எஸ்.வீ.சேகரும் சாதியவாதி தான், பாரதிராஜாவும் சாதியவாதி தான்.
பார்ப்பனியத்தின் நேரடி தாக்குதலுக்கு உள்ளானால் மட்டுமே பாரதி ராஜா போன்றவர்களுக்கு சுரணை சுடும். மற்ற நாளெல்லாம், பூணுல் அணிந்து சாதியத்தின் மொத்த உருவமாய் நிற்கும் சிறுவன் ஒரு இடைநிலை சாதிக்காரனை பார்த்து “பாலுங்கிறது உங்க பேரு, தேவர்ங்கிறது நீங்க வாங்கினா பட்டமா?” என்று வசனம் வைக்குமளவு தான் பாரதிராஜாவின் சமூகநீதி பார்வையின் அளவீடு.
சாதிக்குப் பிறந்தவர்கள் ஆணவக்கொலைகளை செய்துக்கொண்டிருந்த போது எங்கே போனது பாரதிராஜாவின் “வேல்கம்பு வீரம்” அறிக்கை?
பார்ப்பனிய சிந்தனாவாதத்தின் மொத்த அடியையும் இந்தியாவுல தலித்துகள் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதுக்கடுத்த படிநிலையில் யாரெல்லாம் இருக்கீங்களா, உங்க மேலையும் விழும். அதன் சாட்சி தான் பாரதிராசா எஸ்.வீ சேகர் சண்டையெல்லாம்.
இதை தெரிஞ்சும் falooda மேல nuts போட்ட மாதிரி சாதியத்தை நக்கித்தின்னா நாளைக்கு அது உன்னையும் நக்கிட்டு போயிடும்.
அதே சமயம், பொருத்தமான சமயத்தில் பாரதிராஜா பார்ப்பனீயத்தை சாடும்போது அதை வேற்றுக்கருத்து மறந்து ஆதரிப்பதுதான் சரி. பார்ப்பனீயத்தை யார் அடிக்கிறார்கள் என்பதைவிட எப்போது அடிக்கிறார்கள் என்பதை ஆராய்வதும் அவசியம்.
No comments:
Post a Comment