Tuesday, July 24, 2018

மெகாலே கல்வி திட்டம்.

மெகாலே கல்வி திட்டம்.

நம் நாட்டில் மேற்கத்திய கல்விகொள்கையை உருவாக்கியவர் தான் மெகாலே .
1835ல் உருவாக்கிய கல்வி கொள்கை தான் இன்றைக்கும் நாம் கற்ற அல்ல நம் பிள்ளைகள் கற்கும் கல்விமுறை.

இந்தியாவை உருவாக்கிய கிழக்கிந்திய கம்பேனி இந்தியர்கள் வாழனும்னா அதற்கு நாம் ஆளனும் என்ற உயரிய சிந்தினையில் இந்திய நிர்வாகத்தை வெள்ளையரை வைத்தே நிர்வகிப்பதை காட்டிலும் சில கழுதைகளை உருவாக்கி நம் நிர்வாகமுறைகக்கு அக்கழுதைகளை  புகுத்த என்ன செய்யலாம் என யோசித்தபோது.

இங்கிலாந்தில் தொழில் நஷ்டத்தால் கடனில் தத்தளித்த வழக்கறிஞர் மெகாலே தன் கடனை அடைக்க மாதம் 12ஆயிரம் பவுன்ட்ஸ் சம்பளத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்ப படுகிறார்.

அவரும் ஓராண்டு ஆய்வின் முடிவில்.
கழுதைகளை உருவாக்க ஆங்கில வழி மனப்பாட கல்விமுறை என்ற ஒரு உயரிய கல்விமுறை அறிமுகபடுத்துகிறார்.

அவர் 1835ல் உருவாக்கிய கல்விமுறை காலகட்டத்தில் அப்போ குருகுல கல்விமுறை நடைமுறையில் .
அப்போலாம் தமிழ் கல்வின்னா சிலம்பம் வாள்வீச்சு போன்ற தற்காப்பு கல்விதான்  அதுலயும் வர்ணபேதம் கடுமையாக இருந்த காலகட்டம்.

1835க்கு முன் வெறும் புரானம் இதிகாசம் ஜோதிடம் என்ற குலகல்வியை தடைசெய்து ஆங்கிலேய ஏவலா (கழுதையா) இருக்கனும்னா ஆங்கில வழி கல்விக்கு வாங்கன்னு வெள்ளைகாரன் கூப்பிட்டபோது அதுவரை குலகல்வியே ஒசந்தது என பேசியவன் தான் ஆங்கிலவழி கல்வியை கற்க ஓடினான்.

1835முன் இருந்த சமஸ்கிருத கல்வியை காட்டிலும் எவ்வளோ மேலானது இந்த மெக்காலே கல்வி.
மெக்காலே அவர் தாய்நாட்டுக்கு துளியும் துரோகம் இழைக்காமல் இந்தியாவை நிர்வாகிக்க கழுதைகளை உருவாக்கிவிட்டு போயிட்டார்.

ஆனா அந்த மெகாலே கல்வியை படித்து வெள்ளைகாரனுக்கு ஏவலாக வேலைக்கு வந்தவன்  அந்த கல்விமுறை தொடர்ந்து தன் #சந்நதிகளின் வழையடிவாழையாக தலைமுறை தலைமுறையாக இன்று 2017லு வரை மனப்பாட கழுதை கல்விமுறை நடைமுறைபடுத்தி வந்துகொண்டே தான் இருக்கான்.

1835ல் ஆங்கிலேய அரசு கல்வி விசயத்தில் முழுக்க முழுக்க மேற்கத்திய பானியைதான் திணித்தது.

ஆனா 1857க்கு பிறகு அதாவது சிப்பாய் கலகத்தில் ஆயிரக்கான ஆங்கிலேயரை இழந்த பிறகு மத சாதி வியசத்தில் தலையிடுவதில்லை என்ற குறிக்கோளை ஆங்கில அரசு எடுத்தன அதை தனக்கு சாதகமாக சமஸ்கிருத சகாக்கள் பிடித்துகொண்டு மெக்காலேவின் ஆங்கிலவழி கல்வியோட சமஸ்கிருதத்தையும் இனைத்த கல்விமுறையை படிப்படியாக திணித்தார்கள்,

ஆரம்பகட்ட தொடக்க கல்வியில் சமஸ்கிருதத்தை திணிக்காமல் எல்லாரும் ஓரளவுக்கு படிச்சிட்டு போங்கன்னு விட்டுட்டு உயர்கல்வியில் திணிக்க ஆரம்பித்தார் அப்படி ஒரு வழிமுறைதான் அலோபதி (ஆங்கில) மருத்துவ நுழைவுதேர்வுக்கு சமஸ்கிருத மொழியில் நுழைவுதேர்வை கொண்டுந்தார்கள்.

இன்னைக்கு நுழைத்தேர்வு நீட் போன்றவைக்கு முன்னோடி இது அதை நீதிகட்சி ஆட்சியில் மருத்துகல்வி நுழைவுத்தேர்வை அன்றய முதல்வர் பனகல் அரசர் அதை ரத்துசெய்தார்.

ஆங்கிலேயர் காலம் வரை மெக்காலே கல்வி திட்டம் நடைமுறையில் இந்தது அதன்பின் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னாச்சும் மெக்காலைவை ஒழித்து புதிய கல்விமுறை கொண்டுவரலாம் பார்த்தா ராஜாஜி குலகல்வின்னு 1835க்கு முன் நடந்த கூத்தையே திரும்ப திணிக்கபட்டு அசிங்கபட்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து காமராஜர் ஆட்சிக்கு வந்தார் .காமராஜரால் கல்வி நிலையத்தை தான் திறக்கமுடிந்ததே தவிர கல்வியை மாற்றமுடிலன்னு 1967ல் இன்றய கல்வி வெறும் வேலைவாய்ப்புகான (கழுதைகளுக்கான)  பாஸ்போர்டாக இருக்ககூடாதுன்னு தன் ஆதங்கத்தை சொல்லிட்டு போய்ட்டார்.

அடுத்துவந்த அரைநூற்றாண்டு ஆட்சியிலும் பெரிய மாறுதல்கள் கல்விமுறையில் ஏற்படுத்தாத தால்  மெக்காலே உருவிக்கிய கழுதை உற்பத்தி கல்விமுறை
சமீபத்திய தேர்வு முடிவுகள் வைத்து பார்க்கும்  93% நம் நாட்டு மக்களிடம் மெக்காலே கல்வி ஆக்கிரமித்துள்ளது. இது சி.பி.எஸ்.சி.யில் 98%மாக உச்சத்தில் உள்ளது.

இந்த கல்வி கொள்கையை உருவாக்க அன்று மெக்காலே  காரணம்..
இந்தியாவில் கல்விக்கான படிக்க கற்வேண்டிய புத்தகத்தின் அளவு வெறும் அரை பீரோவில் அடைச்சிவிடலாம் அந்தளவே இங்க விசயம் இருக்கு.
அதனாலே மேற்கத்திய மொழிப்பெயர்ப்பு அவசியம் அதற்காக ஆங்கிலவழி கல்வி அவசியம்னு தான் சொன்னார்.

மெக்காலே அப்படி சொல்வதற்கு காரணம்.
இங்கிலாந்தில் கல்வி வளர தொடங்கிய போது ஆங்கிலத்தை காட்டிலும் லத்தீன் கிரேக்கத்திலே நிறைய கல்வி இலக்கியங்கள் இருந்தன அதை பிரிட்டன் கற்றுகொண்டு தன் மொழியில் மொழிபெயர்த்துகொணட பின் தான் ஆங்கிலவழி கல்வியே அவர்களுக்கு பூர்த்தியடைந்தது.

அதேபோல நம் நாடும் மெக்காலே கல்வி மூலம் ஐரோப்பா இலக்கியத்தை பெற்றுகொண்டு நம் மண்ணின் வாழ்க்கை முறை வாழ்வியல் முறையை கல்வியில் புகுத்தபட்டு இருக்கனும்.

ஆனா உலக கல்விமுறைகள் ஜெட்வேகத்தில் பயணித்துகொண்டு இருக்கையில் நாம் இன்னும் நம் மூதாதையர் நடைபழகிய கட்டைவண்டியை பிடித்துகொண்டு முன்னேறிகொண்டு இருக்கவேண்டிய சூழலை அன்றுமுதல் இன்று வரை கல்விமுறை மாற்றவிடாமல் சிலர் தடுத்துவருகிறார்கள் .!!

No comments: