரசவம் பார்த்து ஒரு இளம் பெண்ணை கொடூரமாக கொன்று இருக்கிறான். பெரிய பெரிய மகப்பேறு மருத்துவர்களே பிரசவத்தின் பயம், எதிர்பாரா பிரச்சனைகள் என்று தவிக்கும் போது ஒரு வீடியோவை துணையாக கொண்டு பிரசவம் பார்ப்பேன் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? பிரசவித்ததில் இருந்து ஒரு தடவை கூட 'செக் அப்' செல்ல வில்லையாம்.பற்றிக்கொண்டு வருகிறது
இதற்கு காரணம் வறுமையா என்றால் இல்லை.
அரசாங்கம் முதல் மாதத்தில் இருந்து கவனித்து மருந்து கொடுத்து ஊசி போட்டு கரு வளர வளர காசும் கொடுக்கிறது.ஏன் சீமந்தம் கூட நடத்துகிறது குழந்தை பிறந்த பின் மீதி தொகையும் கொடுத்து குழந்தை பராமரிப்பு சாமான்களும் கொடுக்கிறது.அனைத்து தடுப்புஊசிகளும் தாய்க்கும் சேய்க்கும் அனைத்தும் இலவசமாக தருகிறது.
இதற்கு காரணம் அறியாமையா என்றால் இல்லை.அந்த பெண் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியை.அந்த கொலைகாரனும் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறான்.
இதற்கு காரணம் மருத்துவமனை இல்லாத ஊரா என்றால் அதுவும் இல்லை தெருவுக்கு தெரு ஊருக்கு ஊர் ஆரம்ப சுகாதார நிலையங்களும் மகப்பேறு மருத்துவமனை களும் உள்ள திருப்பூர்.
என்ன காரணம்?? அரைகுறை வீடியோக்களும், மெர்சல் த்ரீ இடியட்ஸ் போன்ற முட்டாள் சினிமாக்களும்
'முன்னோர்கள் என்ன முட்டாள்களா' டைப் வாட்ஸப் பார்வேர்டுகளும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் தான்.
இனிமேல் யாராவது வீட்டு பிரசவ பெருமை பேசினால் உடனே அறைந்து விடுங்கள்.இதுபோன்ற ஒரு உயிர் போவது தடுக்க படும்.அந்த கொடூரனை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். பொய் மருத்துவ வீடியோக்கள் தகவல்கள் தருவோரை சிறையில் தள்ள வேண்டும்.அப்போது தான் இந்த சமூகம் உருப்படும்