புலம்பெயர் வந்தேறிகளால் முன்னெடுக்கப்படும் வந்தேறி அரசியல் ! தமிழகத்தில் ஈழப் போராட்டமும் தமிழுணர்வும் கேலிப்பொருளாக ஆக இருப்பது காலத்தின் கட்டாயம் !
ஈழத்தமிழர்களை கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
1. புலம்பெயர் தேசத்தில் அடைக்கலம் பெற்ற ஒரிஜினல் போராளிகள். ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், ஊடகவியலாளர்கள், புலி அமைப்பு நிர்வாகிகள் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இயக்கம் வலுவாக இருக்கும் வரை இவர்கள் புலப்பெயர் தேசங்களில் பல்வேறு இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு பணிகளை கவனித்தார்கள். சிந்திக்கக்கூடியவர்கள், விவரமானவர்கள். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே வர மாட்டார்கள், தங்களை அடையலாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
1. புலம்பெயர் தேசத்தில் அடைக்கலம் பெற்ற ஒரிஜினல் போராளிகள். ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், ஊடகவியலாளர்கள், புலி அமைப்பு நிர்வாகிகள் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இயக்கம் வலுவாக இருக்கும் வரை இவர்கள் புலப்பெயர் தேசங்களில் பல்வேறு இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு பணிகளை கவனித்தார்கள். சிந்திக்கக்கூடியவர்கள், விவரமானவர்கள். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே வர மாட்டார்கள், தங்களை அடையலாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
2. இலங்கையில் நன்றாகக் படித்து, நல்ல பணியில் இருந்தவர்கள். போர் மேகங்கள் சூழச் சூழ, அவர்கள் விரும்பிய சமூக அந்தஸ்தும், வாழ்க்கைச்சூழல் கட்டமைப்பும் கிடைக்காத காரணத்தால், வெளியேறியவர்கள். அவர்கள் ஓரளவு படிப்பும், வசதியும், தொடர்புகளும் பெற்றிருந்த காரணத்தால் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள். வந்த நாட்டில், தங்களுக்கு இருக்கும் கல்வியறிவு, அனுபவம் அடிப்படையில் அந்நாட்டிற்கேற்ப மேற்படிப்பு, மொழி படித்து, அலுவலக வேலை செய்யும் அறிவு சார் தளத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள். வெள்ளைக்காரனுக்கு நிகரான சம அந்தஸ்து வாழ்க்கை வாழ்வது அவர்களது இலக்கு.
3. வெளியே செல்வதற்கு வசதியில்லாமல், சொந்த மண்ணிலே அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டச் சூழல் என்பதால் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருளாதார வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருபவர்கள்.
4. இறுதி போர் முடிந்த கட்டத்தில், இலங்கை அரசால் சிறைப்படுத்தப்பட்டு, மறுவாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள். இதில் சிலர், கடுமையான விசாரணை முறைகளுக்கு பயந்து , அப்ப்ரோவராக மாறி, புலிகள் அமைப்பின் உலகளாவிய கட்டமைப்பை தகர்க்க இலங்கை அரசுக்கு துணை போனவர்கள்.
5. புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ஆயுதப்போராட்டக் குழுக்கள் இயங்கின. இறுதியில் புலிகள் அமைப்பு ஏகோபித்த பிரதிநிதியாக உருப்பெற்றது. அந்தப் பாதையில் பல்வேறு மாற்று அமைப்புகள் இரும்புக்கு கரம் கொண்டு நசுக்கப்பட்டன. அதில் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்து வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றவர்கள். புலம் பெயர் தேசங்களில், இவர்கள் புலிகள் அமைப்புடன் எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். புலிகள் அமைப்பை இவர்களுக்கு பிடிக்காது, இவர்கள் புலிகளை விமர்சிப்பார்கள், புலி ஆதரவாளர்கள் இவர்களை குழப்பவாதிகள் என்பார்கள்.
6. அடுத்து வருவது முக்கியமான கேட்டகிரி. புலம் பெயர் தேசங்களில் வாழும் கணிசமானவர்கள் இவர்கள். போராட்ட சூழலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளின் வசதியான வாழ்க்கைச் சூழலை நாடி இடம்பெயர்ந்தவர்கள். படிப்பறிவோ, உலகஞானமோ அற்ற பாமர மக்கள். அடைக்கலம் பெறுவதற்கு அடிப்படை தகுதி, தங்கள் நாட்டில் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு ஏதாவது காரணம் கூறி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அகதி அந்தஸ்து கிடைக்கும். இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவர். இதில் பலரும் கூறிய காரணம் " புலிகள் எங்களை பிடித்துக் கொண்டு போயி, சண்டை பிடிக்கச் செய்கிறார்கள். " என்பது. அடைக்கலம் பெறும் நாட்டின் பப்ளிக் பிராசிக்யூட்டர் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வெளியேறி மற்ற இடங்களில் இவர்கள் வசிக்கலாம் . எனவே இவர்களுக்கு அடைக்கலாம் தரக்கூடாது என வாதாடுவார். இவர்களோ, சிங்கள பிரதேசத்திற்கு சென்றால் எங்களையும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என கொடுமைப்படுத்துவார்கள் என மன்றாடுவார்கள். இறுதியில் அடைக்கலம் கொடுத்து, தங்குவதற்கு வீடு கொடுத்து, மொழி கற்பிக்க சலுகைகள் கொடுத்து, ஏதேனும் வேலையில் சேர்த்தும் விடுவார்கள். பெரும்பாலும் அறிவுசாரா கழுவல் , துடைத்தல் , துப்புரவு பணி , தொழில்சாலை பணி என பிஸிக்கல் லேபர் செய்வார்கள். மேற்கு நாடுகளில் உள்ள சமூக பொருளாதார இடைவெளி குறைவு என்பதால், இந்தப் பணிகளில் கிடைக்கும் வருவாய் கொண்டு ஓரளவு வசதியான வாழ்க்கை வாழலாம்.
இந்த கடைசி கேட்டகிரிதான் தற்போது எழுந்திருக்கிற சிக்கல்களுக்கு காரணம். கிடைக்கிற வேலையில் நிலைபெற்று வீடு வாசல் வாங்கி கொள்ளுவான். ஒரு கம்பியூட்டர் வைத்துக் கொள்வான். வேலை முடிந்து வந்ததும், லங்காசிறி போன்ற மசாலா ஊடங்களை வாசிப்பது. போரால் பாதிக்கப்பட்டு பின்தங்கிய சமூகத்திலிருந்து வரும் ஊடங்களின் தரம் மற்றும் ரசனை எவ்வாறு இருக்கப்போகிறது? அதில் சினிமா, அரசியல், கட்டுக்கதைகள் , அதாவது சேர்ந்து தமிழக செய்திகள் இடம்பெறும். அதில் சீமான் போன்றோரது உரைகளும் இடம்பெறும். பொழுதுபோக்காக பார்க்கிறவன் அந்த உரைகளை கேட்டு குளிர்ந்து போவான். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படும். புலிகள் குறித்து பேசுவதை பார்க்கையில், புலிக்கொடியை பார்க்கையில், ஈழத்தைக் கடந்து தமிழகத்திலே நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கிறது என்கிற மாயையில் மயக்கம் கொள்வான். புலிகளை பயன்படுத்தி விசா பெற்ற தனது இழிசெயலுக்கு பிராயச்சித்தம் தேடுகிற செயலாக கூட இது இருக்கலாம். யாருக்குத் தெரியும்?!
இவர்கள் அறியாமை காரணமாக சீமான் போன்ற கழிசடைகளை களமிறக்கி, அறிந்தோ அறியாமலோ தமிழகத்தில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக இருப்பவர்களின் உதவி கொண்டு தமிழகத்தில் இருப்பவர்களை வந்தேறிகள் எனத் தரம் பிரித்து இங்கே நிலவும் அமைதியை, எழுந்து வரும் தமிழ் உணர்வை சீர்குலைக்கும் முயற்சி. புலிகள் எங்களை கடத்திக் கொண்டு போயி சண்டை போட வைக்கிறார்கள் என நீதி மன்ற ரிக்கார்டுகளில் பதிவானது, புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு என உலக நாடுகள் குற்றம்சாட்டக் காரணமானது. அவ்வாறு, புலிக்கொடியை வைத்துக் கொண்டு, வைகோ போன்ற பலர் ஈழம் குறித்து கட்டியெழுப்பிய ஆதரவு உணர்வுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு கேவலம் பிழைப்புக்காக அவரையே வசைபாடும் வாய்ச்சொல் வீரர்கள் என்னளவில் மிகப்பெரும் கோழைகள், துரோகிகள், ஈனப்பிறவிகள்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஈழப்போர் முடிந்த பிற்பாடு, நாடு கடந்த அரசு என ஒரு குழு, மற்றொருபுறம் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எடுத்து வைக்க வேண்டும் என ஒரு குழு, இன்னும் பல குழுக்களாக புலம்பெயர் சமூகம் பிளவுற்றுக் கிடந்த காலம். புலப்பெயர் அமைப்பில் இருந்த அறிவுசீவிகள் வைகோ அவர்களை தங்கள் பிரதிநிதியாக உலக அரங்கில் முன்னிறுத்த விரும்பினார்கள். 2008 ஆம் ஆண்டு போர்முனையில் இருந்த புலிகள், ஆஸ்லோவில் நடந்த அமைதி மாநாட்டிற்கு வைகோவைதான் அனுப்பிவைத்தார்கள். போர் முடிந்த பிறகு ப்ருசல்ஸ் நிகழ்வுக்கு அவரைத்தான் அழைத்தார்கள். ஏன்? காரணம், அவரது தொடர் ஆதரவு, தியாகம், 25 ஆண்டுகள் பாராளுமன்றவாதி என்கிற தகுதி , உலக அரங்கில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கான தகைமை என பல காரணம். 2011 ஆம் ஆண்டு நான் இந்தியா வரும் பொழுது, அவரை சந்திக்க இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு என்னிடம் இதை தெரிவிக்குமாறு கோரினார்கள். சரி, அதனால் என்ன என நானும் அவரை சந்திக்கையில் இக்கருத்தை தெரிவித்தேன்.
அதற்கு வைகோ அவர்கள் சொன்ன பதில் " தலைமை ஏற்கின்ற அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத தெரியவில்லை. ஈழத்தமிழர்களுக்கு இன்றும் என்றும் ஒரே ஒரு தலைவன்தான் அதுதான் தம்பி மேதகு பிரபாகரன். உங்களுக்கு ஆதரவாக இங்கே அண்ணன் நெடுமாறன் இருக்கிறார், நான் இருக்கிறேன், இங்கே பல உணர்வாளர்கள் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நான் செய்ய வேண்டிய தலையாய பணி என்னவென்றால், இன்று இருக்கிற 30 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு ஈழப்போராட்டம் குறித்த புரிதலோ வரலாறே இல்லை, எனவே அவர்களுக்கு இது குறித்து எடுத்துச் செல்வதுதான் என் பணி . ஈழம் என்பது தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட உன்னதமான ஒரு போராட்டம். அது ஒரு நாள் வெல்லும் என நான் நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கோரிக்கையை அனுப்பிய சகோதரர்களுக்கு நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். எனக் கூறிவிட்டு, அதன் பிறகு ஈழப்போராட்டம் குறித்து சிடி தயாரிப்பதும் , அதை பள்ளி கல்லூரி வாசல்களில் நின்று விநியோகிப்பதுமாக தன் பணியைச் செய்தார்.
உலகளாவிய அளவில் ஈழத்தமிழர்களுக்கு தலைமையேற்கிற வாய்ப்பு தன்னை தேடி வந்த பொழுது அதை தவிர்த்தவர் வைகோ (ஆதாரம் உள்ளது). அவர் வேண்டாம் என நிராகரித்த பொறுப்புக்கு தன்னைத்தான் வலிந்து சின்னப்பிரபாகரன் எனப் பறைசாற்றிக்கொண்டு, அதே புலி பெயரை வைத்துக்கொண்டு, எச்சில் இலையில் பசியாற வந்தவர்கள் இன்றைக்கு அவரையே கிண்டல் செய்வது வன்மத்தின் உச்சம்.
உலகளாவிய அளவில் ஈழத்தமிழர்களுக்கு தலைமையேற்கிற வாய்ப்பு தன்னை தேடி வந்த பொழுது அதை தவிர்த்தவர் வைகோ (ஆதாரம் உள்ளது). அவர் வேண்டாம் என நிராகரித்த பொறுப்புக்கு தன்னைத்தான் வலிந்து சின்னப்பிரபாகரன் எனப் பறைசாற்றிக்கொண்டு, அதே புலி பெயரை வைத்துக்கொண்டு, எச்சில் இலையில் பசியாற வந்தவர்கள் இன்றைக்கு அவரையே கிண்டல் செய்வது வன்மத்தின் உச்சம்.
இது ஒரு புறம் இருக்க, இந்த புலம்பெயர் புண்ணாக்குத் தமிழர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை / எச்சரிக்கை என்னவென்றால், உன் ஈழப்பிரச்சனை , உன் மேதகு பிரபாகரன் எல்லாம், வைகோ அறிமுகப்படுத்தும் வரை எனக்குத் தெரியாது. அவரது அரசியல் நேர்மையும், தனிமனித ஒழுக்கமும் தான் அவர் பரிந்துரையை என்போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஏற்றுக் கொண்ட அரசியல் தளத்தில், தன்னலம் பாராது மக்கள் பிரச்சனைகளுக்கு போராடுவதையே வாழ்க்கையாக கொண்ட வைகோவை ஒருவன் பெட்டி வாங்கி கொண்டான், வடுகப்பயல் என வாய்க்கூசாமல் மீம்ஸ் போட்டு விமர்சிக்க இயலுகிறதென்றால், உன் மேதகு பிரபாகரன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டன் இல்லை. நாங்களும் உன்னைப்போன்று படிப்பறிவற்ற பாமர வந்தேறிகள் இல்லை. நன்கு பயின்று, தொழில்நுட்பத்தில் பணியாற்றும், பல்வேறு தரவுகளை அலசி ஆராயும் நுண்ணறிவு பெற்றவர்கள்தான். வைகோ மீது வைக்கப்படும் விமர்சங்கள், கேலி கிண்டல்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கிண்டலாக உன் மேதகு மீது விமர்சனம் எழுத எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது. அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு காரணம், வைகோ தாங்கிப்பிடித்த ஈழக் கொடியை தாளாமல் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலத்தால் மறக்கப்பட வேண்டிய, மறக்கடிக்கப்பட்ட வேண்டிய தவறுகளை கீறி ரணமாக்க வேண்டாமே என்கிற கரிசனமும் ஒரு காரணம்.
மேலும், உண்மையான போராளிகள், அறிவுசீவிகளின் போராட்டம், இழப்பு மற்றும் எண்ணற்றோர் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக ஆகி விடும் , அதற்கு நமது பண்பட்ட மனம் ஒத்துழைக்காது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எனக்கு அணைத்து தரப்பிலும் ஈழத்து நண்பர்கள், உறவினர்கள் உண்டு, அவர்கள் மனதை ஏன் புண்படுத்துவானேன் என்கிற எண்ணம் உள்ள காரணத்தால். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் வளர்ந்து வரும் ஈழ ஆதரவுக்கு, தமிழ் உணர்வுக்கு எதிராக உயர்மட்டத்தில் பின்னப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுமையை சோதிக்கிற வேலையை தான் தமிழகத்திலே இந்த தற்குறிகள் செய்து கொண்டு திரிகின்றன. நாலு பேர் ஈழப்போராட்டம் குறித்து மீம்ஸ் போட்டால் அது பற்றிக்கொள்ளும், அதை கொண்டு இந்தக் கோமாளிகளுக்கு வந்தேறி வியாபாரம் சூடு பிடிக்கும். இறுதியில், ஒரு உன்னதமான போராட்டமும், எண்ணற்றோர் உயிர்தியாகமும் கேலிக்குரியதாகிவிடும். காலம்கடந்த பிறகு எங்களைக் கடிந்து கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. எனவே ஈழத்து 'ஒரிஜினல் போராளிகள்', தமிழகத்தில் உள்ள 'உண்மை' உணர்வாளர்கள் இதை கவனிக்க வேண்டும்.
No comments:
Post a Comment