Wednesday, September 04, 2019

ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ்

இந்த படத்தில் இருப்பவர்களை உங்களில் பலருக்கு தெரிந்து இருக்காது.
ஆனால் இந்த கதை இன்றும் முடியவில்லை என்பது தான் சோகம்.


1990 களில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் தொழு நோய் தலை விரித்து ஆடிய போது, அங்கு வந்து தொழுநோயாளிகளுக்கு சேவை செய்ய வந்த ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் தான் இவர்கள்.

அக்காலத்தில் தொழுநோயாளிகளை அப்பகுதியில் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளை சேர்த்து இடம் கொடுத்து அரவணைத்து வந்தார் ஸ்டெயின்ஸ்.

இந்து இந்து கத்திய எவனும் அந்த நோயாளிகளை கவனிக்கவும் இல்லை, மாறாக பூர்வ ஜென்ம கர்மா என்று ஒரு கருமம் பிடித்த காரணம் சொல்லி வசதியாக ஒதுக்கி தள்ளினார்கள். இவர் தான் வந்து அவர்களுக்கும் ஒரு சரணாலயம் ஆனார். அது மட்டுமில்லாமல் மருத்துவ முகாம் நடத்தி மேலும் பரவுவதை தடுத்தார்.

இவரால் ஈர்க்கப்பட்டு சேவை செய்ய வந்த பலர் , ஒடுக்கப்பட்ட மக்கள். இந்த மனுவாத சமுதாயத்தால் நிரந்தர தொழுநோயாளி என ஒதுக்கி தள்ளப் பட்டவர்கள். அவர்கள் க்றிஸ்த்வ மதத்தை தழுவ ஆரம்பிக்க , வந்தது மதக்காவலர்களான பஜ்ரங் தளத்துக்கு கோபம். ஸ்டெயின்ஸை மிரட்டினார்கள் , நீ உன் மருத்துவ சேவையை மட்டுமே பார் என்று ( அப்போதும் நாங்கள் சேவை செய்கிறோம் நீ வெளியே போ... ம்ம்ம் ஹூம் அது வராது ~ கர்ம வினை அல்லவா தொற்றிக் கொள்ளுமே)

ஸ்டெயின்ஸ் அதை பெரிது படுத்தவில்லை, அவர் வேலையை தொடர்ந்தார். உள்ளூர் மக்கள் அவர் பின் அரணாக நின்றதால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. அப்போதைய மாநில பஜ்ரங் தள தலைவர் ஒரு பிராமணர், அங்கே வந்தார், கூட்டம் போட்டார், ஸ்டெயின்ஸ் உயிர் உள்ள போதே வெளியேறாவிட்டால், பிணமாக அனுப்பி விடுவோம் என்றார். அப்போதும் அசரவில்லை ஸ்டெயின்ஸ், அவர்களுக்கு தான் செய்வது மருத்துவ சேவை, மதமாற்றம் நான் செய்வது இல்லை என்று விளக்கமும் சொன்னார். அப்புறம் சிறிது நாட்களில் சத்தம் அடங்கிப்போனது.

1999 இந்தியாவில் ஒரு மாற்றம். பா ஜ க முதன் முறையாக பதவி ஏற்றது. பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கு கொடுக்கு முளைத்தது.

ஸ்டெயின்ஸை அழிக்க அங்கே உள்ள பழங்குடி மக்களிடையே தன் விஷப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது பஜ்ரங்கிகள். அதனுள் ஒரு கூட்டத்தையும் கூட்டி சதி செய்தது. தாரா சிங் என்பவனுக்கு கொம்பு சீவி தயார் படுத்தியது (வரலாறு முழுவதும் இதே கதை தான். பிள்ளையார் பெயரால் கலவரம் செய்ய முதற்கொண்டு இவர்களுக்கு ஏவல் நாய்கள் சூத்திர , பஞ்சமர்கள் தானே!)

விடுமுறைக்கு வந்த தன் இரு மகன்கள் கூட ஒரு பிக்னிக் போவதாக சற்று ஊருக்கு வெளியே போய் காம்பிங் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்ஸ் மற்றும் அந்த இரு பிஞ்சுகளையும் மிருகத்தனமாக தாக்கின தாரசிங் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல்.
அவர்கள் மூவரையும் குற்றுயிராக போகும் வரை வேல் கம்புகளால் தாக்கி விட்டு அவர்கள் ஜீப்போடு சேர்த்து தீயிட்டு கொளுத்தின அந்த வெறி பிடித்த சங்கி கூட்டம் கொளுத்திய பின்னர் ஜெய் ஸ்ரீராம் , ஜெய் பஜ்ரங் பலி என்று கூச்சலிட்டு கொண்டாடி தீர்த்தன அந்த பாறை மன மத வெறி ஓநாய்கள். அந்த சத்தத்தில் அந்த பிஞ்சுகள் மரண வலியால் துடித்த கூக்குரல் கேட்கவே இல்லை.

நிற்க! நிகழ்காலத்துக்கு வருவோம்.



அந்த இரண்டாவது படத்தில் இருப்பது மஹாகணம் பொருந்திய அஹிம்சா மூர்த்தி மோடி மகானின் அமைச்சரவையில் சிறுதொழில் அமைச்சர், ஒரிஸ்ஸாவின் balasore தொகுதி MP,  பி சி சாரங்கி. சங்கீகள் ஆஹா ஓஹோ என்று அவர் எளிமையை கொண்டாடிக் கொண்டு உங்களை வசியம் செய்ய பார்க்கும் அதே மகான் தான்.
இவருக்கும் அந்த கொடூர மத வெறி கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? அன்னார் தான் அந்த பிராமண பஜ்ரங் தள தலைவர்.

தீவிரவாதிக்கு  பதவி கொடுத்து அழகு பார்ப்பது தானே புதிய ஹிந்தியா?

அந்த குழந்தைகளின் கூக்குரல் சத்தம் உங்களால் உணர முடியாது போனால், அன்னார் பதவி ஏற்பை ஒரு முறை கேட்டு விடுங்கள். அவை பின்னால் உங்கள் புலனுக்கு கேட்கும். அந்த படாடோப விழாவில் இருந்த சிவப்புக் கம்பளங்களின் சாயம் இயற்கை இரத்தம் கொண்டு நிறமூட்டப்பட்டதும் புரியும்.

இப்போது பெருமையுடன் சொல்லுங்கள்...
பாரத மாதா கி ஜெய்!

No comments: