#திராவிடம்அறிவோம் (20)
1940 களில் தென்னிந்தியாவில் S.I. R. மற்றும் M.S.M. எனும் இரயில்வேக்கள் தனியார் நிறுவனங்களாக இயங்கின. இரயில்வே சிற்றுண்டிச் சாலைகளில் பார்ப்பனர்க்குத் தனியிடமும், பார்ப்பனரல்லாதவர்க்குத் தனியிடமும் இருந்தன. இந்த வேற்றுமையை ஒழிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியார் அறிவித்தார். தந்தை பெரியாரின் அறிவிப்பிற்குப் பிறகு இரயில்வே உணவு விடுதிகளில் "பிராமணர்கள் சாப்பிடும் இடம்" எனும் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டன. இந்நிகழ்வு 30.03.1941 அன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து விடுதலையில் 28.03.1941 அன்று தந்தை பெரியார் வெளியிட்ட நன்றி அறிவிப்பு இது.

எனது நன்றி
ஈரோடு, மார்ச், 28-
SIR & MSM ரயில்வேக்களுக்கு சம்பந்தப்பட்ட ஓட்டல், சிற்றுண்டிச் சாலைகளில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று இடம் பிரித்து வைத்திருந்த முறைகள் இம்மாதம் 20ந் தேதியில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதற்காக என்னைப் பாராட்டி பல தோழர்கள் அனுப்பிய தந்திகளுக்கும் கடிதங்களுக்கு, எழுதிய பத்திரிகைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்றாலும் அப்பாராட்டுதல் நமது மே.த. கவர்னருக்கு, மற்றும் நம் தலைவர்கள் பலருக்கும், நம் வீர வாலிபர்களுக்குமே உரியதாகும் என்பதை உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ. ராமசாமி
No comments:
Post a Comment