Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (16)

#திராவிடம்அறிவோம் (16)

1976 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பின்பே அனைத்து ஈழ மாணவர்களுக்கும், அனைத்துத் துறைகளிலும் கல்வி பயில மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் கோரிக்கைகளை ஏற்று அரசாணைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்திற்குள்  வெளியிடப்பட்ட ஒரு ஆணை (G.O. (Ms). No. 309, dated 04.07.1996) மருத்துவக்கல்லூரிகள் உட்பட அனைத்திலும் ஈழ மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

அரசாணை நிலை எண் 299, நாள் : 17.06.1999, இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குள் அனுமதிக்கப்பட்டதற்கும் மேலான கூடுதல் இடங்களைச் சேர்த்து ஒதுக்குமாறும், விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக் கெடுவை 30 நாள்கள் வரை நீட்டித்து வழங்குமாறும் கூறுகிறது.

இவ்வாறு பல அரசாணைகள் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.


No comments: