Thursday, January 18, 2018

சேரி மாதிரி உழைத்து வாழ யோசியுங்கள்- சந்நியாசினிகளே

உங்களை மாதிரி- சேரி மாதிரி யோசிக்கிற பழக்கம் எங்களுக்கு கிடையாது- நித்தியின் சிஷ்யை
---------------------------------------------------------------------------
அதென்னடா எதற்கெடுத்தாலும் சேரி யை
இழுக்கிறீர்கள்??கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
சேரிகாரரல்லவே-அவர் ஆண்டாளை இழிவுபடுத்தினார் என்றால்-அவரை பிடித்து முடிந்தால் நொட்டி காட்டுங்கள்--
-
-சேரி மாதிரி நீங்கள் யோசித்திருந்தால்- உங்களிடம் நல்ல சிந்தனைகள்-நல்ல எண்ணங்கள் வந்திருக்கு மே-சந்நியாசினி ஆகியிருக்க மாட்டீர்களே-
-
உழைக்காமல் ஊரை ஏமாற்றி அடுத்தவன் உழைப்பில் அவன் தரும்காணிக்கை பிச்சையில்- தர்மத்தில் பிழைப்பவன்தான்-சோம்பேறி தான்- சந்நியாசி ஆவான் - சாமியார் ஆவான்-உழைக்க மனமற்ற- கையாலாகாதவன் தான்- கயவன் தான்- பிர்ச்னைகளை வெல்ல முயற்சிப்பதே வாழ்க்கை- அந்த வாழ்க்கை பிரச்னைகளை
எதிர் கொள்ள வக்கற்றவனே-பயந்தாங்கொள்ளியே -கோழையே பயந்து சாமியார் ஆவான் சந்நியாசி(னி) ஆவான்-
-
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த- உழைத்து நேர்மையாக வாழும் சேரிமக்களை பார்த்து திருந்துங்கள் சந்நியாசினிகளே--இனியாவது இல்லாத கடவுளை வைத்து பிலிம்காட்டாமல்-யாசித்து வாழாமல்-ஊரை ஏய்க்காமல் சேரி மக்களை போல உழைத்து துணிச்சலாக வாழ யோசியுங்கள்--
--
எவரையும் ஏய்க்காமல்- எவர் உழைப்பையும் சுரண்டாமல்
எவனையும் வஞ்சிக்காமல் நேர்மையாக உழைத்து வாழுபவனே நல்ல மனிதன்-அந்த நல்ல மனிதர்கள் வாழுமிடமே இந்திய சேரிகள்- நல்ல மனிதனாக - மாற- வாழ இனியாவது சேரி மாதிரி உழைத்து வாழ யோசியுங்கள்- சந்நியாசினிகளே

No comments: