சில வருடங்களுக்கு முன்பு சில NGOக்கள் ஒரு புராஜக்ட்டை ஆரம்பித்தார்கள்.
அதன் நோக்கங்கள்
1) அது சாதி ஒழிப்பு பேசும் தலித் அல்லாத பெரியாரிஸ்ட்களை பிறப்பின் அடிப்படையில் சூத்திரின் என்று பிரித்து அவர்களை தலித்துக்களின் எதிரியாக காட்டுவது. இதன் மூலம் இடைநிலைச்சாதியினருக்கும் தலித்துகளுக்கும் என்றுமே எதிர் எதிர் அணியில் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை செயல்படுத்துவது.
2) தந்தை பெரியாரை அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக முன்னிருத்துவது. இத்தனைக்கும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரை தன் தலைவர் என்று அறிவித்தவர்.
3) விடுதலைச் சிறுத்தை ஆதரவாளர்களிடம் ஊடுருவி தந்தை பெரியாரை எதிரியாக முன்னிருத்துவது, இத்தனைக்கும் அண்ணன் திருமாவளவன் தான் இன்றைய கட்சித்தலைவர்களில் பெரியாரை நன்கு உள்வாங்கியவர்.
4) பிறப்பால் தலித் அல்லாதவர்கள் சாதி ஒழிப்பை பேசினாலும், அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் கருத்துக்களை பேசினாலும் அவர்கள் பிறப்பால் பட்டியலினத்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தலித்துகளிடம் விதைப்பது.
5) அண்ணன் திருமாவளவனை பலவீனப்படுத்த BSP கட்சியினரை பயன்படுத்துவது.
6) பார்ப்பனர்கள் நண்பர்கள், பெரயாரிஸ்ட்கள் எதிரிகள் என்று படித்த தலித் இளைஞர்களிடம் எண்ணத்தை விதைப்பது.
இந்த நோக்கங்களில் இப்பொழுது அவர்கள் ஓரளவிற்கு வெற்றிபெற்றுவிட்டார்கள்.
No comments:
Post a Comment