Wednesday, September 04, 2019

சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்

50% சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனரல்லாதாருக்கு சாகு மகராஜ் அறிவித்ததும், பார்ப்பானுங்க சேர்ந்து சாகுவை கொல்வது என முடிவெடுத்தார்கள்.

தீர்த்தத்திலே விஷம் கலந்து கொடுத்தாங்க. ஆனா பார்ப்பான் கை நடுக்கத்தால் தூர கொட்டிய சாகு, தன் உயிர் எந்நேரத்திலும் பறிக்கபடலாம் என உணர்ந்து, மக்களுக்கான இன்னும் அநேக திட்டங்களை போடணும் என்ற பரந்த எண்ணத்தில், தொழில் மட்டும் வைசியனும், பார்ப்பானும்தான் செய்யணுமா? அதை சூத்திர, பஞ்சமனுக்கும் கொடுத்தால் என்ன? என யோசித்து ''கங்காராம் காம்ளே'' என்ற சூத்திரரை ஹோட்டல் நடத்த சொன்னார்.

சாப்பிட யாரும் வரலை என்றதால் ஒரு சட்டம் இயற்றினார். ''எனது அரசாங்கத்தில் உங்களுக்கு ஏதேனும் வேலை ஆக வேண்டுமெனில், இந்த காம்ளே ஹோட்டலில் சாப்பிட்ட பில்லில் அவர் கையெழுத்திட்டிருந்தால் உடனே ஆகும்''. இப்ப ஹோட்டலில் நீண்ட கியூ. எல்லாம் விற்பனையானது.

இது எதை காட்டுது என்றால் ''அதிகாரம் நம் கையிலிருந்தால் சட்டத்திற்குட்பட்டு எதையும் செய்ய வைக்கலாம்'' என்பது.

இந்த பிற்படுத்தபட்ட சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதை இதற்கு முன் எப்பவாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?

No comments: