Friday, July 27, 2018

ஈழபோராட்டத்தில் புலிகளின் முதல் பலி தமிழரே, அதுவும் யாழ்பாண தமிழரே

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது.


அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது
இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது
அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி இருந்தது, அவர் மேடை ஏற அரசு தடை விதித்திருந்தது
ஆனால் மிக தந்திரமாக அவரை தமிழர் தரப்பு மேடை ஏற்ற அவர் சைமன் ஸ்டைலில் தொலைச்சு புடுவேன் தொலைச்சி என கத்த, காவல்துறை கைது செய்ய முயல அந்த களபேரத்திலே துப்பாக்கி சூடு நடந்தது
இதை வாய்ப்பாக வைத்து தமிழரே துரையப்பா தமிழ்துரோகி என சொல்ல தொடங்கினர், அக்கால இளைஞரெல்லாம் இந்த தும்பிகளாக நம்பிகொண்டனர்
பலர் துரையப்பாவினை கொல்ல தேடினர், பொன் சிவகுமாரன் அதில் முக்கியமானவர் ஆனால் அதற்குள் சயனைடு கடித்து செத்தார்
அதன் பின் பிரபாகரன் கும்பல் குறிவைத்தது, அதுவரை பிரபாகரன் கொலை செய்ததில்லை என்பதால் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை
அந்த கிருஷ்ணன் கோவில் முன்பு நிற்பதும் செல்வதுமாக இருந்தார் பிரபாகரன், யாருக்கும் சந்தேகமில்லை
துரையப்பா அக்கோவிலுக்கு வருவது வழக்கம், அப்பொழுது பாதுகாவல் இல்லாமல் இருப்பதும் வழக்கம்
அந்த கோவிலுக்கு துரையப்பா வந்துவிட்டு செல்லும்பொழுதுதான் பிரபாகரனால் சுடபட்டார், அத்தோடு தப்பினான் பிரபாகரன்
அதுவும் சும்மா சுடவில்லையாம், கண்ணனை வணங்கிவிட்டு பகவத் கீதையினை மனதில் நினைத்துவிட்டு அர்ஜூனா கொல்வதும் நானே, கொல்லபடுவதும் நானே, உன் கடமை கொல்வது என கீதை காதில் ஒலிக்க சுட்டானாம்
அது அவனே சொன்னது
கண்ணன் என்ன பீமனையும், நகுலனையுமா கொல்ல சொன்னான்?
துரையப்பா கொல்லபட்டது இதே ஜூலை 27, ஈழபோராட்டத்தில் புலிகளின் முதல் பலி தமிழரே, அதுவும் யாழ்பாண தமிழரே
அதன் பின் தன்னோடு இருந்தவரை எல்லாம் கொல்ல தொடங்கினார் பிரபாகரன்
தொடக்கத்தில் 10 பேர்தான் புலி, அதில் ஆயுதம் வாங்க தாமதித்த மைக்கேல் என்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டியுடன் மகிழ்ச்சியுடன் செல்வதை கண்ட பிரபாகரன் அன்றே அவரை கொன்றார். அவன் எப்படி குடும்பத்தோடு பேசலாம்?
அக்கும்பலில் பற்குணம் என்றொருவரும் உண்டு, முதலில் புலிகள் ஆயுதம் வாங்க தன் தங்கையின் நகைகளை விற்றுகொடுத்தவர், ஆயுத போராட்டத்தோடு முழு மக்களையும் திரட்ட வேண்டும் என அவர் சொன்ன ஆலோசனையின் முடிவு பிரபாகரனால் இரக்கமில்லாமல் கொல்லபட்டார்.
இந்த இருவரையும் கொன்றுவிட்டு, உருதெரியாயமல் அழிக்க சடலத்தோடு சீனி கலந்து எரிக்கும் முறையினை பிரபாகரன் சோதித்து பார்த்து வெற்றியும் பெற்றார், இறுதிவரை புலிகளின் பாணி இது.
அக்காலத்தில் இயக்கத்தில் இணைய வரும் போராளிகளுக்கு பிரபாகரன் சொல்லும் நிபந்தனை என்ன?,
"கொல்லுங்கள், அடிக்கடி உங்களை பிடிக்காதவர்களை சுடுங்கள், கொல்லுங்கள் அப்பொழுதுதான் மனம் இறுகி, கொலை பழக்கபட்டு நாமெல்லாம் போராளிகளாக உருமாற முடியும், மனதில் இரக்கம் கொஞ்சமும் கூடாது"
‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ஒரு தொடக்கால போராளியின் குறிப்பில் இருந்து மேற்சொன்னது எடுத்தது.
கொஞ்சநாளைக்கு முன் ஒரு கன்னட கொள்ளை கூட்ட கதை தண்டபால்யா எனும் படமாக வந்தது, விருதுகளும் பெற்றது கொஞ்சமும் இரக்கமே இல்லா கொள்ளைகூட்ட உண்மை கதை அது, இப்படியும் மனிதர்கள் உண்டா என பொலீஸ் அதிகாரியே மனம் வெறுத்த கும்பல் அது, அதன் அட்டகாச வெறி அப்படி.
புலிகளிளுக்கும், அந்த தண்டபால்யா கும்பலுக்கும் ஒரு வித்தியாசம் கூட காட்ட முடியாது. இவர்களை வழிகாட்டி என்றால் சீமான் எப்படி பட்டவராக இருப்பார்?, இந்த கொலைபாதக பிரபாகரனின் படம் தமிழகத்திற்கு ஏன்?
இன்று ஆல்பர்ட் துரையப்பா கொல்லபட்ட நாள்
தமிழரை கொன்று தொடங்கபட்ட போராட்டம் பின் போராளி இயக்கங்கள், அமிர்தலிங்கம், திருச்செல்வம், லட்சுமன் கதிர்காமர் என தமிழரையே கொன்று பின் சில ஆயிரம் தமிழரோடு முள்ளிவாய்க்காலில் முடிந்தது

No comments: