Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (14)

#திராவிடம்அறிவோம் (14)

தந்தை பெரியார், தமது பெயரிலிருந்த 'நாயக்கர்' என்னும் சொல்லை 1927 - ஆம் ஆண்டிலேயே நீக்கி விட்டார். அச்சொல் இருந்த இடத்தில் பெரியார் என்ற சொல்லைப் பயன்படுத்தி, ஈ.வெ. இராமசாமிப் பெரியார் என முதன்முதலில் அழைத்தவர் வழக்கறிஞர் சிதம்பரம் பிள்ளை ஆவார்.

இந்திப் போராட்டத்தின்போது 12.11.1938., 13.11.1938., ஆகிய  நாட்களில் சென்னையில் நடைபெற்ற தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு  'பெரியார்' என்கின்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கவில்லை. அம்மாநாட்டுத் தீர்மானம் "..... அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் 'பெரியார்' என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது" என்று தான் கூறுகிறது.  (குடிஅரசு, 20.11.1938). அந்தச் சிறப்புப் பெயர் ஏற்கெனவே இருந்தது இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

No comments: