Thursday, January 18, 2018

நாச்சியார் திருமொழி - பக்தி சாயம் பூசி மறைக்கப்பட்ட அழகான ரொமான்டிக் இலக்கியம்

நாச்சியார் திருமொழி....
ஆண்டாள்னு ஒருத்தவங்க ஏழாம் நூற்றாண்டுல வாழ்ந்தாங்களா இல்ல அது பெரியாழ்வாரோட கற்பனையானு தெரியல....
ஏன்னா அவங்க எழுதுன பக்தி இலக்கியம். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் ஒரு பெண் வெளிப்படையாக பேச தயங்கும் விசயங்களை தன் காதலை, தன் காதலன் மீது கொண்ட புணர்ச்சி எண்ணங்களை ஆசைகளை நாச்சியார் திருமொழியில் அவ்ளோ அழகா எழுதிருப்பாங்க...
ஒரு கடவுளை காதலிக்கலாம். திருமணம் செய்யலாம். கற்பனையில் மோகம் கொள்ளலாம். அதை இலக்கியமாக வடிக்கலாம். அதை பக்தி இலக்கியமாக இந்த சமூகம் போற்றும். வணங்கும்.ஆனால் சக மானுடன் மீது காதல் வந்தால் அது குற்றம். இங்கு மட்டும் சாதி குலம் வர்ணம் மதம் என அனைத்தும் வேண்டும்.....
பக்தி சாயம் பூசி மறைக்கப்பட்ட அழகான ரொமான்டிக் இலக்கியம் நாச்சியார் திருமொழி....

No comments: