Friday, April 20, 2018

ஒரு மோடி பக்தனின் புலம்பல்

நான் ஏன் பாஜக வை ஆதரிக்கிறேன்னு ஒருத்தர் சமீபத்தில் புக் போட்டார். இன்று அவர் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தை வெளியிட்ட பின் அவரது சொந்த வியாபாரத்தில் படு மோசமான நிலையில் இருக்கிறாராம். அவரது நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் 35 சதவிகித பேர் அவரை விட்டு சென்றுவிட்டார்கள் என புலம்பி இருக்கிறார்!
உண்மையில், தமிழ்நாட்டு மக்கள், பாஜக மீது எந்த அளவுக்கு வெறியில் இருக்கிறார்கள் என்பதற்கு, இது ஒரு உதாரணம் என நினைக்கிறேன். புக் போட்ட இவருக்கே இந்த நிலை என்றால் எச்சை ராஜாக்களும், சிப் சேகர்களும் அரசியல் அகதிகளாக தான் திரிய வேண்டும் போல.

------



 ★ ஒரு தொழில் செய்பவராக என் தனிப்பட்ட மனவேதனை என்னவென்றால் தமிழகத்தில் பிஜேபி கட்சியை ஆதரிப்பது ஏறக்குறையத் தற்கொலைக்கு சமமான முடிவு. 

★ எனது புத்தக வெளியீட்டுக்குப் பின் நான் சுமார் 35% எனது வெகுநாள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளேன்.


★ எனது வருமானம் பெரும் பாதிப்பை உணர்கிறேன். அத்துடன் அது தொடர்வதும் வேதனை அளிக்கிறது. 

★ "என் புத்தக வெளியீட்டுக்குக் கூட 5பைசா கூட ஆதரவு கொடுத்தவர்கள் கிடையாது இங்கே தமிழக பிஜேபி". நான் புத்தகம் வெளியிட விரும்புகிறேன் என்றதும் எனக்கு உதவியது முழுக்க பிஜேபி ஆதரவாளர்கள் கிடையாது. அவர்கள் மோடி ஆதரவாளர்கள். 

★ வெளியான என் புத்தகம் கூட சென்று சேர்ப்பதில் ஆர்வம் காட்டியது இல்லை இங்கே பிஜேபி என்பது வருந்த தக்க உண்மை.

★ "சார் நீங்கள் நிறைய நிர்வாகம் பொருளாதாரம் சார்ந்த விளக்கம் தந்து எழுதுறேங்க.. நான் வேணும்னா உங்கள் கட்டுரைகளை ஒரு தொகுப்பாக எடுத்து பிழைநீக்கம் செய்து தரவா" என்று முன் வந்தவர் ஒரு திமுக உறுப்பினர். 

★ வெறும் தொலைப்பேசியில் பாராட்டு மட்டுமே தெரிவித்த பிஜேபி தலைவர்கள் இங்கே அதிகம். வேறு எந்த உதவியும் கிடைத்தது கிடையாது. 

★ பிஜேபி கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு வந்ததே??? வந்தது. , ஏதாவது ஒரு அமைப்பின் கீழ் சேர்ந்து கொள்ளுங்கள். வேலை பாருங்கள் என்று அழைப்பு வந்தது. அவ்வளவு தான். 

★ வலதுசாரி கொள்கையும் , இந்த நாட்டை நேசிக்கும் அந்தக் குணத்திற்கும், இந்துதுவா சித்தாந்தமும் , வாஜ்பாய் மோடி போன்ற நல்ல நிர்வாகிகள் மீது கொண்ட அன்பால் நான் பிஜேபி கட்சிக்கு ஆதரவு உருவாக்க வேண்டும் என்று நினைத்தேனே ஒழிய அனைத்து பிஜேபி காரர்களுக்கும் வக்காலத்து வாங்குவது என் வேலை இல்லை. 

★ "இந்த விவரம் தெரிந்த ஒரு பிஜேபி கட்சிக் காரர் கூறுகிறார் - மாரிதாஸ் தியாகம் செய்யலாம் மாரிதாஸ் நாட்டுக்காகத் தியாகம் செய்யலாம்!!!!"... // எப்படி நானும் உன் குடும்பமும் என் அம்மாவும் நடுத்தெருவுக்கு வருவோம் நீங்க காரில் டாட்டா கட்டுவ டீவியில் பிரபலம் என்று திரிவ???? இவர் குடும்பம் சகோதரர்கள் தியாகம் செய்வார்களா??? எனவே 10பைசா உதவினது கிடையாது எனக்கு இந்த தமிழக பிஜேபி.//

★ நான் மோடியை ஆதரித்ததால் இழந்தது தான் அதிகம். ஆனா எப்படி இப்படிப் பேச முடிகிறது இவர்களால்? என்னை அவ்வளவு முட்டாள் என்று நினைத்துவிட்டனரா? 

★ ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டைச் சிந்திக்கும் குணத்தால் தான் நான் வலதுசாரிகளுடன் நிற்கிறேன். எவ்வளவு கேவலமான அட்வைஸ் இது!!!

★ என் தானிட்ட வாழ்வைப் பொருளாதார ரீதியாக வீழ்த்த ஒரு பெரும் கும்பல் கிளம்பியுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. Facebook , politics ஒரு தொழில் செய்பவனுக்குத் தேவையா என்று சிந்திக்கும் அளவுக்கு நான் எதோ ஒரு மன கஷ்டத்தை அடைந்துள்ளேன். 

No comments: