Friday, July 27, 2018

தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது திரு.சீமானின் நாம் தமிழர் இயக்கம்.

ஏதோ ஒரு நாட்டில், எங்கோ நடந்த தலைவர்களின் இறப்புகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லுவதாகட்டும், துக்கத்தில் பங்கெடுப்பதாக இருக்கட்டும் முதலாவதாகத் தமிழகத்தில் இருந்தே ஆதரவுக் குரல் வெளிப்படும். அது நம் கூடப் பிறந்தது.
ஆனால்
தமிழகத்தில், தமிழகத்தை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவரான தலைவர் கலைஞர் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட இந்தச் சூழலில்,
ஒருபக்கம் பார்பணர்கள் வெளிப்படையாகவே தலைவர் கலைஞர் அவர்களின் இறப்பு பார்பணர்களுக்கு மற்றொரு தீபாவளி எனவும்,
நாம் தமிழரைச் சேர்ந்த சில வரலாறு அறியா இளைஞர்கள் கலைஞர் சாகவேண்டும் எனவும் வெளிப்படையாக எழுதி வருவது மனதைக் கனக்க வைத்துப் பிழிகிறது.
       அரசியலில் எல்லாம் இருக்கிறதுதான்.
ஆனால்
அரசியலே தெரியாத சில  இளைஞர்கள்,
ஈழ அரசியலை மனதில் வைத்து, தலைவர் கலைஞர் அவர்கள் மீது வன்மத்தை, அள்ளித் தெளிப்பது என்பது அந்த இளைஞர்களின் தலைவர் சரியில்லை என்பதற்கான சான்றாகவே எடுத்துக் கொள்ள முடியும். அதிலும்,
நான் உயிராக மதிக்கும் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்நேரம் இருந்திருந்தால் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு சுட்டுத் தள்ளியிருப்பார்.
     தலைவர் கலைஞர் அவர்கள், தான் மட்டும் ஜொலிப்பது என்பதல்லாமல்,
அமைச்சரவைச் சகாக்களும் ஜொலித்தால்தான் மக்களுக்குச் செல்ல வேண்டிய பலன்கள் சரியாகச் சமமாகச் செல்லும் என நம்பியவர் .
ஆனால்
    திரு.சீமான் போன்றவர்கள், தான் மட்டுமே ஜொலிக்க வேண்டும் என்கிற சுயநலம் உள்ளவர் .அதனால் தான், அவரை நம்பிய இளைஞர்களை வரலாற்றை அறியாமலேயே வைத்திருந்து, சமூகத்தில் அனைவரும் காரி உமிழும் வண்ணம் அசிங்கப்பட வைத்திருக்கிறது .
      முதலில் எந்த நேரத்தில், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்றைய இளைஞர்கள் அதுவும் நாம் தமிழர் கட்சியினராக  இருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம்?
    திரு.சீமான் வீட்டில் ஒரு சாவு என்றால், பக்கத்து வீட்டில் மேள தாளத்துடன் சுப நிகழ்ச்சி நடத்தி பிரியாணி விருந்து வைத்தால் எப்படி இருக்கும்?
     திமுகவில் பெரும்பாலானோர் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய அரசியல் கட்சி, இங்குள்ள அரசியலையும்  மனதில் கொண்டுதான் காய் நகர்த்துவார்கள் .
   சிறு சிறு அரசியல் கட்சிகள் உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதைப் போல திமுக பேசிவிட முடியாது. அப்படிப் பேசும் அரசியல் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது. அப்படி ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லாத நாம் தமிழர் போன்ற கட்சிகளின் பேச்சை நம்பிய இளைஞர்கள் இன்று நடுத்தெருவில். அறிவார்ந்த பெருமக்கள் விலகிச் சென்றுவிட்ட சூழலில், மிச்சம் இருக்கும் இளைஞர்களைத் தக்கவைக்க
தவறான தகவல்களை, தவறான வரலாறுகளை, ஆதாரமில்லாக் குற்றச்சாட்டுகளை, தொண்டை கிழியப் பேசித் தக்க வைத்து , தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது திரு.சீமானின் நாம் தமிழர் இயக்கம்.
    அண்ணன் திரு. வைகோ அவர்கள், சமீபத்தில் தனது தொண்டர்களுக்கு, எக்காரணத்தை கொண்டும் திமுகவையோ, தளபதி அவர்களையோ விமர்சனம் செய்தால் மதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை என்று  ஒரு பகிரங்க எச்சரிக்கையைத் தனது பேட்டியின் மூலமாக வெளிப்படுத்தினார்.
அதேபோல திரு.சீமானும் ஒரு எச்சரிக்கையை தனது தொண்டர்களுக்கு வழங்கிட வேண்டும்.
அதுவே, அந்த நிலையே" நல்தலைமை" என்பதற்கான எடுத்துக்காட்டாக அமையும்.
இது எனது கோரிக்கைதான்.
    இக் கட்டுரையைப் படித்த என் நட்பு வட்டத்தில் எவரும் எக்காரணத்தை முன்னிட்டும் நாம் தமிழர் கட்சியையோ, அது சார்ந்த எவரையும் தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம்.
அது நல்லதல்ல. அப்புறம் இந்த அறிவுரைக்கும் மதிப்பில்லாமல் போகும்.
    வரும் எரிகணைகளுக்குப் பக்குவமாக விளக்கம் கொடுங்கள்.
நல்லது நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படி நினைப்பவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள்.

No comments: