ஈழம் தமிழகத்தால் தீர்த்து வைத்து விட கூடிய பிரச்சினை அல்ல. அதன்பின் இருந்தது சர்வதேச அரசியல். இப்போதாவது படித்து பாருங்கள். இல்லையேல் திரும்ப திரும்ப பகிர்வேன். பொய் பரப்புரை செய்யும் உங்களுக்கே கூச்சம் இல்லாத போது உண்மையை சொல்லும் நாங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்...
இன்றொரு வரலாறு
ஈழம் அதன்பின் உள்ள சர்வதேச அரசியல்
இன்றும் கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தை காப்பாற்றியிருக்க முடியும் என்று சொல்பவர்கள் உண்மையிலேயே அறிவற்று பேசுபவர்கள் தான். ஏனெனில் அன்றைய ராஜீவ் காந்தி இன்றைய சோனியா காந்தி என எவர் நினைத்திருந்தாலும் அவர்களால் ஈழப்போரை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இங்கிருக்கும் யாரையும் நம்பி ஆரம்பிக்கவில்லை. அது தானாக எழுந்த காட்டுத்தீ.
அன்றைய இலங்கைப்போரில் பங்கு கொண்ட நாடுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள். அந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அனைவருக்கும் ஒரே லட்சியம் புலிகளை அழிப்பது மட்டுமே. இந்த நாடுகளுக்கு உள்ள காரணங்களை பார்ப்பதற்கு முன்னர் எல்லா போரிலும் பங்கெடுக்கும் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பங்கெடுக்காததற்கும் காரணங்கள் உண்டு. அதை முதலில் பார்ப்போம்.
இலங்கை. இந்திய பெருங்கடலில் அமைந்த ஒரு அழகான தீவு. அழகு என்பதை தாண்டி வாணிபத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பல துறைமுகங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த துறைமுக இடங்களில் பல இடங்களில் வசித்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்த துறைமுகங்களின் மீது உலக நாடுகளுக்கு எப்போதுமே ஒரு கண் தான். கிழக்காசிய நாடுகளையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளையும் இணைக்கும் இந்த நாட்டின் மீது எப்போதுமே எல்லா நாடுகளுக்கும் ஒரு கண்தான்.
ஈழப்போர் நடந்து கொண்டிருக்க அதை பார்த்து கொண்டிருந்த உலக நாடுகளுக்கு உண்மையை சொன்னால் ஒருவித பயம் தான். புலிகளின் போர்த்திறன் அப்படி. புலிகளுக்கு முன்னும் சரி பின்னும் சரி முப்படை வைத்திருந்த போராட்ட குழு உலகில் எவரும் இல்லை. இந்தோனேசியாவில் சுகர்னோ என்பவர் அவரின் போக்குவரத்திற்காக ஒரே ஒரு ஹெலிகாப்டர் வைத்திருந்தார். சண்டைக்கென போர் விமானங்கள் வைத்திருந்த ஒரே போராட்ட குழு புலிகள் தான். விமானம் வைத்திருந்ததை விட மிகப்பெரிய விசயம் அந்த விமானங்கள் எங்கே உள்ளன என்று எந்த சாட்டிலைட்டாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மொத்த விமானத்தையும் கழட்டி மூட்டை கட்டி வைத்து விடுவர். தேவைப்படும் போது மீண்டும் இணைப்பர்.
1999-ம் ஆண்டு செக் குடியரசிடம் இருந்து விமானங்கள் வாங்கினர். ஒரு நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சி தான் வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தியது. அதனால் தான் இவர்கள் ஜெயித்து வந்தால் நமக்கும் இடையூறு தான் பிற போராட்டக் குழுவினருக்கும் இது உத்வேகமாக அமைந்து விடும் என்ற எண்ணம் தான் அமெரிக்காவை வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்க்க வைத்தது.
அடுத்து இந்தியா சென்றதற்கு ஒரே காரணம் பெரியண்ணன் மனப்பான்மை தான். ஆசியாவில் சீனா வளரந்து வரும் நேரத்தில் இந்தியா இந்த பிரச்சினையை முடித்து வைத்தால் அதன் மதிப்பு உலக அரங்கில் உயரும். அதனால் தான்.
பாகிஸ்தான் வந்ததற்கு காரணம் இந்தியா தான். அது உருவானதில் இருந்தே தேசம் வளர்ந்ததோ இல்லையோ இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இயற்கையாகவே வந்து விட்டது. அதன் வெளிப்பாடாகவே மற்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாக இலங்கைக்கு உதவி செய்தது.
சீனா வந்ததிற்கு முக்கிய காரணமும் இந்தியா தான். செய்தித்தாள்களில் வருவது போல் சீனாவின் நீண்ட கால திட்டம் pearl chain எனப்படும் முத்து மாலை திட்டம் தான். ஏற்கெனவே பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நல்ல உறவு உள்ளது. பர்மாவில் சீனாவிற்கு என துறைமுகமும் உள்ளது. இதில் இலங்கையையும் பிடித்து விட்டால் இந்தியாவுடன் போர் வந்தால் இந்தியாவை சுற்றி வளைக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தான். இலங்கைக்கு இலங்கையை தமிழர்கள் அல்லாத சிங்கள தேசமாக மாற்ற வேண்டிய ஆசை. ஆனால் சீனாவிற்கோ இலங்கையை சீனாவின் தொங்கு தேசமாக மாற்றும் ஆசை.
இந்தோனேசியா வந்ததற்கு காரணம் வாணிபம் மட்டுமே. வாணிப தொடர்பு உள்ள ஒரு நாட்டிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் வந்தது.
ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வந்ததற்கு காரணம் புலிகள் தான். 1990-ம் ஆண்டு புத்தளம் என்னும் ஊரில் இருந்த சில இஸ்லாமியர்கள் சிலர் சிங்களர்களுக்கு ஆதரவாக புலிகளை பற்றிய தகவல்களை அவர்களுக்கு அளித்து வந்தனர். அதை தெரிந்து கொண்ட பிரபாகரன் எல்லா இஸ்லாமியர்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டுமென 1990-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்து விட்டது. இருந்தாலும் இந்த முடிவிற்காக வருந்துகிறோம் என 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண்டன் பாலசிங்கம் பிரபாகரனை பக்கத்தில் வைத்துக் கொண்டே சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இருந்தும் இதை ஏற்றுக்கொள்ள இஸ்லாமிய நாடுகள் தயாராக இல்லை. முடிவு அவர்களும் இலங்கை அரசுடன் இணைந்தனர்.
இப்படி பல சர்வதேச நாடுகளால் பிண்ணப்பட்ட சிக்கலான வலைதான் ஈழப்போர் என்பது. இதில் அடிப்படை அறிவு உள்ள எவனும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்ட மாநிலத்தின் முதல்வரால் இந்த போரை நிறுத்தியிருக்க முடியும் என்று கூற மாட்டான். அப்படி மீறி கூறினால் அவன் உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறான் என்பதறிக...
No comments:
Post a Comment