ஆரியரும், பெண்களும்
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வெகு தூரம் பயணப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்த போது அவர்கள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்ததற்கு சான்று எதுவும் இல்லை.
அதேசமயம் சடங்குகளையும், யாகங்களையும் செய்து ஏய்த்து இங்கிருக்கும் மன்னர்களை மோசடி செய்து தேவதானா,அக்கிரகாரா என்று நிலங்களையும், பொண்முடிப்புக்களையும் தானங்கள் பெற்றது போல இந்த மண்ணைச் சேர்ந்த பெண்களை கன்னிகா தானம் பெற்றுத்தான் பெண்டாளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
இப்படி தன் இனத்தில் இல்லாத பெண்களை - காதலோ காமமோ கொள்ளாத பெண்களை அடிமைகள் போல தானமாய் பெற்றுதான் கலவி செய்வது அவர்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது.
எனவேதான் வேதத்தில் இவர்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போது,"பெண்கள் அனைவரும் சூத்திரர்களைப் போல அவர்களுக்குச் சமமாக நடத்தப் பட வேண்டியவர்கள்" என்றும் "பெண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்" - என்றும் எழுதியும் போதித்தும் வைத்தார்கள்.
திராவிடச் சமூகத்தைப்போல தாய்வழிச்சமூகமாக அல்லாமல் அதற்கு முழுக்க முரண்பட்டு ஆணாதிக்கம் கொண்ட ஆண்வழிச்சமூகமாக ( Patriarchial society ) ஆரியச் சமூகம் வரலாற்று ஆசிரியர்களால் அடையாளம் காட்டப்படுவதும் இதனால்த்தான்.
இன்றைக்கு இந்துத்துவா கும்மல் எல்லா இடங்களிலும் வன்புணர்வு செய்து திரிவதற்கும், அவர்கள் அனைவருமே பெண்கள் தொடர்பாக மிகக் கீழ்த்தரமாக கருத்துக்கள் வைத்திருப்பதற்கும்- அதனை கூச்சமின்றி வெளியே பேசுவதற்கும் இந்த வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் முக்கியமானவைகளாகும்.
No comments:
Post a Comment