1991 ம் ஆண்டு காவிரி விகாரத்தின் பொழுது வீரப்பன் எங்கிருந்தார் என்று கேட்டால் ... யாருக்கும் பதிலிருக்காது ... 1995 ம் ஆண்டு சன் டிவி க்கு அவர் தேவைப்பட்டார் , அவர்கள் கொடுத்த பணம் வீரப்பனுக்கு தேவை பட்டது , பயன்படுத்திக்கொண்டார் , அப்பொழுதும் பார்த்தீர்கள் என்றால் காவிரி குறித்தெல்லாம் அவர் எதையும் பேசியிருக்க மாட்டார் . ஆனால் 1997 ம் ஆண்டு அவருக்கு கடுமையான பண நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் தான் தமிழ் தேசிய இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்புகள் ஏற்படுகிறது .... அதன் பின்னர் நடந்த ராஜ்குமார் , நாகப்பா விவகாரங்களை நாம் அறிவோம் . இதில் எங்கும் காவிரி என்கிற பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லை . கடைசியில் 2004 இல் அவர் கொல்லப்படுகிறார் ... அவர் சட்டப்படி காவல் துறையிலோ துணை ராணுவம் அல்லது ராணுவத்திலோ இணைந்திருந்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு செல்லும் சாதுர்யம் கொண்டவர் என்பதில் மாற்றுக்கருதுமில்லை ஆனால் அவரை பெரிய மாவீரன் என்றும் காவிரியை அவர் மீட்டிருப்பார் என்றும் கட்டமைப்பதில் தான் நமது உணர்ச்சி குவியல்கள் சங்கமிக்கிறது .
No comments:
Post a Comment