Wednesday, September 04, 2019

ஏன் #பார்ப்பானியத்தை விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும்?

ஏன் #பார்ப்பானியத்தை விமர்சனம் செய்து கொண்டே இருக்க வேண்டும்?

பொதுவாக #பார்ப்பனர்களிடம் போய் "நீங்கள் தயிர் சாப்பிட கூடாது, பருப்பு கடைய கூடாது, எங்கள் கோவிலுக்கு வர கூடாது, இதை செய், அதை செய், இதுதான் விதி, பூணுல் போட கூடாது" என்று நாம் யாரும் சொல்வதில்லை. #நாத்திககொள்கையுடையவர்கள் கூட "எங்கோ மூலையில் அவன் நம்பிக்கைக்கு ஏதாவது பண்ணிட்டு போகட்டும்ன்னு" விட்டுட்டு தான் நகர்வார்கள்.

ஆனால் பார்ப்பனீயம் இதற்கு #நேர்எதிர்மறையானது, தனக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கூட, தனக்கு சம்மந்தப்படாத விவகாரத்தில் கூட, தான் உருவாக்கிய #சட்டதிட்டங்கள் நிலைத்து இருக்க வேண்டுமென, #சமூகத்தை தன் #சித்தாந்தத்தால் சீண்டிக்கொண்டே இருக்கும்.

நாம் அதிகபட்சமாக என்ன செய்வோம் என்றால், "நீ சொல்ற மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது, நீ எவன்டா சொல்றது" என்று அவர்கள் நிறுவுகிற விஷயங்களை காலில் மிதித்து துச்சமாக பதில் விமர்சனம் செய்வோம், கேலி செய்வோம்.

அவ்வளவுதான், இதை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் குதிப்பவர்கள் தான் #பார்ப்பனவாதிகள். அதாவது அவர்கள் செய்யும் #அநீதியை நீங்கள் பதிலுக்கு கூட செய்ய தேவையில்லை, அவர்களது சித்தாந்தத்தை துவம்சம் செய்ய பேசுவதையே பெரும் குடைச்சலாக கருதுபவர்கள்.

பொதுச்சபையில் அப்படியான அவர்களது நம்பிக்கை சார் விவகாரங்களை கிளறி விட்டால் ரத்தக் கொதிப்பு வந்து காட்டு கத்தல் கத்துவார்கள், நாம் அப்படி எதுவும் சொல்லியிருக்க மாட்டோம், அவர்கள் பேசின விவகாரத்திற்கு சம்மட்டி அடி கொடுத்து பதில் கேள்வி கேட்டிருப்போம் அவ்வளவு தான்.

அதிகார இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களிடம் நற்பெயர் வாங்கி எப்படியும் காரியத்தை சாதித்து கொள்வார்கள் அதுவேற விஷயம், ஆனால் அவ்விடத்தில் இல்லாமல் நீங்கள் சாமானியனாய், #சமமாய் பேசுவதையே விரும்பாத அளவு ஆதிக்கபுத்தி ஊறியது தான் #பார்ப்பனீயம்.

பட்டும் படாமல் விமர்சனம் செய்வோமென்றால், இதில் மட்டுமல்ல, வேறு எதிலும் அவர்களை நீங்கள் வெறுப்பேற்றி பார்க்க முடியாது.

No comments: