Friday, January 19, 2018

பாப்பாத்தி போஸ்ட் போட்டா பாப்பாத்திதானே சப்போர்ட்டுக்கு வருவா

#அந்த_பதிவு//ஒரு பாப்பாத்தி போஸ்ட் போட்டா பாப்பாத்திதானே சப்போர்ட்டுக்கு வருவா. பின்ன என்ன தலித்து தண்டங்களும், சக்கிலிய சனியங்களுமா வரும்//
இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கனும். தலித்துகள் வராத தண்டமா இருக்கிறார்களே.. சக்கிலியர்கள் வராத சனியனுங்களா இருக்கிறார்களே என்ற ஏக்கத்திலிருந்து இந்த கோபம் பிறந்திருக்கிறது என நினைக்கிறேன்.
#அந்த_பதிவு//100% கொடுத்தாலும், முன்னாடி வராம பன்னி சாக்கடையில பொரள்ற மாதிரி பொரண்டுகிட்டே இருக்கக்கூடிய மட சாம்பிராணிங்களுக்கு என்ன ஒதுக்கீடு பத்தி கவல?
உனக்கு உழைக்க புத்தியும் இல்ல வக்கும் இல்லனு....//
இந்த வரிகளை இன்னும் கவனிக்கனும். 18% தலித்துகளுக்கு 18% தான் இட ஒதுக்கீடு தராங்க என்பது நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா 100% கொடுத்தாலும் சாக்கடையில பொரள்ற மாதிரி பொரண்டுகிட்டு இருக்கிற பன்னிங்க என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அப்போ இவங்க இட ஒதுக்கீடை பத்தி பேசலை போல.
வேறென்ன... இவங்க 100% எதை கொடுத்தாங்க? எதை நாம பயன்படுத்திக்காம சும்மா பொரண்டுட்டு வந்துட்டோம் என்று புரியலையே. அது மட்டுமில்லாம போற போக்குல அவங்க விஷ்னுவுடைய அவதாரமான பன்னியை நம்மோடு செல்லமா ஒப்பிட்டும் பேசுறாங்க.
அடுத்தகட்டமா உழைக்க புத்தியும் இல்லை வக்கும் இல்லைனு உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்துறாங்க பாருங்க.
உலகத்துக்கே தெரியும், இங்கே இருக்கிற காடு கழனியெல்லாம் யார் உழைப்பில் மேம்பட்டு இருக்கு, யார் உழைப்பை குறைந்த கூலிக்கு இந்த சமூகம் சுரண்டுகிறது என்பது..
இவ்ளோ உலக விபரம் தெரிந்த இவங்களுக்கு அதெல்லாம் தெரியாதா என்ன? அப்புறம் ஏன் உழைக்க புத்தியும் இல்ல வக்கும் இல்லைனு சொல்றாங்கனு சின்னப்புள்ளத்தனமா கேக்கக்கூடாது.
அடேய்.. எவனாயிருந்தாலும் சொல்லிட்டேன். பேரை கெடுத்துக்காம புத்தியோட, வக்கோட உழைப்பை வெளிப்படுத்தனும் ஆமா...
பி.கு: என்ன இப்படினு யாரும் கேட்ராதீங்க.. நாயிக்கெல்லாம் சொல்லு பத்தாது. கல்லுதான் வேணும். அதுவும் அது வெறிநாய். சாதி வெறிநாய்..

No comments: