Wednesday, September 04, 2019

மகாத்மா ஜோதிராவ் பூலே பிறந்த தினமே உண்மையான ஆசிரியர் தினம்

உண்மைகள் கசக்கத்தான் செய்யும் இருந்தாலும் தெரிந்து கொள்வதில் பிழையில்லை ஆசிரியர் தினம் குறித்த வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு செய்தியை இந்த நாளில் உங்களுக்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

உண்மையில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டியநாள்......

ஏப்ரல் 21 தான்,

என்பதை மனசாட்சியோடு வரலாற்றை நோக்குபவர்களுக்குப் புரியம். இந்திய வரலாறு பெரும்பகுதி துரோகத்தாலும் இருட்டடிப்பாலும் உருவானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எழுதப்பட்டுவிட்டதாலேயே ஒரு வரலாறை கட்டி அழவேண்டிய அவசியம் நமக்கு தலைவலியாய்தான் நாளும் பின்தொடரும்.... எழுதப்படாத வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகளை நாம் எப்போது கைப்பற்றி நடக்கிறோமோ அப்போதுதான் உண்மையான சமூக, பொருளாதார ஜனநாயகத்தை நம்மால் படைக்கமுடியும்.......

ஆம்! அப்படி இருட்டிப்புக்கும் துரோகத்திற்கும் ஆளானவர்கள்தான் மகாத்மா ஜோதிராவ் பூலே-சாவித்ரிபாய் பூலே ஆவார்கள். நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம், செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசாரியர் தினமாக கொண்டாடுப்படுவதின் வரலாற்று பிழைகளைச் சுட்டிக்காட்டாவே.....

பூலே பிறந்தது 1827 ஏப் 21 , இராதாகிருஷ்ணன் பிறந்தது 1888 செப் 5. பூலே பிறந்தது சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் பிறக்கிறார். பூலே, ராதாகிருஷ்ணன் பிறந்த இரண்டாமாண்டே அதாவது 1890 லேயே இறந்துவிடுகிறார். அப்படியெனில் இராதாகிருஷ்ணன் பிறப்புக்கு முன்பே தன் வாழ்நாள் பணியை புரட்சிகரமாக செய்து முடித்துவிட்டார்.....

சத்திரிய மாலி வகுப்பில் பிறந்து 12 வயதில் சாவித்ரிபாயை மணந்தார்.
1848-ல் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பள்ளி தொடங்கினார். பிறகு,
1851-ல் அனைத்து சாதி பெண்களுக்குமான பள்ளி என மாற்றினார். பல சவால்களுக்கிடையிலும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கிடையிலும் ஆசிரியர் கிடைக்காமல் தனது மனைவியை ஆசிரியராக பயிற்றுவித்து சமுகப் புரட்சியை செய்தார். இதையெல்லாம் பாராட்டும் விதமாக 1888-ல் பூனாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஜோதிராவ் பூலேவுக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. காந்திக்கு மாகாத்மா என்பது கொடுக்கப்பட்ட பட்டமல்ல சூட்டிக்கொண்ட பட்டம் என்பது நாம் பிற்காலங்களில் அறிந்து கொண்ட உண்மை....

அதுமட்டுமல்ல பூலே விதவை மறுமணம், குழந்தை திருமணம், சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு என பல தளங்களில் இந்திய முற்போக்காளர்களுக்கெல்லாம் தந்தையாக இருந்துள்ளார்.....

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பூலே பிறந்து 60 ஆண்டுகளுக்கு பின்னால் பிறந்த ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுவது வரலாற்று இருட்டடிப்புதான் என்று சொல்லத்தோன்றுகிறது......

ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தார், தத்துவவாதியாக இருந்தார், துணைவேந்தராக இருந்தார், பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்தார்,  வேதநூல்களின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்,  ஜனதிபதியாக இருந்தார் என்பதால்தான் அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுகிறது என்றால் அதைவிட சிறப்புக்குறியவர் மாகாத்மா பூலே ஆவார் என்பதை மேற்கண்ட சான்றுகள் வழி மறுத்துவிட முடியுமா?.....

காரல் மார்க்ஸ் சொல்வதைப்போல உலகை ஆராய்வதல்ல வரலாற்றின் பணி.... உலகை மாற்றுவது.... என்பார். அந்த கூற்றை மெய்ப்பித்துக்காட்டியவர் மகாத்மா பூலே.....

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு
1848 -லேய பள்ளி தொடங்கி தன்மனைவியையும் ஆசிரியராக்கி சமுகமாற்றத்திற்கு வித்திட்டவர். இவர் பிறந்தநாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்கவேண்டும்...... அவர் கல்விப்பணி மட்டுமா செய்தார்..... தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு,  சாமி சடங்குகள்,மத  கலாச்சார சுரண்டல் எதிர்ப்பு  என பல தளங்களில் போராடியுமுள்ளார். இவருடைய பிறந்த நாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்க வேண்டும்.....

இந்து மாதத்தின் தந்திரமே அனைத்தையும் இருட்டடிப்பு செய்து விழாவாகவும் சடங்காகவும் சட்டமாகவும் மாற்றுவதுதான். இதைத்தான் மனுவும் செய்யச் சொல்கிறது....

வராலாறை மாற்ற நினைக்கும் நாமும் சூழ்ச்சிக்கு இரையாகி போலியான ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமா? பாபாசாகேப் Dr.அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக்கொண்ட முன்னோடிகளில் ஜோதிராவ் பூலே முக்கியமானவர். அம்பேத்கரிய இயக்கம் என்பது பூலேஅவர்கள் இயக்கத்தின் தொடர்ச்சியே. பாபாசாகேப் அவர்களின் கூற்றுப்படி "கல்வியின் நோக்கம் தன்னை அறிந்துகொள்வதோடு மட்டுமில்லாமல் உலகத்தை மாற்ற வேண்டும். இங்கே உலகம் என்பது ஜாதிய அடிமைமுறை ஏற்றத்தாழ்வை மாற்ற வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். இப்படி அறியாமையை அகற்றிய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களே உண்மையான கல்வித்தந்தை அவருடைய பிறந்த தினமே உண்மையான ஆசிரியர் தினம். ஜெய் பீம்

No comments: