Tuesday, July 24, 2018

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை.

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை.
கள்ள கையெழுத்து மோசடி சாதிவெறி மததுவேஷ வழக்குகளில் சிறைக்கு சென்ற பாலகங்காதர திலகர்.
ஆதாரங்களுடன் பதிவு..
இன்று நாடுமுழுவதும் சங்கிகளால் திலகரின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. '' சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என்று திலகர் முழங்கியதாக கூறும் அவர்கள், ''சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும் கல்வியும் அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது '' என்று சாதிவெறி பிடித்த இந்த பார்ப்பனன் கூறியதை மட்டும் வசதியாக மறைத்து விடுவார்கள்.
தற்போது கூட தமிழகத்தில் கள்ளக்காதல் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து நிலஆக்கிரமிப்பு போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்ட பாஜக இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதிக்கப்பட்டவனால் ஓடஓட துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டதையும் ,அப்படி செத்தவர்களை இந்து அமைப்புகள் '' தேச பக்தர்களாக '' சித்தரித்து வருவதையும் நாம் அறிவோம்.
இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்து கூறும் பார்ப்பனிய கும்பல்களும் பார்ப்பன ஊடகங்களும் ,ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும் , பார்ப்பனியத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்கு சொல்லி வருவதோடு சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துள்ளது ..
இப்படி பார்ப்பனிய RSS கும்பலால் மிகப்பெரும் தேசபக்தனாக சித்தரிக்கப்படும் பாலகங்காதர் திலகர் உண்மையில் ஒரு சித்பவன் பார்ப்பன சாதி வெறியன் .மதவெறியன் . பிரிட்டிசார் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சியை திரும்ப பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரின் கோரிக்கையாக இருந்தது .மகாத்மா ஜோதிபா பூலே வின் சத்யசோதக் சமாஜுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதற்காகவே விநாயக சதுர்த்தி விழாவை ஆரம்பித்து வைத்தவர் . காங்கிரஸ் மாநாட்டில் செருப்பு வீட்சை தொடங்கி வைத்தவர்.
1920 இல் அத்தானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது '' பிராமணர் அல்லாத மக்கள் கல்வி கற்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ கூடாது '' என பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக பேசியதால் பம்பாய் சங்கலி புனே கூட்டங்களில் மக்களால் கல்லடிபட்டவர்.
சாதிமறுப்பு திருமணம் குழந்தை திருமண தடுப்பு போன்ற சட்டங்களை கடுமையாக எதிர்த்தவர். தீண்டாமைக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தவர்.
இப்படிப்பட்ட திலகர் நாட்டுக்காக சிறைப்பட்டதாக பார்ப்பன கும்பல் வரலாற்றை எழுதி வைத்துள்ளது .உண்மையில் பிறர் மீது அவதூறு சுமத்துதல் , மோசடி , கள்ள கையெழுத்து . பிளேக் நோய் பரப்பிய எலிக்கு ஆதரவான போராட்டம் . முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரசாரம் போன்ற காரணமாகத்தான் இவர் நான்கு முறை சிறை சென்றார்.
1. 1882 ஜூலை 16 இல் திலகர் முதன் முதலில் சிறைக்கு சென்றது ஒரு அவதூறு வழக்கில் .
************************************************
பம்பாய் அருகிலுள்ள கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னர் இறந்ததும் அவர் மகன் சிவாஜி VI என்ற சிறுவனை பதவியில் அமர்த்தினர் . அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு .மாதவ் பார்வே கோலாப்பூரின் பொறுப்பதிகாரியாக இருந்தார் .
முதன் முதலில் பத்திரிக்கைகளில் அவதூறு துவேசம் கிசுகிசு எழுதியதே திலகர் தான் .கோலாப்பூர் விவகாரத்திலும் திலகர் புதுசா ஒரு கதை கட்டினார் .'' மன்னர் சத்ரபதி சிவாஜி VI ஒரு பைத்தியம் இல்லை என்றும் ,ஆனால் அவரை பைத்தியமாக்குவதற்கு மருந்து கொடுக்கப்படுகிறது , குறிப்பாக மாதவ் பார்வே மன்னருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தன் கேசரி. மராத்தா பத்திரிக்கைகளில் எழுதினார் .
திலகர் தன் மீது அவதூறு சுமத்தியதாக கார்வார் மாதவ் பார்வே நீதிமன்றத்துக்கு போனார் .இதில் திலகருக்கு 4 மாதம் சிறை தண்டனை கிடைத்தது . சிறைக்கு போனபின்பு ஆங்கில பேராசிரியராக இருந்த வர்ட் ஸ்வர்த் மூலம் அரசுக்கு மனு அனுப்பி பார்த்தார் , ஒன்னும் வேளையாகல , நாலு மாசம் களி தின்னுட்டு வந்தார் .இந்தியாவில் முதன் முதலில் அவதூறு வழக்கில் சிறை சென்றவர் இந்த பால் கங்காதர் திலக் தான்.
2. பிளேக் நோயை பரப்பும் எலிகளுக்கு ஆதரவான போராட்டம்
***********************************************
1897 இல் புனே நகரை பிளேக் நோய் தாக்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்தனர் . நோய் தாக்கி இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய பயந்து பிணங்களை அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறினர் .பாதி நகரமே காலியானது .
நோயை கட்டுப்படுத்த அரசு V.C ராண்ட் தலைமையில் பிளேக் கமிசனை அமைத்தது .
இவர்கள் வீடு வீடாக சென்று பிளேக் நோய் தாக்கியவர்களுக்கு சிகிழ்ச்சை அளித்ததோடு ,வீட்டிலுள்ள சாமான்களுக்கு மருந்து போட்டு சுத்தம் செய்தனர் . அனாதையாக கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தி எரித்ததோடு பிளேக் நோய்க்கு காரணமான எலிகளையும் கொன்றனர் .இவர்களின் முயற்சியால் நோய் கட்டுப்படுத்தப்பட்டது .
உலகமே இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டிய போது திலகர் தன் பார்ப்பன புத்தியை காட்டினான் .
'' மாமிசம் சாப்பிடும் மிலேசளர்கள் அக்கரகாரதுக்குள் நுழைந்ததோடு பிராமணர்களை தீண்டி விட்டார்கள் .பிள்ளையாரின் வாகனமான எலிகளை கொல்லுகிறார்கள் .இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும் '' என கண்டித்து ஊர்வலம் போனார் . பிளேக் கமிசனர் W.C ராண்ட் க்கு எதிராக கேசரியில் எழுதினார் .
திலகரால் உந்தப்பட்ட பார்ப்பன சாபேகர் சகோதர்கள் ஜூன் 22 .1897 அன்று W.C ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் Lt அயஸ்டரை சுட்டுக் கொன்றனர் .
இதனால் பிளேக் நோய் பரப்பிய எலிகளுக்கு ஆதரவாய் போராடிய திலகருக்கு 18 மாதம் சிறை தண்டனை கிடைத்தது .
திலகருக்கு சிறையில் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்கிற வேலை கொடுக்கப்பட்டது . மாக்ஸ் முல்லரின் மூலம் பிரிட்டிஸ் ராணிக்கு மனு கொடுத்து 6 மாதத்துக்கு முன்னாடி விடுதலையானார்.
3. 24.8.1903 பாபா மகராஜ் உயில் மோசடி வழக்கு .
************************************************
கோலாப்பூரில் இருந்த சர்.பாபா மகராஜ் என்ற பெரும் செல்வந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் 7.8.1897 அன்று தன் திரண்ட சொத்துக்கள் தொடர்பாக ஒரு உயில் எழுதி வைத்தார் , சொத்துக்களை நிர்வகிக்க திலகர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார் . உயிலின் படி '' கர்பிணியான தன் மனைவிக்கு பிள்ளை பிறக்காமல் போனாலோ அல்லது பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் இறந்தாலோ தன் வம்சம் செழிக்க ,ஐந்து பேர் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொள்ளவேண்டும் . அந்த பிள்ளை மேஜர் ஆகும் வரை இந்த சொத்துக்களை இந்த ஐவரே பரிபாலித்து வரவேண்டும் '' என எழுதிவைத்து இறந்தார் .
பாபா மகராஜின் மனைவிக்கு பிள்ளை பிறந்து அது இரண்டு மாதத்தில் இறந்து விட்டது .வளர்ப்பு மகன் விசயத்தில் திலகரும் வேறு இரண்டு டிரஸ்டிகளும் சேர்ந்து தன்னை மோசடி செய்வதாகவும் ,துன்புறுத்துவதாக பாபா மகராஜின் மனைவி ஜூலை 29.1901 அன்று கோர்டில் வழக்கு போட்டார் .
24.8.1903 அன்று இந்த வழக்கில் கள்ளக் கையெழுத்து பொய் சாட்சி முதலிய குற்றங்கள் செய்ததற்காக திலகருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
4. முஸ்லிம்களுக்கு எதிராக மத துவேச பிரசாரம் செய்ததால் 6 ஆண்டு சிறை .
************************************************
இந்த வழக்கின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் .
1911 க்கு முன்பு வரை கல்கத்தா தான் தலைநகராக இருந்தது .மெக்காலே கல்வி திட்டம் வந்தவுடனேயே வங்க பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அவர்கள் கல்வி கற்று அரசின் உயர் பதவியில் அமர்ந்தனர் .1858 புரட்சிக்கு பின்பு ஆங்கிலேய அரசும் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததால் அவர்களுக்கு ஆங்கில கல்வி மறுக்கப்பட்ட காலம் .
வங்க பிராமணர்கள் தான் இந்து தேசியத்தை உருவாக்கியவர்கள் .இவர்கள் indian mirror .the national guardian .young bengal .tribune .hindu patriat '' போன்ற இதழ்களை நடத்தி வந்தார்கள் .
1870 இல் அரசு பணிகளில் முஸ்லிம்களையும் சேர்க்க பிரிட்டிசார் முன்வந்தபோது வங்காள பிராமணர்கள் நடத்திவந்த '' இந்து பேட்ரியாட் '' பத்திரிகை ஆகஸ்ட் 2.1870 ல் வெளியிட்ட இதழில் ,அரசின் முடிவை எதிர்த்ததோடு '' முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான கலகக்காரர்கள் '' என்பதையும் ஞாபகப்படுத்தியது .
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த வங்காளத்தில் அரசு துறை பணிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முஸ்லிம்கள் இருந்தனர் .
1905 ல் கர்சன் பிரபு வங்காளம் பிகார் ஒரிசா உள்ளடங்கிய வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரித்ததார். அதுவரை அரசு பணிகளை ஏகபோகமாக அனுபவித்து வந்த வங்க பிராமணர்கள் ,இந்த பிரிவினையால் தங்கள் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்ப்படும் என்பதால் பிரிவினையை ரத்து செய்ய கோரி கல்கத்தா உள்ளிட்ட வங்க பகுதியில் கலவரம் செய்து வந்தனர் .
பிளேக் எலிக்கு ஆதரவாக போராடி சிறை சென்ற திலகர் வெளிவந்தவுடன் வங்க பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதிவந்தார் .இந்த பிரச்னையில் ''அரசு முஸ்லிம் குண்டர்களை ஏவி இந்துக்களின் சொத்துக்களை சேதப்படுத்தி பெண்களை மானபங்கப்படுதுவதாக '' முஸ்லிம்களுக்கு எதிராக மத துவேச கருத்துக்களை தொடர்ந்து தனது கேசரி பத்திரிக்கையில் எழுதி வந்ததால் இவர் மீது இரு மதங்களுக்கிடையே துவேசத்தை வளர்ப்பதாக வழக்கு தாக்கலானது .இந்த வழக்கில் ஜூன் 24 1908 அன்று கைது செய்யப்பட்டார் . இதில் திலகருக்கு 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது .
தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட இப்படிப்பட்ட ஒரு சாதி மத வெறியனை தேச பக்தனாக சித்தரித்துள்ளனர் .
பார்ப்பன சாதி மத வெறியர்களை தேச பக்தர்களாக சித்தரிக்கும் பார்ப்பன புரட்டு வரலாற்றை மாற்றியமைப்போம்.
ஆதாரங்கள் .
1.http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm
2.https://en.wikipedia.org/wiki/Shivaji_IV
3.https://en.wikipedia.org/wiki/Kesari_(newspaper)
4.https://www.mapsofindia.com/on-this-day/july-3-1908-bal-gangadhar-tilak-is-arrested-for-sedition-by-the-british
5.https://en.wikipedia.org/wiki/Chapekar_brothers
6.http://bombayhighcourt.nic.in/libweb/historicalcases/cases/First_Tilak_Trial_-_1897.html
7.http://www.newworldencyclopedia.org/entry/Bal_Gangadhar_Tilak
8.http://www.bombay-book.htmlplanet.com/custom2.html
9.https://indiankanoon.org/doc/1765978/
10.https://en.wikipedia.org/wiki/Bal_Gangadhar_Tilak
11.https://indiankanoon.org/doc/265118/
12.https://books.google.co.in/books?id=905gbgzGN1EC&pg=PA117&lpg=PA117&dq=bal+gangadhar+tilak+kolhapur+case&source=bl&ots=i0AxYblMoa&sig=OjhsQmiKiRpyzmp3q0PrE8VOwRI&hl=en&sa=X&ei=MWI1UpeBC4OErAeJz4DACg#v=onepage&q=bal%20gangadhar%20tilak%20kolhapur%20case&f=false
13.http://bombayhighcourt.nic.in/libweb/judgment/Tilakcases/BalGangadharTilak.html
14.https://indiankanoon.org/doc/1430706/
15.8.நூல் .லோக மான்ய பால கங்காதர திலகர் .
ஆசிரியர் .ஸ்ரீ.எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர் .
அல்லயன்ஸ் கம்பெனி
மைலாபூர் .1938

No comments: