Saturday, July 28, 2018

கலைஞர் மீதான வெறுப்பில் லாபம் இருக்கிறது

‘கலைஞர் மீதான வெறுப்பில் லாபம் இருக்கிறது’
*
‘பணக்கார நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலரும் திராவிட இயக்க குறிப்பாகத் திமுக விற்கும் கலைஞருக்கும் எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.
அதனால்தான் தமிழகத்தில் இன்னும் ஈழப் பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுகிற சகலமானவர்களும்; திமுக, கலைஞர் எதிர்ப்பை தீவிராமக பேசுகிறார்கள்’

என்று 2 மாதங்களுக்கு முன் திராவிடம் 2.o நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் பல வருடங்களாக எழுதியும் வந்திருக்கிறேன்.

இப்போதும் கலைஞர் உடல் நிலை சரியில்லாதபோதும் அது அப்படியே நடக்கிறது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பலர் கலைஞர் குறித்து மோசமாக எழுதிய பிறகே,
இங்கும் இருக்கும் பணக்கார நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்களும் அவர்களைத் திருப்தி படுத்தும் விதத்தில் மிக நாசுக்காகவும், மோசமாகவும் கலைஞரை பேசுகிறார்கள்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரின் ஊழல் ஆட்சி குறித்தோ, ஈழத் தமிழர் பிச்சினையில் அவரின் வேடம் குறித்தோ விமர்சிக்காத சகலமானவர்களும், மார்க்சிய முறையில் தமிழ்த்தேசிய அரசியல் பேசுகிறவர்கள் கூடக் கலைஞரை சீண்டுவது ‘அவர்கள்’ பொருட்டே.
...
மீண்டும் திமுக ஆட்சி வந்து, ஸ்டாலின் முதல்வர் ஆவதை பார்த்தப் பிறகுதான் கலைஞர் தன் பயணத்தை நிறைவு செய்வார். அதனால் எப்பவும் அவருதான் தலைவர்.
ஆக, ‘நீங்க’தான் வயிறு எரிஞ்சு சாகனும்

No comments: