Wednesday, September 04, 2019

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?, இந்தி அவசியமாக படிப்பது தேவையான ஆணிதானா? என்ற விவரங்களை நன்கு விளங்கிக்கொள்ள கீழ்க்கண்ட கேள்விபதிலை படியுங்கள்!

கேள்வி:
#இந்திபடித்தால்நல்லதுதானே?*

பதில்:
இந்தி மட்டுமல்ல...நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் உங்கள் சுயவிருப்பத்தின் பேரில் தாராளமாக படியுங்கள். உங்களை யாரும் எதிர்க்கவே இல்லை.

ஆனால் நீங்கள் ஒருவர் விரும்புவதற்காக இம்மாநிலத்தில் உள்ள எல்லாரும் இந்தி படிக்க முடியாதல்லவா?

அதனால் நீங்கள் உங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் சொந்த காசை பயன்படுத்தி இந்தி என்ன? ஜெர்மன், மராத்தி, ஸ்பானிஷ், உருது, மலாய், சமஸ்கிருதம், பிரஞ்சு என எது வேண்டுமானாலும் படிங்க. நாங்க யாரும் குறுக்கே நிற்க மாட்டோம்.

*கேள்வி:
#மூன்றாவதுமொழிநல்லதுதானே?*

பதில்:
நீங்கள் மூன்றென்ன, முப்பது மொழிகளை கூட படிங்க. ஆனா நீங்க மூன்றாவது மொழி படிக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாடே மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்று நினைக்காதீங்க

*கேள்வி:
#தமிழ்நாட்டில்நிறையஇந்திபேசும்_மக்கள் வேலைக்கு வருகிறார்கள். என்னால் அவர்களுடன் இந்தி பேச முடியவில்லையே?*

பதில்:
சொந்த மாநிலத்தில் பிழைக்க வழியில்லாமல் இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துக்கு வரும் மற்ற மாநில சகோதரர்களை மூன்று மாதம் அவர்கள் பாேக்கில் விடுங்கள். அவர்கள் தன்னால தமிழ் கற்றுக்கொண்டு உங்களோடு உரையாடுவார்கள். உங்களுக்கு இதில் சந்தேகமா? என்னுடன் போரூர் அடையார் ஆனந்த பவனில் ஒரு காபி அருந்த வாங்க. அழகு தமிழில் நம்மிடம் ஆர்டர் எடுக்கும் அசாம் மாநில பெண்களை காட்டுகிறேன்.

*கேள்வி:
#வேலைக்காகநான்வடமாநிலங்களுக்குசென்றால்இந்திதெரிஞ்சிருந்தா_நல்லதுதானே?*

பதில்:
7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மாநிலத்திலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் செல்பவர்களை விட வெளிநாடு செல்பவர்களே அதிகம்.

Delhi செல்பவனை விட Dubai, Detroit செல்பவனே அதிகம்.
Maharashtra செல்பவனை விட Melbourne, Manhattan செல்பவனே அதிகம்.
Lucknow செல்பவனை விட London, Los Angeles செல்பவனே அதிகம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க குழம்பவே வேண்டாம். கற்றறிந்த தமிழர்களுக்கு வேலை தர வெளிநாடுகளே வரிசைக்கட்டி நிற்கையில் இந்தி மாநிலங்களில் நமக்கென்ன வேலையிருக்கு?

*கேள்வி:
#மென்பொருள்நிறுவனங்கள்வடமாநிலங்களில்பணியில்அமர்த்தினால்_என்னசெய்வது?*

பதில்:
மென்பொருள் நிறுவனங்களில் வேலை என்பது தமிழர்களின் ஆங்கில புலமைக்கும், கணினி அறிவுக்குமானது. உங்களுக்கு இந்தி தெரிந்தால் மட்டுமே வேலை என்று எந்த மென்பொருள் நிறுவனமும் சொல்லவே சொல்லாது.

ஒரு வேளை நீங்கள் பணிநிமித்தம் வடமாநிலங்களுக்கு செல்ல நேர்ந்தால் மூன்று நான்கு மாதங்களில் இந்தி பேசிவிட உங்களால் முடியும்...கவலை வேண்டாம்.

*கேள்வி:
#அதுஎப்படிசாத்தியம்?*

பதில்:
எந்த கல்வியறிவும் இல்லாமல் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து தமிழும் கற்று தனக்கு தெரிந்த வேலையை வடமாநிலத்தவரால் செய்ய முடியும் போது...எல்லா பெரும்படிப்புகளும் படித்து, பெரிய வேலைக்கு செல்லும் உங்களால் முடியாதா என்ன?

எத்தனையோ கல்வியறிவு இல்லாத தமிழர்கள் காலம் காலமாய் அரபியாே, உருதோ தெரியாமல் எப்படி வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றார்கள், பிழைத்தார்கள்?

*கேள்வி:
#எனக்கு_வடக்கில்தான்வேலை.
#இந்திதெரியாமநான்எவ்வளவுகஷ்டப்பட்டேன்_தெரியுமா?*

பதில்:
நீங்கள் மட்டுமா கஷ்டப்பட்டு இப்பாே கத்துக்கிட்டீங்க? உங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஆனா ஒட்டுமொத்த தமிழர்களோடு ஒப்பிடும் போது உங்களோட சதவிகிதம் ஒன்றுமேயில்லை. நீங்க இந்தி தெரியாம  கஷ்டப்படக்கூடாது என்பதற்காக  நாங்க எல்லாருமே இந்தி தெரிஞ்சிக்க  கஷ்டப்பட முடியாது.

*கேள்வி:
#எல்லாம்சரிதான். #ஆனாலும்எனக்குஇந்தி_படிக்கனும்?*

பதில்:
தாராளமாக படிங்க. உங்க வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தி படிங்க. நாங்க யாரும் உங்களை தடுக்கவே இல்லை. உங்க ஒருவருக்காக ஊரே இந்தி படிக்க முடியாது என்று தான் சொல்லுறோம்.

*கேள்வி:
#அப்படிஎன்னங்கஉங்களுக்குஇந்திமேலகாண்டு? #அவ்வளவுதமிழ்வெறியா_உங்களுக்கு?*

பதில்:
நாங்க இந்திக்கு எதிரியில்லை.
கட்டாய இந்திக்கு மட்டுமே எதிரி.

எந்த மொழியை நான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த தேர்வு. அது வெறியல்ல. மாறாக அரசே நான் இந்த மொழியை படித்தாக வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துவது தான் வெறிச்செயல்.

No comments: